துலாம் ராசி குணங்கள்
எல்லோரையும் ஒத்து போகும் குணமும், தோற்றத்தில் சிறியவர்களானாலும், பிறரை எளிதில் புரிந்து கொள்ளும் சாமர்த்தியமும் படைத்தவர்கள். பொது ஜன தொடர்பளர். எந்த ஒரு காரியத்தையும் துரிதமாக செய்யகூடிய மனப்பான்மையில் இருப்பவர்கள். எங்கும் வேகம். எதிலும் வேகம். அதனால் எந்த ஒரு முடிவும் இவர்களுடைய சுய முடிவாகத்தான் இருக்கும். வெளிப்படையாய் பேசினாலும் வெகுளி அல்ல. கண்டிப்பாய் பேசினாலும் முரட்டுத்தனம் இல்லை. பேசும் பேச்சிலும் செய்யும் செயலிலும் என்ன முடிவு வரும் என்பதை பற்றி கவலை படமாட்டார்கள். ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள்,கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள் யாரையும் வாழ்த்தவில்லை என்றாலும் வீழ்த்த நினைப்பதில்லை. அதனால் ஊர் நிறைய உறவு கூட்டம் இருக்கும். பேச்சில் இனிமை, வார்த்தைகளில் லாவகம் இருப்பதால் எதிரிகள் கூட எளிதில் வசப்படுவதுஉண்டு .புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், இருக்கும் வரை அனுபவிப்போம் என்று நினைக்க கூடியவர்கள். சொகுசான வாழ்க்கை வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களால் தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்கு கெட்டவர்கள். உற்ற உறவுகளே குற்றவாளி ஆனாலும் சுற்றம் என்று பார்ப்பதில்லை. குற்றம் குற்றம்தான் என்று வாதிடும் நீதிமான்கள் இவர்கள். நீதியையும் நேர்மையையும் நிலை நாட்ட வேண்டுமென்பதை இலட்சியமாக கொண்டவர்கள் இவர்கள். நேர்மையே குறிக்கோளாகக் கொண்ட இவர்கள் பிறர் நெறி தவறும்போது வீறுகொண்டு கோபம் கொள்வர். பெரிசாய் கற்பனை செய்து சின்னதாய் நடப்பதை விட, சின்னதாய் கற்பனை செய்து பெரிசாய் நடந்தால் சந்தோசம், இது இவர்களின் அடிப்படை குணம். மற்றவர்களிடம் அவ்வளவு சுலபமாக ஏமாற மாட்டார்கள். காலம் வரும் வரை காத்திருப்பது இவர்களுக்கு பிடிக்காது. பேராசை பெரும் நஷ்டம் என்பதை உணர்ந்தவர்கள். சாத்தியமானது எதுவோ .... அது இவர்கள் சாய்ஸ். எதிலும் நியாயத்தை பெற போராடுபவர்கள்.வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசுவபர்கள்.கட்டுப்பாடு உடையவர்கள். தோல்வியை கண்டு துவளாதவர் சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,23 பாதங்களிலும் பிறந்தவர்கள் துலாராசிக்காரராக இருப்பார்கள். இவையனைத்தும் துலாம் ராசிக்கான பொது பலன்கள்

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |