menu

Friday, 24 August 2012

கடக ராசி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2015 - 2016 -  கடக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்


குரு 2க்கு வர 6,8,10 பார்வை செய்ய
1. தனம் பெருகும். பணக்கஷ்டம் நீங்கும். புதிய தொழில் தொடங்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படு்ம். உத்தியோக உயர்வு ஏற்படும். புகழ் பரவும்.
2. வாக்கு பலிதமாகும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியம் நடக்கும். கடன் தீரும். நோய் தீரும். வழக்கு முடியும். விரோதம் தீரும். அவமானம் தீரும். வீண் வதந்திகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து மீள்வீர்கள்.
3. வரன்களுக்கு திருமணம் நடக்கும்.
4.புத்திரபிராப்தி உண்டாகும்.
5. புதிய வீடு வாங்குதல் பழையவீடு புதுப்பித்தல் நடக்கும்.
6. மாணவர்களாயின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு ஏற்படும்.
7. பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள் சேரும்.
8. தந்தை வழியில் சிறப்புண்டாகும். நன்மைகளை பெற இனி வழி கிடைக்கும்.தன வரவு அதிகரிக்கும். வாக்கு பலப்படும். குடும்பம் மேம்படும்.வார்த்தைகளுக்கு மதிப்பு மிகும்.
9. எதிரிகள் தொல்லை இனி அது இல்லை.தொழிலுக்கு முதலீடு அதிகரிக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.தொழில் மேம்படும்.
10. பெயர் புகழ் கௌரவம் மிகும். வேலையில்லாதோர்ககு நல்ல வேலை கிடைக்கும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்கும்.
11. வயது வந்தோருக்கு திருமணம் இனி நடக்கும். தடை தாமதம் விலகும். குடும்பத்தில் கூப நிகழ்ச்சிகள் நடக்கும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். வாக்குறுதி காப்பாற்றப்படும்.
12. தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தியும் வெகு சிறப்பாய் இருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு போன்ற விரும்பிய பணிமாறுதல்களையும் பெற முடியும்.
13. மருத்துவ செலவுகள் குறையும். வீண் விரய செலவுகள் குறையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாய் இருக்கும். பொன் பொருள் சேர்க்கை
இருக்கும் நிலம் வீடு வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளும் உண்டு.

தொழில் வியாபாரம் வெகு சிறப்பாய் இருக்கும். லாபம் அதிகமாக இருக்கும். அரசு உதவிகளும் வங்கி உதவிகளும் சிறப்பாக இருக்கும். கொடுத்த
கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழிலில் பெரிய தொகைகளைப் போட்டு அதிக லாபம் பெற முடியும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். வம்பு
வழக்குகள் முடிந்து போகும். அபிவிருத்தி பணிகளை அற்புதமாய் செய்யலாம்.

பணியாளர்கள் மேலதிகாரிகளின் அனுசரணைசாயான போக்கும் அவர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்களும் கிடைக்கும்.,பதவி உயர்வு, விரும்பிய இடமாறுதல், ஊதிய உயர்வு கிடைக்கும். பணி சுமை குறையும். சக பணியாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும், அவர்களின் உதவியும் தேவையான சந்தர்ப்பங்களில் கிடைக்கும்.

பெண்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் சிலருக்கு வாய்க்கும். சேமிப்பு பெருகும். அக்கம்பக்கத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மதிப்பு மரியாதை உயரும்.

அரசியல்வாதிகள் மதிப்பு மரியாதை உயரும் காலமிது. எடுத்த முயற்சிகளில் வெற்றி பெரும் காலமிது. தொண்டர்களிடமும் மக்களிடமும் தலைவர்களிடமும் உங்கள் மதிப்பு மரியாதை செல்வாக்கு அதிகமாகும். கட்சி பணிகளை நன்றாக முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பதவிகள் தேடிவரும்.

மாணவர்கள் படிப்பு நன்றாக வரும். வீட்டிலும் ஆசிரியர்களிடத்திலும் பாராட்டுக்களை பெறுவீர்கள். விவசாயிகள். அக்கம் பக்கம் நட்பு நன்றாக இருக்கும். சக மாணவர்கிடையே உங்களுக்கு மதிப்பு இருக்கும். சக மாணவர்களின் உதவி உங்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில் தேவையான அளவு கிடைக்கும். கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்கு அமையும்.

விவசாயிகள் பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். மகசூலுக்கு நல்ல விலை கிடைக்கும். மகசூல் சேமிக்க நல்ல சேமிப்பு கிடங்கு வசதி கிடைக்கும் விவசாய இடுபொருட்களும் தேவையான சந்தர்ப்பங்களில் கிடைக்கும் அரசு மற்றும் வங்கி உதவிகளும் தேவையான அளவு கிடைக்கும். நில மற்றும் விவசாய அபிவிருத்து பணிகளை செய்வீர்கள். நவீன தன்மைகளை  பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிப்பீர்கள். நிலம், மனை, வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். நவீன விவசாய கருவிகள் வாங்கும் யோகமும் கிட்டும். வருமானம் அதிகமாகும். சந்தோஷமும் உற்சாகமும் கூடும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற