menu

Friday, 10 July 2015

மேஷம் ( மேசம் )

மேசம் \ மேஷம் ராசிக்கான குணங்கள்
          இவர்களது உள்ளங்கை பெரியதாக இருக்கும். கை விரல்கள் தடித்தும், சற்று நீண்டும் இருக்கும். தலையில் தழும்பு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு முகத்தில் மச்சம் இருக்கலாம்.உடல் அதிக வெப்பமாக இருக்கும். குறிக்கோள் மிக்கவர், அவசரக்காரர். ஒழுக்கமானவர், அமைதியானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார்.  இரக்ககுணம் உடையவராக இருப்பார், நட்புடன் பேசுபவர், நம்பிக்கையாளர், வெற்றியாளர், சதனையளர், அழகனவர், அதிர்ஸ்டசாலி, மற்றவரை மகிழ்விப்பவர், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்.தைரியமானவர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவதில் வல்லவர்கள். மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக காரியம் செய்யமாட்டார்கள். பிரதிபலன் எதிர்பார்த்து காரியம் செய்யமாட்டார்கள். எதையும் நேரிடையாக பேசும் இயல்புடையவர்.  மேஷ ராசிக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை நட்பாகவும்,கடகம் விருச்சிகம், மீனம் பகையாகவும், ரிஷபம், கன்னி, மகரம் சமமாகவும் அமைகின்றன. அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் மேஷ ராசிகாரர்களாக கருதப்படுவார்கள். செவ்வாய்க்கிழமை இவர்களுக்கு ஏற்றது. ஞாயிற்றுக் கிழமையும், புதன் கிழமையும் இவர்களுக்கு உகந்ததே. இவையனைத்தும் மேஷ ராசிக்கான பொதுப்பலன்கள்.  
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
1. ரிஷபம் ராசி குணங்கள் 2. மிதுனம் ராசி குணங்கள் 3. கடகம் ராசி குணங்கள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற