குரு பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 , மிதுன ராசிக்கு
குரு 3க்கு வர, 7,9,11 ம் இடங்களை பார்வை செய்ய
கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்
கெடுதிமெத்த செய்வனடா வேந்தன் தானும்
ஆளப்பா அகத்திலே களவு போகும்
அப்பனே அரிட்டமடாச் சிசுவுக்கேதான்
கூளப்பா குவலயங்களெல்லா மாண்ட
குற்றமிலா காந்தா ரிமகனும் வானும்
வீளப்பா வீமன்கை கெதையினாலே
விழுந்தானே மலைபோலே சாய்ந்தான் சொல்லை.
தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டது என்பது ஜோதிட வாக்கு. துரியோதனனின் ஜாதகத்தில் 3ல் குரு இருக்கும்போது அவனது படை தோல்வி அடைந்தது.
1. முயற்சியில் தடை உண்டு தாமதம் உண்டு. சிக்கல் உண்டு மன தளர்ச்சி உண்டு
2. சோதனைகளை சாதனையாக்கும் பக்குவம் பெறுவீர்கள். தடைகளை தகர்த்தெறிவீர்கள்.
3.உங்கள் நல்ல அணுசரிப்பில் நல்ல கூட்டாளி அமைவார்கள்
4. வரன்களுக்கு திருமணம் இனிதே நடந்தேரும்.
5.நல்ல செயல்கள் கடும் முயற்சியின்பேரில் இனி செய்வீர்கள்
6.சிலருக்கு அயல்நாடு செல்லும் யோகம் வாய்க்கும்.
7.நம்பிக்கை துரோகம் எதிர்கொள்வீர்கள். சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் விலகி ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும்.
8.லாபம் அதிகரிக்கும் நல் ஆசைகள் நிறைவேறும்.
கொடுக்கல் வாங்கலில் துரோகம் நேரலாம் உஷார். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் சிற்சில பூசல்களுடன்.
9.வேலை இழப்பு நோயினால் துன்பங்கள் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் சில உண்டு. சத்தான உணவும், முறையான ஓய்வும் அவசியம்.
10 பூர்வீக சொத்தில் நன்மையுண்டு. தந்தைவழியில் லாபமுண்டுஆன்மிகம் வழி நன்மை பயக்கும்.
11. வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும்.
தொழில் வியாபாரம் சில பிரச்சனைகள் எழும். சில ஏற்ற இறக்கங்களும் இருக்கும் ஆனால் பெரிய அளவில் பின்னடைவு இருக்காது. நல்ல வளர்ச்சி இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்கும். வாடிக்கையாளர்களின் மத்தியில் நன் மதிப்பு இருக்கும். நல்ல முன்னேற்றம் காணலாம். முயற்சிக்கேற்ற பலன் இருக்கும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பை உங்கள் சரியான திறமையை பயன்படுத்தி பெற முடியும்.தொழிலில் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது.
பணியாளர்கள் வேலை பளு அதிகமிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியமும் இருக்கும். சக ஊழியர்களின் நல் ஒத்துழைப்பும் இருக்கும். பதவிஉயர்வும் சிலருக்கு இருக்கும். மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். வசதிகள் பெருகும்.
பெண்கள். குடும்பத்தில் பூசல்கள் வரும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆடை அணிகலன்கள் பெறுவீர்கள். விருந்து விழா சென்று வருவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் எப்பொழுதாவது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரும். அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது. மற்றபடி கணவன் மனைவி ஒற்றுமை நன்றாகவே இருக்கும். பெண்களுக்கு திருமணம் ஆவதில் சில தடை தாமதம் ஏற்பட்டு தீவிர முயற்சிகளுக்கு அப்புறம் திருமணம் நடக்கும். குடும்பப் பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
மாணவர்கள் படிப்பில் சீரான வளர்ச்சி இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் இருக்கும். சுறுசுறுப்பாய் படித்தால் நல்ல பெயர் நிச்சயம் இல்லையென்றால் கெட்ட பெயர் வாங்குவது நிச்சயம். பாடங்களை திரும்பத்திரும்ப படிப்பதன் மூலமே ஞாபகசக்தி கூடும். எளிதில் வெற்றிபெறலாமென்று நினைத்து ஏமாந்துவிடக்கூடாது. ஆகவே படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.
விவசாயிகள். கடும் முயற்சியின்பேரில் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். நவீன விவசாயத்தை பயன்படுத்தி விளைச்சலை பெருக்க கடும் முயற்சி செய்யலாம்.. மகசூலுக்கு நல்ல விலை கிடைப்பது கடினம். வேலைக்கு பணியாளர் கிடைப்பதில் சிரமம், விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் கிடைப்பதில் சிரமம் போன்ற சாதகமற்ற விசயங்களையும் எதிர்பார்கலாம்.