தனுசு ராசி குணங்கள்
நன்கு திட்டமிடும் தன்மை இவர்களுக்கு உண்டு, சரியான சிந்தனையளர். சிறந்த வெற்றியளர், இரக்ககுணம் உள்ளவர். மனதிலுள்ள குறைகளை எப்போதும் வெளியில் சொல்லமாட்டார்கள். தாய்- தந்தையரிடம் மிகவும் அன்பு உள்ளவர்கள். தான்பிறந்த குடும்பத்தின்மீதும் அதிக அக்கறை காட்டுபவர்கள். . எல்லாவற்றையும் நிறைகளாக பார்கும் தன்மையுள்ளவர்கள். எதிலும் கவனமாக செயல்படுபவர்கள். . தெளிவான புத்தி உடையவர்கள். கடமைகளை செய்பவர்கள். . மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். வஞ்சக குணம் உள்ளவர்களிடமிருந்து விலகிச்செல்வார்கள். அளவோடு நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள். எதிலும் கவனமாகச் செயல்படுபவர்கள். ஆச்சார, அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பவர்கள். தெளிவான புத்தி உள்ளவர்கள். களங்கமில்லாத மனதுக்குச் சொந்தக் காரர்கள். கௌரவம் மிக்கவர்கள். நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர்கள். பலர் இவர்களுடைய உதவியையும் ஆலோசனையையும் நாடிப் பயனடையும் அளவிற்கு வித்தராக இவர்கள் இருப்பார்கள். .கொடை, ஈகை, தயை உள்ளம் கொண்டவர்கள் இவர்கள். .நல்ல ஒழுக்கமுடையவர்கள். ஒரு நல்ல மனிதாபிமானி இருப்பார்கள். இவர்களது இளகிய மனதால் அனைவராலும் நேசிக்கபடுவார்கள். வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் குணம் உண்டு. அதனால் இவர்களிடத்தில் எந்த ரகசியமும் நிற்காது. கேட்பவர்கள் மனதில் நன்றாக பதியுமளவுக்கு சொன்னதையே மீண்டும் மீண்டும் வற்புறுத்திப் பேசுவார்கள். அமைதியான தோற்றமுடையவர்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர்கள். எந்த ஒரு விசயத்தையும் சீர் தூக்கி பார்த்து முடிவு செய்வார்கள். கடவுளிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். கஷ்டங்கள், எதிர்ப்புகள், வீண் வம்பு வழக்குகள் வாழ்க்கையில் குறுக்கிட்ட போதிலும், அவைகளை இயல்பாக ஏற்றுக் கொண்டு முன்னேற்றப் பாதையில் எதிர்நோக்கிச் செல்வார்கள். தர்ம சிந்தனையுடையவர்கள். படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவார்கள். கட்டழகு உள்ளவர்கள்.உறவுகள் தீயவரென்றால் உறவை துண்டித்து கொள்ளவும் துணிவார்கள். மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரராக இருப்பார்கள்
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |