menu

Monday, 22 June 2015

குருப்பெயர்ச்சி பலன்கள் கும்பம்

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016   கும்ப ராசி பலன்கள்
ராசி பலன்கள் கும்பம் 

கும்ப இராசி 7க்கு குரு வர , 11,1,3 இடங்களை குரு பார்வை செய்ய

1. உங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு மரியாதை மிகுந்து வரும்.
2. செய்காரியங்கள் வெற்றி தரும். செய்தொழிலில் லாபம் மிகும். திருமணம் கைகூடும்.
3. வீண் செலவினங்கள் குறைந்து போகும். மன உளைச்சல் குறையும்.மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கம் அதிகமாகும். தன்னம்பிக்கை கூடும். 4. நற் கூட்டாளிகள் அமைவார்கள். ஆடம்பர வசதிகள் பெறுகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.இது ஒரு பொற்காலமாய் இருக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். விலகிசென்றவர்கள் சுட வலிய வந்து உறவாடுவார்கள். எதிரிகள் சரணடைவார்கள்.
5. சிலருக்கு பிள்ளை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகளின் வழியிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.
6. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வரன்களுக்கு தடைப்பட்டு இருக்கும்  திருமணம் இனி இனிதே நடந்தேரும்.
7. இன்ப சுற்றுலா ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். தைரியம் அதிகரிக்கும்.
அரசு ஆதரவு கிட்டும். 
இளைய சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும்.மூத்த சகோதர கருத்து வேறுபாடு நீங்கும். நாணயம் அதிகரிக்கும்

தொழில் வியாபாரம் உற்பத்தி மிகச் சிறப்பாக இருக்கும். வருமாணம் அதிகரிக்கும். லாபம் உயரும்.  கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். தொழில் நன்கு வளரும். அரசு மற்றும் வங்கி கடன் ஆதரவு கிடைக்கும். ஊழியர்களின் ஆதரவும் மேம்படும். தொழிலை நன்கு விரிவுபடுத்துவீர்கள்.
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை இனிமேல் முழுவதுமாக பூர்த்தி செய்வீர்கள். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். வேலைகள் நன்றாக நடக்கும். பழைய பாக்கிகள் வராதவைகள் யாவும் இப்பொழுது வர ஆரம்பிக்கும். நெருக்கடி தந்த கூட்டாளிகள் இனி உங்களுடன் இனக்கமாக செயல்படுவார்கள். தடைகள் தாமதங்கள் சிக்கல்கள் பிரச்சனைகள் முதலியன இனி உங்களுக்கு இல்லை.

பணியாளர்களுக்கு நல்லவேலை கிடைக்கும் பணிக்கேற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகளின்  அணுசரனை போக்கும் அதிகமாக இருக்கும். வேலை பளு குறையும். ஊதியம் அதிகரிக்கும்.  சக உழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். விரும்பிய பணி மாறுதலும் நடக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும்மேலதிகாரிகளிடம் நற்பெயரும் கிடைக்கும்.தொல்லை தரும் மேலதிகாரிகள் இனி விலகி செல்வார்கள் அல்லது வேறு இடத்திற்கு பணி மாறி செல்வார்கள். இனி வேலைகளை உற்சாகத்துடன் செய்வீர்கள்.

பெண்கள். வாழ்வில் உற்சாகம் அதிகரிக்கும். பெரியோர் ஆதரவும் தேவையான ஆலோசனைகளும் உங்கள் நன்மைக்கு வழிவகுக்கும். அக்கம் பக்கத்தினர் நட்பு பாராட்டுவர். அவர்களால் உங்களுக்கு தேவையான உதவிகளும் தகுந்த நேரத்தில் தவறாது கிடைத்திடும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். விலகி சென்ற சொந்தபந்தம் இனிமேல் நெருங்கிவர ஆரம்பிக்கும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

அரசியல்வாதிகள் நற்பதவியும் நற்பெயரும் கிடைத்திடும். மதிப்பு மரியாதை உயரும். செல்வம் சேரும். தொண்டர்களின் ஆதரவு பெருகும். மக்களிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்புகளும் பதவியும் கிடைக்கும் யோகமுண்டு. விலகி சென்றவர்கள் எல்லாம்  விரும்பி வருவார்கள். உங்களிடம்  திரும்பி வருவார்கள்.

மாணவர்கள் நல்ல நண்பர்கள் அமைவார்கள். நண்பர்களால் நன்மையுண்டு. நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் கெட்டிக்காரராவீர்கள். வீட்டிலும் பள்ளியிலும் நற்பெயர் வாங்குவீர்கள்.சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் கிட்டும்.

விவசாயிகள் நல்ல மகசூல் கிடைக்கும். அனைத்து பயிர்கள் மூலமாகவும் நல்ல வருமானம் வரும். நிலம் சொத்து புதிதாக வாங்க நேரிடலாம். விவிசாய அபிவிருத்தி பணிக் மேற்கொள்ளலாம். விதை உரம் பூச்சி மருந்து தட்டுப்பாடின்றி தேவையான நேரத்தில் கிடைக்கும். நிலம், நவின கருவிகள்,வண்டி, வாகனம், ஆடை, ஆபரணங்கள் என வாங்குவீர்கள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற