menu

Friday, 10 July 2015

மிதுனம்

மிதுனம் ராசிக்கான குணங்கள்

           பல்வேறு முகம் உள்ளவர். மாறும் தன்மையளர். சுய சிந்தனையாளர். அதிகமான எண்ணங்களையும், நோக்கங்களையும் பெற்று,கல்வியில் தேர்ச்சியும்,கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்தியத்தையும் கொண்டவர்.  சதா சிரித்துப்பேசும் குணமும் கபடமும் தந்திரங்களும் மிக்கவர். சுயநலக் காரியவாதிகள். எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவும் செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். செய்யும் காரியம் அனைத்தும் மற்றவர்கள் நம்பும்படி செய்வதில் கில்லாடியாக இருப்பார்கள். பார்வைக்கு வெகுளியாக இருந்து காரியசாதனை புரிவதில் வல்லவர்கள். ருசியான உணவை ரசித்துவிரும்பி உண்பவர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை ஒரேமாதிரியாக எடுத்துக்கொள்பவர்கள். எந்த காரியத்தையும் திட்டமிட்டு வெற்றிகரமாக செய்வதில் வல்லவர்கள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவீர்கள். கம்பிரமாக நடப்பவர். இங்கிதமாக பேசுவதில் வல்லவர்கள்.  தெய்வீக வழிபாடுகளும், ஆசார அனுஷ்டானங்களில் நம்பிக்கையும், கீர்த்தியையும் பெற்றிருப்பார்கள். தைரியசாலிகளாகவும், இருப்பார்கள். தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கறாரும்,கண்ணியமும் உள்ளவர்கள். எழுதுவதில், கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வத்துடனும், செல்வாக்குடனும் தங்களது திறமையினால் முன்னேற்றத்தை அடைவார்கள். செயல் திறன் மிக்கவர்கள், சக்தி மிக்கவர்கள், நல்ல நிறம், உயரம், உடல்வாகு, கௌரவம் மிக்கவர்கள், வீரம் மிக்கவர்கள். மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 3,4 பாதங்களும், திருவாதிரையும் புனர்பூச நட்சத்திரத்தில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். மிதுன ராசிக்கு மேஷம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் நட்பாகவும் மற்றவை பகையாவும் உள்ளன. இவையனைத்தும் மிதுன ராசிக்கான பொது பலன்கள். 1. கடகம் ராசி குணங்கள் 2. சிம்ம ராசி குணங்கள். 3. ரிஷபம் ராசி குணங்கள் 4. மேஷம் ராசி குணங்கள்
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற