menu

Friday, 19 June 2015

ராசி பலன் துலாம்

 குரு பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016 ராசி பலன் துலாம்
துலாம் ராசி பலன்கள்

துலாம் 11ல் குரு வர
3-ஆம் இடத்தையும், பஞ்சமஸ்தானத்தையும், சப்தம ஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
1. முகம் ஒளி பொருந்தியதாக மாறும். உடல் நலம் கூடும்.
2. உங்கள் அருமையும், பெருமையும், உங்கள் திறமையும் வெளிஉலகத்திற்கு இப்பொழுது தெரியவரும்.
3. சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கௌரவம் அந்தஸ்து உயரும்.
4. எண்ணங்களில் உயர்வும் தெளிவும் இருக்கும். நாணயம் மிக்கவராய் இருப்பீர்கள். வாக்கு தந்தால் நிறைவேற்றியே தீருவீர்கள்.
5. தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியாக இருக்கும். குடும்பத்தினர் தேவை பூர்தியாகம். புதிதாக சொத்து வாங்கும் யோகம் இருக்கும்.
6. வேண்டிய இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும். வேலையில்லாதவர்க்கு வேலை கிடைக்கும்.
7. வீட்டில் கல்யாணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும்.
8. வாழ்க்கை துணைவர்களாலும் நண்பர்களாலும் பற்பல உதவிகளும் ஆதாயமும் கிடைக்கும்.
9. கைகல்பபெல்லாம் இனி கலகலப்பாகும். பகையெல்லாம் நட்பாகும். விரோதிகளும் இனி விருப்பி பழகுவர்
10. எடுத்த காரியம் வெற்றியாகும். செய்யும் செயல் எல்லாம் நன்மை பயக்கும். வாழ்க்கை இனி இனிக்கும். எண்ணெமெல்லாம் நிறைவேறும்.
11. தைரியம் , வீரம், துணிச்சல் யாவும் மிகுந்து இருக்கும். தன்னம்பிக்கை வளர்திருக்கும். எதையும் சாதிக்கும் வல்லமை மிகுந்திருக்கும்.
12. உங்களை புறக்கணித்த சொந்தம் யாவும் உங்களை நாடி வரும் குடும்ப ஒற்றுமை மிகுந்திருக்கும்.
13. இளைய சகோதரம் மூத்த சகோதரம் ஒற்றுமை அதிகரிக்கும்.
14. மண், பொன்,நிலம், வீடு, வாகனம் புதிதாக வாங்கலாம். வாங்கியதில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
15. பூர்விக சொத்தில் வருமானம் அதிகரிக்கும்.
16. அதிர்ஷ்டம் உங்களை அரவணைக்கும். ஆசை எல்லாம் நிறைவேறும். கவுரவம் தேடி வரும். ஊரெல்லாம் உங்கள் புகழ் பரவும். வராத கடனெல்லாம் எளிதில் வந்துவிடும். தடைப்பட்ட காரியமெல்லாம் எளிதில் நிறைவேறும்.

தொழில்
தொழில் மிக நன்றாய் லாபகரமாய் நடக்கும். உற்பத்தி அதிகரிக்கும். விற்பனை சூடுபிடிக்கும். அதாயம் மிகுந்திருக்கும். அனைவரின் ஆதரவும் முழுமையாக கிடைத்திருக்கும். தொழிலை நவீனப்படுத்துவீர்கள். தொழில் வளர்சியில் அக்கறை காட்டுவீர்கள். திட்டம் தீட்டி செயல்பட்டு வருமானம் உயர செயல்படுவீர்கள். ராசி பலன் துலாம்

பணியாளர்கள்
உங்கள் திறமை வெளிப்படும் பதவி உயர்வு கிடைக்கும் மேலதிகாரிகளால் பாராட்டு வெகுமதி கிடைக்கும். சக பணியாளர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். வேலை பழு குறையும். மேலதிகாரிகளிடம் செல்வாக்கு கிடைக்கும். பணியிடங்களில் சுதந்திர உணர்வு மிகுந்திருக்கும். ராசி பலன் துலாம்

பெண்களுக்கு
ஆடை ஆபரணங்கள் கிடைக்கும். கணவரின் அன்பும்ஆதரவும் இன்முக உதவியும் கிடைக்கும். தாய்வழி ஆதரவு பெருகியிருக்கும். தன வரவு மிகுந்திருக்கும். புத்திர பேறு கிடைக்கும். சுற்றும் முற்றும் உறவும் நட்பும் உங்களை நாடி வரும். இன்முகம் காட்டி வரும். அக்கம்பக்கம் உங்கள் மதி்ப்பு மரியாதை அதிகரிக்கும்.

மாணவர்கள்.
நட்பு கைகொடுக்கும் படிப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். பாராட்டு அதிகரிக்கும். படிப்பு முடித்த மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ராசி பலன் துலாம்

அரசியல்வாதிகள்
உங்கள் சமூகப்பணிகளுக்கு அங்கீகாரமும் ஆதரவும் மேலிடத்தில் பராட்டும் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு மிகுதியாகும். புதிய பதவி, பதிவி உயர்வு ஆகியன கிடைக்கும். எதிரிகள் விலகி செல்வர் அல்லது நட்பாவர். வழக்கு விவகாரத்தில் சுமூக முடிவு கிடைக்கும்.

விவசாயம்
விளைச்சல் அதிகரிக்கும். விற்பனை லாபகரமாய் இருக்கும். வருமானம் உயர்திருக்கும். பயிர்பூச்சி தொல்லை குறைந்திருக்கும். வேலை பார்ப்போரின் ஒத்துழைப்பு மிகுந்திருக்கும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற