menu

Wednesday, 15 July 2015

ரஜினி - நடிகர் ரஜினிகாந்த் - ஜாதகம்

ரஜினி காந்த் ஜாதகம்
இணைய தளங்களில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் இந்த ஜாதகம் போடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த் அவர்கள். இந்திய திரைப்படத் துறையில் இவர் ஒரு புகழ்பெற்ற நடிகர். தமிழ், தெலுங்கு,  கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 4மிடத்துக்குரிய செவ்வாய் ஆறாமிடம் சென்றதும் அதனுடன் விரய ஸ்தான அதிபதி கூடியதும். சிறு வயதிலேயே தாயை இழக்கும் நிலையை ரஜனிக்கு தந்தது. தன்னுடைய ஐந்தாவது வயதில், தாயை இழந்த ரஜினிகாந்த் அவர்கள், பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்”  பள்ளிப்படிப்பை முடித்தார். உச்சம் பெற்ற செவ்வாய் 6ல் இருக்கின்ற காரணத்தினால் எதிரிகளை துணிச்சலுடன் வெல்லும் ஆற்றலை தரும். கூடவே இருக்கின்ற சந்திரன் மிகவும் துணிச்சலான மனசை தரும். இதனால் சிறு வயதிலேயே பயம் இல்லாதவாராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார். 2மிடத்துக்குரிய புதனுடன் சுக்கிரன் சேர்ந்து அறிவு புத்திஸ்தானமாகிய 5ல் இருந்ததால் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால், நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். நட்பு ஸ்தானம்7ல் இருந்த குருவின் காரணமாக ஒரு நல்ல நண்பரின் உதவியோடு “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார்.

தொழிலில் அவர் வெற்றி மேல் வெற்றி பெறக் காரணங்கள்

வேகத்துக்குரியோன் சூரியன் லக்னத்துக்குரியோனும் ஆகி  வீரத்துக்குரியோன் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை செய்து தொழில் சிறக்க காரணமாகிறது.

கபாலி,படப்படிப்பு,இயக்குனர்,ரஞ்சித்,ரஜினி,ரஜினி காந்த்
ரஜினிகாந்த்

லாபம்! லாபம்! லாபத்துக்கும் மேல் லாபம்!

1.சனி - தனஸ்தானத்தில் இருக்கும் சனியும் லாபஸதானத்தையே பார்கிறது.

2. குரு- தனத்துக்கு சொந்தக்காரனான குருவும் லாப ஸ்தானத்தையே பார்கிறது.

3. சந்திரன்- சந்திரன் 6க்கு  போய் விபரீத ராஜ யோகத்தை தருகிறது. அந்த சந்திரனுடன் உச்சம் பெற்ற செவ்வாய் சேர்ந்தது மேலும் சிறப்பாகிறது. இவர்கள் இருக்கும் வீட்டின் அதிபதியும் லாப ஸ்தானத்தையே பார்கிறது


4. புதன்- லாப ஸ்தானத்தை பார்கிறது

5. சுக்ரன் - லாப ஸ்தானத்தை பார்கிறது

6. செவ்வாய்- இது இருக்கும் வீட்டின் அதிபதி லாப ஸ்தானத்தை பார்கிறது

7. கேது- இது சேர்ந்திருக்கும் சனியும் லாபஸ்தானத்தை பார்கிறது. இது      இருக்கும் வீட்டின் அதிபதியும் லாப ஸ்தானத்தை பார்கிறது

8. ராகு - இது இருக்கும் வீட்டின் அதிபதியும் லாப ஸ்தானத்தை பார்கிறது

9. சூரியன்- இவரே லக்னா அதிபதி ஆகியும் தொழில் ஸ்தானத்தை பார்கிறார். இவர் இருந்த வீட்டின் அதிபதியோ லாபத்துக்கு லாபஸ்தானத்தைப் பார்கிறார்  (11க்கு 11யை)

இப்படி நவக்கிரகம் ங்களும் லாபஸ்தானத்துடன் தொடர்பு கொள்கிறார்கள். லாபஸ்தானமே அதிர்ஷ்டதானமும் ஆகும்.

அதிர்ஷ்டம்! அதிர்ஷ்டம்! -  அதிர்ஷ்டத்துக்கும் மேல் அதிர்ஸ்டம்!

6ல் இருக்கும் செவ்வாய் லக்னத்தை பார்வை செய்கிற காரணத்தால் “சுள்ளென்று கோபம் சல்லென்று” சீறிவர.  அப்புறம்  “சில்”லென்று ஆறிவிடும்.  காரணம் சந்திரன் அந்த செவ்வாயுடன சேர்கை பெற்று இருக்கிறார். சீறி வரும் கோவத்திற்கும் அது ஆறிபோகும் நேரத்துக்கும் இடைப்பட்ட நேரத்தில்  அவர்படும் மன வேதனைகள் அவர்மட்டுமே அறிவார். லக்னாதிபதியும் கோபம், ரோஷக்காரரான செவ்வாய்யின் வீட்டிலேயே இருக்கிறார். 6மிடம்,7மிடம் இரண்டுக்கும் அதிபதியான சனியே 8மிடமும் பார்கிற காரணத்தினால்லும் அவரது நண்பர்களிலே எதிரிகளும் உண்டு. அந்த எதிரிகளான நண்பர்கள் ரஜினிகாந்தை கடும் அவமானத்திற்குள்ளாக செய்ததும் உண்டு. அந்த சனியுடன் கேதுவும் சேர்ந்து இருக்கிற காரணத்தினால் அவருக்கு பல கெடுதல்களை செய்யும் நண்பர்களும் அமைந்திருப்பார்கள். அந்த கெடுதல் நண்பர்களாலேயே  அவருக்கு மரணத்துக்குச் சமமான துன்பங்களும் அவமானங்களும் நேர்ந்திருக்கும். அடுத்து  8க்குரிய குரு 7ல் இருக்கிற காரணத்தினால்  ரஜினி சாரை பார்த்து “ இவ்வாறு செய்வது உங்களுக்கு அவமானம் நேரும் அதனால் இப்படி செய்யக்கூடாது” என்று அறிவுரை கூறும் நல்ல நண்பர்களும் அமைந்திருப்பார்கள்.

பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானத்துக்கும் அதிபதி குரு. அவரே நீதிக்கும் அதிபதி. அந்த குரு 7ல் அமர்ந்து 11ஆகிய ஆசை ஸ்தானத்தையும் பார்வை செய்கிறது. எனவே நீதி நேர்மை நாட்டில் நன்கு இருக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு உண்டு. அந்த ஆசையின் வெளிப்பாடாகவே அவர் “உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் நினைவு கீழ்கண்டவாறு பேசியுள்ளார். தபால்தலை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்குரைஞர்கள் நிறைந்திருந்த சபையில் ரஜினிகாந்த் பேசும்போது, "நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது' என்று பேசியுள்ளார்”.

கால சர்ப்ப தோஷம்
ரஜினி காந்த் ஜாதகத்தில் அனைத்து கிரஹங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் சிக்கி விட்டன. எனவே அவருக்கு இளமைக் காலத்தில் நற்பலன்கள் கிடைக்க தடைகள் இருந்தன. அவர் கண்டக்டருக்கு முன் எப்படி இருந்தார் என்பதை எஸ.பி. முத்துராமன் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ரஜினிகாந்த் கண்டக்டர் வேலை செய்து கொண்டிருந்தார் என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். உண்மையில் ரஜினி கண்டக்டர் வேலைக்கு முன் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இதை அவரே என்னிடம் சொன்னார். ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்தபோது, அவர் நடிக்க வேண்டிய காட்சியை முடித்து விட்டு, அரிசி ஆலையில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மீது படுத்து தூங்கிவிட்டார்.

இதற்கிடையே வேறொரு காட்சி எடுத்து முடித்து விட்டு ரஜினி நடிக்க வேண்டிய காட்சிக்காக தேடியபோது, அவர் நெல் மூட்டை மீது தூங்குவதை அறிந்து எழுப்பினேன். நெல் மூட்டை மீது படுத்தால் உடம்பு அரிக்காதா? என கேட்டேன். அதற்கு அவர், நான் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்தேன், அதனால் எனக்கு உடம்பு அரிப்பெல்லாம் பழக்கமாகி விட்டது என கூலாக சொன்னார்" என்றார். 

ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=18521&id1=3#sthash.wcwf63DX.dpuf
 கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் அனைவருமே 36 வயதுக்குமேல் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம். வேறு கிரகங்களும் யோக நிலைக்கு சாதகமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற முடியும்! தொடரும்...
ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=18521&id1=3#sthash.wcwf63DX.dpuf
ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=18521&id1=3#sthash.wcwf63DX.dpuf
ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=18521&id1=3#sthash.wcwf63DX.dpuf
ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறினார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=18521&id1=3#sthash.wcwf63DX.dpuf
 ரஜினி - நடிகர் ரஜினிகாந்த் - ஜாதகம் - நடிகர் ரஜினிகாந்த் ஜாதகம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற