விக்ரம் - நடிகர் விக்ரம் - சியான் விக்ரம் - ஜாதகம் - யோகம்
இவருடைய இயற்பெயர் விக்ரம் கென்னெடி வினோத் ராஜ் என்பதாகும். இவருடைய அம்மா, ஒரு சப்-கலெக்டர் மற்றும் புகழ்பெற்ற நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்களின் சகோதரியும் கூட. அவரது மகனான நடிகர் பிரசாந்த், விக்ரமின் நெருங்கிய உறவினராவார்.
. ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார். லக்னாதிபதி 10மிட குருவோடு பரிவர்த்தனை பெற்ற காரணத்தினால் இவர் இவ்வாறு பெயரும் புகழும் பெற்றார்.
தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த இவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கற்பனைக்குரியோன் சந்திரனும் கலைக்குரியோன் சுக்ரனும் இணைந்து சனியின் வீட்டில் (9) இருக்கின்ற காரணத்தினால் உழைக்கும் மக்களின் மாபெரும் ஆதரவைப் பெற்றார். அந்த சனியோ பத்தில் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்கின்ற காரணத்தினால் அந்த மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். அந்த கலைக்குரிய சுகரனின் 12வது வீட்டில் ராகு அமையப் பெற்றதால் வித்தியாசமான வடிவம் உடைய முகபாவனையிலும் அவர் பெரும் துயரத்துடன் (துன்பத்துடனும்) நடிக்கும் சூழல் அமைந்தது.
2மிட சந்திரன் சுக்ரனுடன் சேர்ந்த காரணத்தினால் பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். 9மிடத்திலே சுக்ரனும் சந்திரனும் அமையப்பெற்றதாலும் அந்த 9மிடத்து அதிபதி 10லே லக்னத்துடன் அமைய்ப் பெற்றதாலும் மக்களின் நலனுக்காகப் பல சமூக நலத் தொண்டுகளைத் தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வருகிறார். ‘சஞ்சீவனி டிரஸ்ட்’ மற்றும் ‘வித்யா சுதா’ ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகிறார்.
நோய் தரும் கேது விபத்துக்கான செவ்வாயின் வீட்டில் இருந்த காரணத்தால் கல்லூரிக்குத் தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி 23 அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மூன்றாண்டுகள் படுக்கையிலே இருந்தார்.
7க்குரிய குரு லக்னத்தில் அமைந்தது அவருக்கு சிறப்பான நற்குணம் வாய்ந்த மனைவி அமையக் காரணமாக இருந்தது. அந்த குருவும் , 5மிட சுக்ரன் 9ல் சந்திரனுடன் சேர்ந்திருக்க அதை குரு பார்வையிட ஒரு மகனும் (தருவ்) மகளும் (அக்ஷிதா) பிறந்தனர்.
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1990 | என் காதல் கண்மணி | வினோத் | தமிழ் | |
1991 | தந்துவிட்டேன் என்னை | ராஜு | தமிழ் | |
1992 | காவல் கீதம் | அசோக் | தமிழ் | |
மீரா | ஜீவா | தமிழ் | ||
1993 | துருவம் | பத்ரன் | மலையாளம் | |
சிருநவ்வுலா வரமிஸ்தாவா | தெலுங்கு | |||
மாஃபியா | ஹரி ஷங்கர் | மலையாளம் | ||
1994 | சைன்யம் | கேடட் ஜீஜி | மலையாளம் | |
பங்காரு குடும்பம் | தெலுங்கு | |||
புதிய மன்னர்கள் | சத்யமூர்த்தி | தமிழ் | ||
1995 | ஸ்ட்ரீட் | மலையாளம் | ||
அடல்லா மாஜகா | தெலுங்கு | |||
1996 | மயூர ந்ரிடம் | மலையாளம் | ||
ஊஹா | மோகன் | தெலுங்கு | ||
அக்கா பாகுன்னாவா | தெலுங்கு | |||
மெருபு | தெலுங்கு | |||
இந்திரப்ரஸ்தம் | பீட்டர் | மலையாளம் | ||
ராசபுத்திரன் | மனு | மலையாளம் | ||
1997 | இது ஒரு சிநேஹகதா | ராய் | மலையாளம் | |
உல்லாசம் | தேவ் | தமிழ் | ||
குரல்ல ராஜ்ஜியம் | தெலுங்கு | |||
1998 | கண்களின் வார்த்தைகள் | தமிழ் | ||
1999 | ஹவுஸ் புள் | ஹமீது | தமிழ் | |
சேது | சியான் (எ) சேது | தமிழ் | வென்றவர்: சிறந்த நடிகர், தமிழ் நாடு மாநில பட விருது (சிறப்பு பரிசு) | |
2000 | ரெட் இந்தியன்ஸ் | மலையாளம் | ||
2001 | இந்த்ரியம் | மலையாளம் | ||
நேலாலு | வீரேந்திரா | தெலுங்கு | ||
யூத் | தெலுங்கு | |||
விண்ணுக்கும் மண்ணுக்கும் | விக்ரம் | தமிழ் | ||
தில் | கனகவேல் | தமிழ் | ||
காசி | காசி | தமிழ் | வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |
2002 | ஜெமினி | ஜெமினி | தமிழ் | வென்றவர்: ஐ டி எப் எ சிறந்த நடிகருக்கான விருது |
சாமுராய் | தியாகராஜன் | தமிழ் | ||
கிங் | ராஜா சண்முகம் | தமிழ் | ||
2003 | தூள் | ஆறுமுகம் | தமிழ் | |
காதல் சடுகுடு | சுரேஷ் | தமிழ் | ||
சாமி | ஆறுசாமி | தமிழ் | பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |
பிதாமகன் | சித்தன் | தமிழ் | வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது |
|
2004 | அருள் | அருள்குமரன் | தமிழ் | |
2005 | அந்நியன் | இராமானுசம் அந்நியன் ரெமோ |
தமிழ் | வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது |
மஜா | அறிவுமதி | தமிழ் | ||
2008 | பீமா | சேகர் | தமிழ் | பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது |
2009 | கந்தசாமி | கந்தசாமி | தமிழ் | பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது |
2010 | ராவணன் | வீரையா | தமிழ் | தெலுங்கு மொழியாக்கப்பட்டு வெளிவந்தது;வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது |
ராவன் | தேவ் பிரதாப் சர்மா | இந்தி | ||
2011 | தெய்வத்திருமகள் | கிருஷ்ணன் | தமிழ் | வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது |
2011 | ராஜபாட்டை | 'அனல்' முருகன் | தமிழ் | |
2012 | தாண்டவம் | சிவா | தமிழ் | பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது |
2013 | டேவிட் | டேவிட் | இந்தி | தெலுங்கு மற்றும் தமிழ் மொழியாக்கப்பட்டு வெளிவந்தது |
2015 | ஐ | லீ (எ) லிங்கேசன் | தமிழ் | தெலுங்கு மற்றும் இந்தி மொழியாக்கப்பட்டு வெளிவந்தது; விக்ரமின் ஐம்பாதாவது திரைப்படம் |
2015 | 10 எண்றதுக்குள்ள | தமிழ் | படமாக்கப்பட்டு வருகிறது | |
2015 | மர்ம மனிதன் | தமிழ் | அறிவிக்கப்பட்டுள்ளது |