menu

Tuesday, 28 August 2012

சிம்ம ராசி பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016   சிம்ம ராசி பலன்கள்
சிம்ம ராசி
ஜென்ம குரு , 5,7,9 பார்வை செய்ய
குரு நின்ற இடம் பாழ் என்பது பழமொழி

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்,

பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு
பரமகுரு ஜென்மத்தில் வந்தபோது
கூறப்பா கோதண்டபாணி வீரன்
கொற்வனே குடியேறிப் போகச் செய்தார்
சீரப்பா ஜென்மனுக்குவேதைமெத்த  
சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்
வீரப்பா வேந்தனுட தோஷமுண்டு
விளம்பினேன் .என்கிறார் புலிப்பாணி சித்தர்

          ஜென்மகுரு பொல்லாதவர். ராஜா ராமனையே பட்டாபிஷேகம் தடுக்கப்பட்டு நாட்டைவிட்டு காட்டில் வனவாசம் செய்யவைத்தது ஜென்ம குருவால்தான் .சாதாரண மானிடர்களான நாம் எம்மாத்திரம்.

1. புத்தி மனம் தெளிவடையும்.
2. பிள்ளை, மனைவி தந்தை வழி பாசம் அதிகரிக்கும்.  அவர்களால் நன்மை ஏற்படும்.அறிவு ஆற்றல் மிகும். செயல்பாடுகள் நன்மை தரதக்கதாக இருக்கும்.  நல்ல கூட்டாளிகள் ஏற்படும். மனைவியால்  நன்மையுண்டு.
3. சொத்துக்கள் வாங்கலாம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்யலாம்.மனைவியால் யோகமுண்டு.
4. கூட்டு தொழில் அமையவும் அதன்மூலம் வருமானம் பெறவும் வழியுண்டு.
5. வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.
6. தெய்வ வழிபாடு அதிகரிக்கும் தான தர்மங்களையும் செய்யலாம். இனி பிள்ளைகள் தொல்லைகளாய் இருக்க மாட்டார்கள்.
7. வாழ்க்கை துணைவர்களாலும், கூட்டாளிகளாலும் நன்மையுண்டு
8. அறிவு கூர்மையாம் சிந்தித்து அருமையாக திட்டம் தீட்டி அதன்படி செயல்படுவீர்கள்.
9. பூர்வீக சொத்தால் நன்மையுண்டு. அதில் இருக்கும் சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.

1மிட குருவால் ஏற்படும் பாதிப்புகள்

1. பதவி கெடும்,பொன்,பொருள் நஷ்டம்,அரசு விரோதம் ஆகம்,கெளரவ பங்கம் ஏற்படும்,சொந்த ஊரைவிட்டு வெளியூர் செல்ல நேரிடலாம். உறவினருடன் பகை உருவாகும்.
2. மற்றவர்களை நம்பி செய்யும் காரியங்களால் பண இழப்பு ஏற்படும். மனக்கஷ்டம், உடல் கஷ்டம், பண கஷ்டம் உருவாகும்.
3. இடமாற்றம்,பதவி மாற்றம்,தொழில் மாற்றம் உருவாகும்.
4. வாக்குவாதம் ஏற்படும். கலகம் உருவாகும்.
5. அலைச்சல் ஏற்படும். உடலிலும் மனதிலும் சலிப்பு உருவாகும்.
6.மனதிலே சந்தேகம்,குழப்பம், வீண் கவலை, பயம் ஆகியன உருவாகும்.
7. பண தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரையும். வீடு, நிலம், வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படும். கடன் தொல்லை உருவாகும்.
8. வரவேண்டிய பணம் தட்டு தடுமாறி பல தடை தாண்டியே வந்து சேரும்.
9. திடீர் நெருக்கடிகளும், மருத்துவ செலவுகளும் வந்து நம்மை தடுமாற வைத்துவிடும். நல்ல பெயர் வாங்க முடியாது.


தொழில் வியாபாரம் வியாபாரிகள் முன்னெற்றம் பெருவது சிரமம்.

பணியாளர்கள் மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க முடியாது. கெட்ட பெயர் மட்டுமே எதிர்பார்க்கலாம்.

பெண்கள் வீட்டிலும் குடும்பத்திலும் அக்கம்பக்கத்திலும் நல்ல பெயர் வாங்க முடியாது. ஆடை ஆபரணங்கள் வாங்க முடியாது. மகிழ்ச்சி குறைந்திருக்கும்.

அரசியல்வாதிகள் போட்டி பொறாமை, வெளிப்பகை, உள்விரோதம், மேலிடத்துக் கெடுபிடி , கீழ்மட்டத்தில் நெருக்கடி என்று போராடவே நேரம் சரியாக இருக்கும். மக்களிடம் நல்ல பெயர் வாங்க முடியாது. மேலிடத்திலும் நல்ல பெயர் வாங்க முடியாது.

மாணவர்கள் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும்.

விவசாயிகள்  போட்ட முதலை பெறுவதே பெரும் போராட்டமாக இருக்கும்..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற