menu

Thursday 16 August 2012

சுப முகூர்த்த நாட்கள்

திருமணத்திற்கு முகூர்த்த நேரம் குறிப்பது எப்படி?


 முகூர்த்தம் என்பது மூனே முக்கால் நாழிகை( ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்).வரன்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமைந்தால் அந்தக் குறைகள் காணாமல் போய்விடும்.குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களுக்கு வரும்போது குரு பலம் ஏற்படும்.திருமணத்திற்கு ஒருவருக்கு குருபலமோ,விதியோ இருந்தால் போதுமானது.மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாதிருக்கும்பொழுது  இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்யலாம். வைகாசி, ஆனி, ஆவணி மற்றும் தை, ,பங்குனி மாதங்ளை தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள் சிறப்பானது. இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் சிறந்தது. ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு,திங்கள் பாதி சிறந்தது. குருட்டு நாட்களான செவ்வாய், சனியை தவிர்ப்பது நல்லது.அக்னி ராசிகளான சிம்மம், மேசம் முகூர்த்த லக்னமாக இல்லாமல் இருப்பது சிறப்பானது.முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருந்தால் நல்ல கணவன் மனைவி அமையும். எட்டாம் இடம் சுத்தமாக இருப்பின் நீடித்த திருமணபந்தம் அமையும். 12ம் இடம் சந்தோஷத்தை குறிக்கும். ஆக 2,7,8ம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாம். இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
 
திருமணத்திற்கு முகூர்த்த நேரம் குறிப்பது எப்படி?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற