மீனம் ராசி குணங்கள்
அமைதியான குணமுள்ளவர்கள் இவர்கள். இரக்க குணம் உள்ளவர்கள் இவர்கள். அடாவடிதனம் இவர்களுகு ஆகாது. இவர்களை மற்றவர்கள் சுலபத்தில் ஏமாற்றி விடமுடியாது. மற்றவர்களிடம் நட்புடன் பழகுவார்கள். திடமான நம்பிக்கையுடனும் நன்னெறியுடனும் தன்னடக்கத்துடனும் சிறந்து விளங்குவார்கள் இவர்கள். அழகிய அங்கலக்ஷணங்களுடனும் தோற்றங்களுடனும் இவர்கள் இருப்பார்கள்.தான் செய்த காரியங்கள், செய்யப் போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்ல மாட்டார்கள். எவரிடமும் மனம்விட்டுப் பழகமாட்டார்கள். பயந்த சுபாவங்களுடன் இருப்பார்கள். தெய்வ வழிபாடுகள், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றை இவர்கள் அறிந்திருப்பார்கள்.ஆனால் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்களா என்பது சந்தேகமே. முன் ஜாக்கிரதை உணர்வு இவர்களுக்கு அதிகமுண்டு. பொழுது போக்கு, நகைசுவைகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். வாசனைத் திரவியங்களிலும்,ஆடை ஆபரணங்களிலும் இவர்களுக்கு பிரியம் அதிகம் இருக்கும்.செயல்களில் தனி தன்மையளாராக இவர்கள் இருப்பார்கள். கௌரவமான வேலையில் உள்ளவர்களாக இவர்கள் இருப்பார்கள், திறமை அதிகம் உண்டு உயர்ந்த பொறுப்புண்டு. பிறரை நன்கு புரிந்து கொள்வார்கள். சிரித்துப் பேசி மற்றவர்களை தங்கள் வசமாக்குவதில் வல்வர்கள் இவர்கள். நயமாகவும் அபிநயத்துடன் முகத்தில் பாவனை காட்டியும் பேசுவதில் கில்லாடி இவர்கள். நண்பருக்காக எதையும் செய்யும் குணம் இருக்கும்.. புது சிந்தனைகளையும், மாறுபட்ட புதுமையான கருத்துக்களையும், சிறந்த தத்துவங்களையும் இவர்கள் சொல்வதுண்டு. கூர்மையான அறிவினைப் இவர்கள் பெற்றிருப்பார்கள். ஆனால் இவர்களுடைய கூச்ச சுபாவத்தால் திறமையை வெளிப்படுத்தத் தயங்குவார்கள். பிற்காலத்தில் மற்றவர் ஆச்சரியம்படும்படியான செயல்களைச் செய்து காட்டுவார்கள். பாதி வயதிற்கு மேல்தான் இவர்கள் திறமை வெளிப்படும்.உதவும் குணத்தாலும், உழைக்கும் கரத்தாலும் உயர்ந்த நிலையை அடைபவர்கள் இவர்கள். எதிரிகளையும் அரவணைக்கும் பண்பு கொண்டவர்கள். இரக்கம் அதிகமுள்ளவர்கள். தாய்தந்தையரின் மேல் அதிக பற்று கொண்டவர்கள். ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பவர்கள். சுற்றி யிருப்பவர்களும் சுகமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில். பிறந்தவர்கள் .

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |