menu

Thursday, 23 July 2015

ரஜினி, விஜய், அஜித், சூர்யா போல சினிமாவில் புகழ் பெறக்கூடியவர் யார்?

ரஜினி விஜய் அஜித் சூர்யா போல சினிமாவில் புகழ் பெறக்கூடியவர் யார்?

புதன் நன்றாக இருந்தால் கணக்கு பண்ணுவதில் கில்லாடி. அறிவாளி.
விவேகம் உள்ளவர். விஷயம் உள்ளவர் என பெயரெடுப்பவர்.
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை உள்ளவர். 10க்குரியோன் 
புதனுடன் எப்படி சம்பந்தப்படுகிறார் என்று பார்க்க வேண்டும்.புதன் பலமானால் வேடிக்கையாலும் நகைசுவையாலும் விவேகத்தாலும் நீண்ட வசனங்களாலும் சிறந்த நடனத்தாலும் சினிமா துறைகளில் பிரகாசிக்க முடியும்.

சந்திரன் துணிச்சலான திடமான மனசுக்கும் கற்பனைக்கும்
சொந்தக்காரர். ஆட்சி உச்சம்  கேந்திரம் திரிகோணம் என இவர் பலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

அழகு கவர்ச்சி ஈர்ப்பு ஆகியவற்றிற்கு சொந்தமான சுக்ரனின் நிலை என்ன என்று பார்க்க வேண்டும். இந்த பலம்தான் நடிகைக்கும், நடிகருக்கும் அவசியம்.  இது நன்றாக இருந்தால்தான் ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்கள் எது எதுவோ அதுஅது எல்லாம் சிறப்பாக நடிகர் நடிகைகளுக்கு இருக்கும். ஆகவே சுக்ர பலத்தால் நடிப்பு கலைகளாலும் ஈர்ப்பு சக்தியாலும் மக்கள் உணர்சிகளை சுண்டியிழுக்க முடியும்.

சனியும் சுக்கிரனும் சம்பந்தப்பட்டு ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால் பாட்டாளி வர்கத்தினரை உழைக்கும் வர்கத்தினரை தன் ரசிகராக தக்கவைக்க முடியும். இந்த அமைப்பு நடிகர் விஜய்க்கு இருக்கிறது. நடிகர் சூர்யாவுக்கும் கடக ராசியில் சனியும் சூரியனும் சேர்ந்திருக்க சூரியனின் வீட்டில் சுக்ரன் இருக்கிறது. ஹன்சிகா ஜாதகத்தில் சூரியன்,குரு சந்திரனின் கூட்டணி சனியின் பார்வை பெற்று இருக்க அந்த சூரியனின் வீட்டில் புதன் செவ்வாய் சுக்ரன் கூட்டணி உள்ளது, அஜித் ஜாதகத்தில் புதன் சுக்ரன் குருவின் வீட்டில் இருக்க அந்த வீட்டின் அதிபதி சனி பார்வை பெறுகிறது. சரத்குமார் ஜாதகத்தினல் நான்கில் சந்திரன் செவ்வாய் ராகு இருக்க அதை குரு புதன் சூரியன் கேது சனி பார்வையிடுகிறது.

ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம்,மகரம்,கும்பம்,மீன ராசி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில்  புதன்,சுக்கிரன் சேர்ந்திருந்தாலும் அவர் கலைஞர் தான். ரஜினிக்கு இப்படி அமைப்பு இருப்பதை கீழே உள்ள ஜாதகத்தில் காணவும்

 புதன்,சுக்கிரன்,சந்திரன் ஏழில் இருந்தால் அவர் மிக சிறந்த கலைஞர் எனலாம்..அல்லது இவர்கள் இணைந்து ஏழாமிடத்தை பார்க்கலாம்.

சுக்ரன் குரு ராகு சந்திரன் இவர்ளின் கூட்டணி கலைகளுக்கு ராஜாவாகலாம். இந்த அமைப்பு இளையராஜா ஜாதகத்தில் உள்ளது. சந்திரன் வீடான கடகத்தில் சுக்ரன் குரு ராகு உள்ளது. கலைக்குரியோன் சுக்ரன் நல்ல நிலைமையில் இருந்து மற்ற கிரகங்களும் சாதகமாக இருந்தால் மட்டுமே சினிமாவில் புகழ் பெற முடியும். அந்த சாதகமான இடம் 11க்கு சம்பந்தப்பட்டால் மட்டுமே நிறைய லாபம் பெற முடியும். அப்படியில்லாமல் அந்த அமைப்பு 12க்கு சம்பந்தப்பட்டால் புகழ் மட்டுமே பெறமுடியும். கூடவே நஷ்டமும் அடைய நேரிடும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற