menu

Sunday, 12 July 2015

கும்பம்

கும்பம் ராசி குணங்கள்

முகத்தில் புண் சிரிப்போடும் சரளமாக பேசும் குணத்தோடும்  இவர்கள் இருப்பார்கள்.  இனிமையாக பேசி அருமையாக காரியம் முடிப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள். நியாய அநியாயம் பற்றி நெஞ்சிலே பயமின்றி எடுத்துரைப்தில் வல்லவர்கள் இவர்கள். எந்த சூழலிலும் சலனத்திற்கு ஆட்படாமல், தெளிவாக முடிவு எடுப்பவர்கள் இவர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நினைப்பவர்கள் இவர்கள். சொன்ன சொல் தவறாமல் செய்து முடிப்பவர்கள் இவர்கள்.  இவர்கள் முரட்டு பிடிவாதகாரர்கள் இவர்கள். மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தும் மனப் பக்குவம் கொண்டவர்கள் இவர்கள். மனசுக்கு விரோதமான காரியத்தில் ஈடுபடாதவர்கள் இவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் தன்மை உள்ளவர்கள் இவர்கள். பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் இவர்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள் இவர்கள். உண்மை பேசுவதையே வழக்கமாககொண்டவர்கள் இவர்கள் அதனாலேயே இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பும், மரியாதையும் இருக்கும்.  தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் மிகுந்த சாமர்த்தியசாலிகள் இவர்கள். பரந்த நோக்கம் கொண்டவர்களாதலால் தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க தயங்கமாட்டார்கள் இவர்கள். மற்றவர்களை எளிதில் திருத்த கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்கள். பிறர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் தேவையின்றி தலையிடாத நியாயவாதிகளாக  இருப்பார்கள் இவர்கள். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பார்கள் இவர்கள். ஆடம்பரமான செலவுகளை செய்யமாட்டார்கள் இவர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நியாயமான செலவுகளை மட்டுமே செய்வார்கள் இவர்கள். கல்வியில் ஊக்கமும் ஆசார அனுஷ்டானங்களில் பற்றுதலும்,தெய்வீக வழிபாடுகளில் சிறந்தும் இருப்பார்கள் இவர்கள். மனத்துணிவு உள்ளவர்கள் இவர்கள். எதையும் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள் இவர்கள். நினைத்த காரியத்தை வேகமாக முடித்துக் காட்டுபவர்கள் இவர்கள். புதிய நுட்பங்களை அறிவதில் ஆர்வம் உள்ளவர்கள் இவர்கள். போட்டியானாலும பொறாமை கொள்ளமாட்டார்கள் இவர்கள். பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுபவர்கள் இவர்கள்.  தாராளமனம் படைத்தவர்கள் இவர்கள்.  தன்னைப்பற்றி பெருமையாகத் தாங்களே பேசிக் கொள்வார்கள் இவர்கள். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்களாக இருப்பார்கள்
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற