menu

Saturday, 11 July 2015

கடகம்

கடகம் ராசிக்கான குணங்கள்

 புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடக ராசிகாரர்கள்  இந்த ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். உணர்ச்சி வசப்படுபவர். பாதுகப்பாணவர். முக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள்,  பேச்சு ஆற்றல் மிக்கவர். ஞாபக சக்தி அதிகம் உள்ளவர், செல்வாக்கு உள்ளவர். நல்ல அறிவாற்றல் உள்ளவர் பக்தியுடன வாழ்பவர். குரு ஆசான் போன்ற பெரியவர்களை மதிப்பவர். கற்பனை திறன் மிக்கவர். எதிலும் சிந்தித்து செய்ல்படுபவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர். நீதி நேர்மையுடன் இருப்பவர். மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.  பசி பொறுக்க மாட்டார்கள். நன்றாக உழைப்பார்கள். மற்றவர்களை நன்றாக புரிந்துகொண்டு நடப்பார்கள். கலைஉணர்வு மிக்கவர் நீங்கள். மேலோரிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செய்து முடிப்பார்கள்.  அமைதியானவராகவும், நல்ல ஆசானாகவும், ஒழுக்க மானவராகவும், மனித நேயம் கொண்டவராக இருப்பார்கள் . விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய குணங்கள் இருக்கும். கருணை, உதவும் மனப்பான்மை கொண்டவர். எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி பேசுவார். வாழ்க்கை பற்றிய தனி சித்தாந்தத்தை வகுத்து அதன்படி வாழ்பவர். நவீன உலகத்திற்கு ஏற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்வார். குழந்தைகளுக்கு இணையாக பழகும் ஆற்றல் பெற்றவர்.கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள். இவையணைத்தும் கடக ராசிக்கான பொதுப்பலன்கள்

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற