menu

Wednesday 1 July 2015

குரு வேறு - தட்சிணா மூர்த்தி வேறு. இரண்டும் ஒன்று அல்ல

 தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் - கார்திக் ஜோதிடம்
தெட்சிணாமூர்த்தி வேறு - குரு பகவான் வேறு!

தெட்சிணாமூர்த்தி என்பவர் வேறு. குரு பகவான் என்பவர் வேறு. இருவரும் ஒருவரல்ல. ஆனால் நிறைய பேர் தெட்சிணாமூர்த்தியும் குரு பகவானும் ஒருவர்தான் என்று நினைத்துக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள்.

சில ஆலயங்களில் தெட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள். அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தெட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

குருப்பெயர்ச்சியன்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், சாந்தி பரிகாரங்களை செய்கிறார்கள். இவையெல்லாம் தவறு என்று ஆன்மீக பெரியவர்கள் சொல்கிறார்கள். என்றாலும் தட்சிணா மூர்த்தியும் குருவும் ஒன்றே என்று பலரும் வாதிடுகிறார்கள்.

தட்சிணாமூர்த்தி என்பவர் சிவன் வடிவம்.  குரு பகவான் என்பவர் கிரக வடிவம்.  64 சிவவடிவங்களில் ஒருவரே த்ட்சிணா மூர்த்தி, குரு என்பவர் பிரகஸ்பதி.  தட்சிணாமூர்த்தி என்பவர் ஒரு முதலாளி என்றால், குரு என்பவர் ஒரு அதிகாரி ஆவார். தட்சிணாமூர்த்தி என்பது சிவகுரு, குருவோ தேவகுரு.  கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர் தட்சிணா மூர்த்தி ஆவார். குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப பலாபலன்களை தருபவர். ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர் இந்த குரு. இந்த குரு உதயமாகுதல் அஸ்தமனமாகுதல் தன்மைகளை உடையவர். சிவனுக்கு இந்த தன்மையெல்லாம் கிடையாது. இத்தனை வேறுபாடுகள் இருந்தும் மக்கள் இவர்தான் அவர் என்றும் அவர்தான் இவர் என்றும் வழிபடுகிறார்கள்.

குருபகவான் என்பவர் தேவகுரு மட்டுமே. ஆனால் தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குரு ஆக இருக்கிறார். அதனால் குருவுக்குச் செய்வதை இவருக்குச் செய்வதில் தவறில்லை என்று சொல்பவர்களும் இவ்வுலகில் உண்டு.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற