menu

Monday, 22 June 2015

மகர ராசி பலன்

குருப் பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016  மகர ராசிபலன்
குருப்பெயர்ச்சி பலன்கள்ராசி பலன்கள் மகரம்

8க்கு குரு வர 12,2,4 இ்டங்களை குரு பார்வை செய்ய

அஷ்டமத்து குரு வின் பாடல்

முட்டப்பா இன்னமொரு மொழியைக்கேளு
மூர்க்கமுள்ள வாலியுமோ சத்ருபங்கன்
கூட்டப்பா கோதண்டபாணி அம்பால்
கொற்றவனே மலைபோல் சாய்ந்தான் காளை
நாட்டப்பா ஜென்மனுக்கு நமனால் கண்டம்
நலம்தப்பும் பொருள்சேதம் அரசர்தோஷம்
வீட்டப்பா வேதியனும் மதிக்கேயெட்டில்
விளங்கவே வெகு பயமாம் விளைவுபோமே

ராமாயணத்தில் பலம் மிக்க வாலியே ராம பானத்தில் சாய்ந்தான். ஏனெனில் குரு கோட்சாரத்தில் சந்திரனுக்கு எட்டில் வந்ததால்தான். இப்படிப்பட்ட ஜாதகருக்கு எமனால் கண்டம் ஏற்படும். சுகக்கேடு விளையும். பொருட்சேதம் ஏற்படும். அரச தோஷம் உண்டாகும் என்று கூறுக எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினார்.

1. நற்செலவினங்கள் கூடிவரும். தீய செலவினங்கள் அகலும்.
2.குடும்பம் மகிழ்ச்சி தரும். வார்த்தை மதிப்பு பெறும்.பெட்டியிலே பணம் சேரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் பேச்சால் அவமானம் சந்திக்க நேரிடலாம். பேச்சில் வாக்குறுதியில் கவனம் தேவை.
3.தாய் வழி நன்மை பயக்கும்.
4. திருமண போன்ற சுப காரியங்களில் தடைகள் தாமதங்கள் சிக்கல்கள் ஏற்பட்டு அப்புறம் இனிதே நடக்கும்.சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். இப்பொழுது இளசுகளுக்கு காதல் வேண்டாம் சிக்கல் நேரிடும்..
5. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். யாரையும் நம்பி ஏமாந்து போகக்கூடாது. கூட்டாளிகள் செலவு வைப்பார்கள். நம்பியோர் கைவிடுவர். யாரையும் யாரிடமும் உதவிகள் கேட்காமல் இருப்பதே நல்லது.சுய முயற்சியால் முன்னேற வேண்டும். மலைபோல் வரும் தடைகள் யாவும் பனி போல் விலகிவிடும்.
6. தொழில் வியாபாரம் கடும் போட்டி இருக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் கடமைகளை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும்.
கடும் முயற்சிகளால் மட்டுமே வெற்றி பெற முடியும். கடன் தருவதை தவிர்க்கவும். முன்ஜாமீன் தருவதை தவிர்க்கவும். வம்பு வழக்குகளில் சிக்காமல் கவனமாக இருக்கவும்.
7. ஆரோக்கியம் சுமாராக இருக்கும். அவ்வப்போது குடும்பத்தில் மருத்துவ செலவுகள் உண்டு.

தொழில் வியாபாரிகளுக்கு லாபம் குறைவாகவே இருக்கும். நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். வேண்டிய உதவிகள் தடை தாமதம் ஆக இருந்து அப்புறம்தான் அவை கிடைக்கும். கூட்டாளிகளை முடிந்தவரை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலை நன்கு கவனிக்கவும் யார் எங்கே எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை நன்கு நிர்வாகம் செய்து கண்கானித்து வரவும்.  தொழிலில் கண்காணிப்பு அவசியம். வாடிக்கையாளர்களை கவர நன்கு திட்டம் தீட்டி செயல்படவும். சீட்டு பிடிப்பவர்கள் ஏலசீட்டு நடத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமிது. பணியாளர்களுடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்வது நல்லது.

பணியாளர்களுக்கு வேலை பளு அதிகமிருக்கும். எதிர்பார்த்த இட மாறுதல் பணிமாறுதல் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது கடும் முயற்சியிலேயே கிடைக்கும். . உங்கள் வேலை உங்களுக்கு அலைச்சலும் திரிச்சலும் எரிச்சலும் தரும். ஊதிய உயர்வு எதிர்பார்க முடியாது. பதவி உயர்வு கிடைப்பதும் தாமதாமாகும். சக பணியாளர்களாலும் மேலதிகாரிகளாலும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கெடுபிடிகளையும் சந்திக்க நேரிடும். பேச்சில் எச்சரிக்கைதேவை வாக்குவாதம் கூடாது.

பெண்களுக்கு வரன்களுக்கு இனிதே திருமணம் நடக்கும். பணவரவுகளில் தடைகளும் பிரச்சனைகளும் இருக்கும். வீண் செலவுகளையும் வீண் விவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் வழியிலும் செலவுகள் இருக்கும். அக்கம் பக்கவும் கவனமாகவும் உஷாராகவும் பழகுவது நல்லது. வீட்டு விசயங்களை வெளியில் சொல்லாமல் பழகுவது நல்லது. உடல்நிலை சுமாராக இருக்கும. பெரிய பாதிப்பு இருக்காது. மனதில் தளர்ச்சி இருக்கும். உற்சாகம் குறைந்திருக்கும்.

அரசியல்வாதிகள் இருக்கும் பெயர் புகழ் மரியாதையை தக்க வைத்துக்கொள்ளவே மிகவும் சிரமப்பட வேண்டும். தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தேவையான விஷயங்களை அறிந்து விரைந்து திறமையுடன் செயல்பட்டால் மட்டுமே பெயரை காப்பாற்றிக்கொள்ள முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. பேசுவதில் கவனம் தேவை. அனைவரிடத்திலும் கவனமாகவும் உஷாராகவும் இருக்க வேண்டும்.

மாணவர்கள். படிப்பு சுமாராக இருக்கும் சக மாணவர்களிடத்தில் கிண்டலும் கேலியம் இருக்கும். தீய நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக்கூடாது. வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.  பள்ளியிலும் பெற்றோரிடத்திலும் பாராட்டுக்களை பெற கடுமையாக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் படிப்பில் கெட்டிகாரராக ஆகலாம்.

விவசாயிகளுக்கு
மகசூல் சுமாராக இருக்கும். உழைப்பு அதிகமிருக்கும் பலன் குறைவாகவே இருக்கும். அதுவும் இழுபறியாகவே கிடைக்கும். மகசூலுக்கு உரிய விலையும் கிடைக்காது. சாகுபடிக்கு அதிகப்டியான முயற்சிகள் தேவைப்படும். சரியான உதவிகள் சரியான இடங்களில் இருந்து கிடைப்பதில் தடங்கலும் தாமதமும் ஏற்படும்.கையிருப்பணத்தில் நிலம் கருவிகள் போன்றவைகளை வாங்கலாம்.
அக்கம்பக்கம் பார்த்து பழகவும். சண்டைசச்சரவு வாக்குவாதங்கள் ஆகியவற்றில் இடுபடக்கூடாது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற