அகால மரணம் யாருக்கு?
ஆயுளை தீர்மானிக்கும் சனி எங்கிருக்கிறது என்று காண வேண்டும். ஆயுள் ஸ்தானம் 8ம் இடம் எப்படி வலிமை பெற்று இருக்கிறது என்று காண வேண்டும். இவைகள் பலம் குறைந்து அத்துடன் ராகு, கேது இருந்தால் திடீரென மரணத்தை உண்டுபண்ணும். ஓரளவு பலம் இருந்தால் மத்திம வயது. நன்கு பலமாக இருந்தால் தீர்க்க ஆயுள். பிரபல ஹாலிவுட் நடிகர் பால்வால்கர் ஜாதகம் காணுங்கள் (accident paul walker)
Paul Walker's Car Acciden-நடிகர் பால்வாக்கர் ஜாதகம்

கார்திக் ஜோதிடம் - பால்வாக்கர் ஜாதகம் |
லக்னாதிபதி பலம் பெறுகிறார் புதன் ஆட்சியாக. அவரே 10க்கும் அதிபதி எனவே தொழிலில் வெற்றி பெற்றார். பிரபல நடிகராகவும் ஆனார்.
கலைக்கான சுக்ரனும் பலம் அதிகம்.அதுவே பாக்கிய ஸ்தானத்துக்கும் அதிபதி எனவே கலைக்குரிய சினிமாவை தேர்ந்தெடுத்தார். ஆயுள் ஸ்தான அதிபதி செவ்வாயும் ஆட்சியாக ஆனாலும் மரணம் ஏன்?
பூர்வஜென்ம புண்ணிய ஸ்தான அதிபதியும் ஆயுள்காரனுமாகிய சனி பலம் அடையவில்லை ராகு கேதுவிடம் சிக்கிக்கொண்டது. பூர்வஜென்ம ஸ்தானத்தில் குரு நீசமாகியது. விபத்து உருவாக்கும் செவ்வாயே ஆயுள் ஸ்தானத்தில் இருக்கிறது. கன்னி லக்கினத்துக்கு குருவும் செவ்வாயும் மரணம் தருவதில் வல்லவர்கள். அதன்படி 4க்குரிய வாகனத்துக்குரிய குரு நீசமாக உள்ளது. அந்த குருவே 7மிடத்துக்கு அதிபதியும் ஆனதால் நண்பரையும் குறிக்கும். 7க்குரியோன் புத்தி ஸ்தானத்துக்கு அதிபதி சந்திரன் ஆக இருக்கிறது. அவர் லக்னத்துக்கு 6ல் எதிரியாக இருக்கிறது. அந்த சந்திரனே நண்பருக்கு மனசுக்காரனும் ஆவார். எனவே நண்பர் கார் ஓட்டும்போது அவருக்கு புத்திக்கும் மனசுக்கும் காரணகர்த்தாவான சந்திரனுக்கு அதி வேகத்துக்குரியோன் சூரியன் பார்வை உள்ளதால் வேகமாக கார் ஓட்டும் புத்தியை தந்தது. அந்த நண்பர் ஏற்கனவே கார் பந்தய வீரர். எனவே கார் ஓட்டும் வேகமும் துடிப்பும் எப்படி இருக்கும் என்பதை நம்மால் உணர முடியும். மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்ட்ட ரோட்டில் மணிக்கு 160கிமீ வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறார்கள். இதுவே மரணத்துக்கு காரணமாகியது. 6மிடத்து அதிபதி சனி ஆக இருக்கின்ற காரணத்தினால் அவருக்கு கை எழும்பு இடுப்பு எழும்பு ஒடைய காரணமாக இருந்தது. வேகம் வேகம் வேகம் மட்டுமே காரணம் என்று விபத்துக்கான விசாரனை அறிக்கையும் சொல்லிவிட்டது. இப்படிப்பட்ட அசுர வேகத்தை தந்தது விரயாதிபதிக்கான சூரியனே ஆவார்.