menu

Thursday, 30 August 2012

கன்னி ராசி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016கன்னிராசி பலன்கள்



கன்னி 12ல் குரு வர,4,6,8 பார்வையிட

“வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும்”,


“தானென்ற சந்திரனான் வியத்திலோ



தவத்தாலே வந்ததொரு இலங்கை வேந்தன்
கோனென்ற இராமன்கை அம்பால் மாண்டான்
குவலயத்தில் சென்மனுக்கு கொடுமைமெத்த
மானென்ற மறலிபயம் பொருளுஞ் சேதம்
மைந்தனே அரிட்டங்கள் வந்துகூடும்
ஊனென்ற போகருட கடாட்சத்தாலே
உத்தமனே புலிப்பாணி உரைத்தேன் காணே”

தபோ வ்லிமை பெற்ற ராவணினின்  ஜாதகத்தில் 12ல் குரு வந்ததால் ராமனால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தான்,அதுபோல கஷ்டம், நஷ்டம், விரோதம்,பகை போன்றவை எல்லாம் ஏற்படும் குருபகவான் நல்ல பலன்கள் அளிக்கமாட்டார்.
தீமைகள்
1. வாழ்கை துணைவர்களுக்கியே ஊடலும், மோதலும், கருத்து வேற்றுமைகளும் உருவாகும்.
2. சிலருக்கு இடமாற்றம், பதவி மாற்றம், தொழிலில் மாற்றம் ஏற்படும்
3. மனதில் ஊக்கம் குறையும். மன சலிப்பு ஏற்படும்.
மனக்கவலை ஏற்படும்.
4. பிள்ளைகளின் கவலை உங்களை கவலை கொள்ளச் செய்யும்.
5. சுபநிகழ்ச்சிகளுக்கு தேவையான பணம் திரட்ட சிரமபட நேரிடும். வீடு,நிலம் வாங்க செலவிட நேரிடும்.
6. யாரையாவது நம்பி பணம் தந்தாலோ லஞ்சம் தந்தாலோ அதனால் மோசம் போக நேரிடும்.
7. மருத்துவ செலவுகள் ஏற்படும். வழக்குகளுக்கான செலவுகள் ஏற்படும்.
8. நட்பு பகையாகும்.
9. பணம் வரும் வழி கடினமாகும்.
10. குலதெய்வ வழிபாட்டில் தடைகளும்தந்தைக்கான செலவுகள் செய்தலும் பூர்வீக சொத்தில் வில்லங்கமும் ஏற்பட்டு விலகும்.
11. சூதாட்டம் கஷ்டமும் நஷ்டமும் தரும்.

நன்மைகள்.

1. கல்வி அறிவு மேம்படும். மனக்குழப்பம் நீங்கிடும்.
2. நிலம் வீடு சொத்துக்கள் வாங்கலாம். சீர்திருத்தம் செய்யலாம்.
3. நோய்களை குணப்படுத்த முடியும்.
4. எதிரிகளை சமாளிக்க முடியும்.
5. ஆசைகள் நிறைவேறும். தாயாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். தாய் வழி சொத்தும், தாய் வழியில் நன்மையும் கிடைக்கும்.
6. எதிரிகளை இனங்கண்டு ஒதுங்குவீர்கள்.
7. வெளியூர் பயணம் செய்யலாம். வெளிநாட்டினர் வெளிமாநிலத்தாரின் உதவி கிடைக்கும்.
8. குருவால் சுப செலவுகளான தர்ம காரிய செலவுகள் ஏற்படும். புனித யாத்திரை செல்லலாம்.
9. செலவுகள் நன்மை தரதக்கதாய் இருக்கும். நிலம் வீடு வாகனம் கிடைக்கும்.
தொழில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வீர்கள்.
நவீனப்படுத்துவீர்கள். பணியாளர்களுடன் அணுசரித்து போவது நல்லது. செலவுகவும் வீண் விரயங்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. யாரையும் நம்பி ஏமாந்து போகவேண்டாம்.

பணியாளர்கள் வேலை பளு அதிகமாகும். நற்பெயர் கெடும். குறைவான சம்பளம். அதிகமான செலவு. மன உளைச்சல். வெறுப்பு கலந்த மன ஈடுபாடு. குறைந்த வேலை.

பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். ஆடை ஆபரணம் வாங்கும் செலவு உருவாகும். மனக் கவலை உருவாகும். கணவருடன் கருத்து வேற்றுமை ஏற்படும். காரிய தடை உருவாகும்.

அரசியல்வாதிகள் நற்பெயர் கெடும். வழக்குகளிலும் சிக்கல்களிலும் சிக்க நேரிடும்.

மணவர்கள் சக மாணவர்களுடன் சண்டை சச்சரவுகளில் சிக்கக் கூடாது. பள்ளியிலும் வீட்டிலும் பெரியவர்கள் சொல்லை மீறக்கூடாது.

விவசாயிகளுக்கு வாய்க்கா பிரச்சனை வரப்பு பிரச்சனை என்று அக்கம் பக்கத்தாருடன் சின்ன சின்ன உரசலும் முரண்பாடும் ஏற்படும். வருமானத்துக்கும் சேமிப்புக்குமான இடைவெளி அதிகமாக இருக்கும். விவசாயத்துக்கான அபிவிருத்தி செலவு அதிகமாக இருக்கும். நில சீர்திருத்தத்துக்கும், நிலத்தை பக்குவப்படுத்தலுக்குமான செலவு அதிகரிக்கும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற