விருச்சிகம் ராசி குணங்கள்
இந்த ராசிக்காரர்கள் வாக்கு பலிதம் உள்ளவர்கள் .சாஸ்திர சம்பிரதாயம் மற்றும் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் , தாயுடனோ, அல்லது தந்தையுடனோ அவ்வப்போது கோபம் கொள்வார்கள் .சகோதர ஒற்றுமை குறைவாகவே இருக்கும் . நண்பர்களிடம் ,மற்றும் பொது மக்களிடம் நல்லபெயர் இருக்கும். குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகம் இருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். இந்த ராசிகாரர்கள் நற்பெயர் வாங்க ஆர்வமுடன் இருப்பார்கள் , முக வசியமும்மற்றும் பேச்சு திறமையும் உடையவர்கள். இவர்களது நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும். சதனையளராக நல்ல உழைப்பாளியாக, தன்னம்பிக்கை உடையவராக இவர்கள் இருப்பார்கள், நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்களை யாரும் அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தங்களுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பதே மற்றவர்களுக்கு நல்லது. குணத்திலே தேள். ஆனால் மனசளவிலே பால். பிடிவாத குணம் சாஸ்த்தி. பணத்தை நேசிப்பார்கள். கூடவே குணத்தையும் நேசிப்பார்கள். கலகலப்பாக பேசினாலும் சில சமயம் கலகக்காரராக காட்சி அளிப்பதுண்டு. மோதினால் மோதி பார்ப்பதும், கடைசி வரை களத்தில் நிற்பதும் இவர்களது குணாதிசயங்கள்.சட்டன்று யாரையும் நம்புவதும்மில்லை. அப்படியே நம்பி விட்டால் அப்புறம் அவர்களைச் சந்தேகப் படுபவதேயில்லை. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவர்கள் இவர்கள். ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள். வாழ்க்கை துணைகளிடம் அதிக பிரியம் உள்ளவர்கள். ,காரியத்தில் கெட்டி காரர் என பெயர் பெற்றவராகவும், உழைப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இவர்கள் இருப்பார்கள்.எந்த காரியத்தையும் தைரியத்தோடும் வீரத்தோடும் செய்யும் சாதனையாளர்கள் மூளை பலத்தையே மூலதனமாக கொண்டவர்கள். பணத்தாலும் பொருளாலும் இவர்கள் மனதை மாற்ற முடியாது. அன்பால் மட்டுமே மாற்ற முடியும். அண்டை அயலாரிடம் நெருங்கி பழகி காரியம் சாதிப்பவர்கள். மனசாட்சிப்படி செயல்படக்கூடியவர். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசிக்காரராக இருப்பார்கள். இவையனைத்தும் விருச்சிக ராசிக்கான பொதுப்பலன்கள்.

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |