menu

Monday 15 June 2015

இனிமேல் இப்படித்தான் -சினிமா படம் குறித்து ஜோதிட ஆராய்ச்சி

மக்களில் பலருக்கும் பல விஷயங்களிலும் விருப்பம் இருக்கும்.

1.சுறுசுறுப்பு, விறுவிறுப்பு வேகம் ஆகியன விரும்புகின்றவர்கள் 16% இருப்பார்கள்.

2.சொகுசு, இதம், பதம், பாசம்,அன்பு,கருணை, அரவணைப்பு,பரிதாபம் ஆகிய விஷயங்கள் விரும்புகின்றவர்கள் 16% பேர் இருப்பார்கள்.

3.நக்கல், நையான்டி, விகடம்,விவேகம்,அறிவு கூர்மை  ஆகிய விஷயங்கள் விரும்புகின்றவர்கள் இந்த உலகில் 25 சதவீதம்பேர் இருப்பார்கள்.

4.இனக் கவர்ச்சி அம்சங்கள், கலைகள் இசைகள், அலங்காரங்கள் ஆகியன விரும்புபவர்கள் 25 சதவீதம் இருப்பார்கள்.

5. வீரம், ரோஷம்,கோபம்,ஆணவம், ஆத்திரம், அகம்பாவம், கொடூரம்
இம்சை அல்லது கொடுமை,போராட்டம்,சண்டை,யுத்தம் ஆகியவற்றை விரும்புபவர்கள் 25சதவீதம் இருப்பார்கள்

6. மர்மம், ரகசியம்,திடுக்திருப்பம் ,ஏடாகூடம், இடக்குமடக்கு ஆகிய விஷயங்கள் விரும்புகின்றவர்கள் 25 சதவீதம் இருப்பார்கள்.

7. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் விரும்பம் கொள்கிறவர்கள் 25சதவீதம் இருப்பார்கள்.

8. உழைப்பாளர்களுக்கான மரியாதை, உழைப்பாளர்களுக்கான ஆதரவு, உழைப்பாளர்களை அரவணைத்துச் செல்லுதல் போன்ற விஷயங்களை விரும்புகின்றவர்கள் 25 சதவீதம் இருப்பார்கள.

9.  பக்தி, ஆச்சரியம், அதிசயம்,திகைப்பு, பிரமாண்டம் போன்ற விசயங்களை விரும்புகின்றவர்கள் 25 சதவீதம் இருப்பார்கள்.

மொத்தம் (7x25=175)+16+16=207 சதவீதம் என்று கணக்கிடக்கூடாது. ஏனென்றால் ஒருவருக்கே இதில் 9 அம்சங்களோ அல்லது 8 அம்சங்களோ அல்லது 7 அம்சங்களோ........ அல்லது 1 அம்சங்களோ பிடிக்கலாம். இப்படி பலருக்கும் பலவிதமாக இருக்கும். ஆக மொத்தம்=100 சதவீதம்தான் இருக்கும்.

இனிமே இப்படித்தான்”  படத்தில் இதில் என்னன்ன அம்சங்களை நிறைவு செய்கிறது என்று பார்ப்போம்.
1,2,3...,4,5..,6,7 ஆகிய அம்சங்களை நிறைவு செய்கிறது சந்தானம், தம்பி ராமையா மற்றும் பலர் உதவிகளுடன்
படத்தில் என்ன இருக்கிறது என்பது மட்டுமே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானித்து விடாது. மக்களின் மனது இப்பொழுது எதை விரும்புகிறது என்பதே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும்.

ஒருவருக்கு இசை கேட்பது ரெம்ப பிடிக்கும் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது அவர் இன்னோருவருடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . அப்படி சண்டைபோடும்பொழுது அவர் இசையை ரசிப்பாரா என்பதை கொஞசம் யோசித்துப் பாருங்கள். அப்படியானால் ஒருவருக்கு பிடித்த விஷயமானாலும் அதை ரசிப்பதற்கும் சாதகமான சூழ்நிலை வேண்டுமல்லவா. அந்த சூழ்நிலையை தீர்மானிப்பதுதான் நவக்கிரகங்களும். அவைகள்தான் வெவ்வெறு சூழ்நிலையை ஏற்படுத்தி மக்களின் ஈர்ப்பை வெவ்வேறு விஷயங்களில் ஈடுபடுத்துகிறது.

இப்பொழுது உள்ள கிரகநிலைகளின்படி மக்களின் ஈடுபாடு

1வது அம்சம் 48%
3வது அம்சம் 75%
4வது அம்சம்  75%
5வது அம்சம் 75%
6வது அம்சம் 75%
7வது அம்சம்  50%
8வது அம்சம்  25%
9வது அம்சம்  50%  என்றவாறு உள்ளது. மக்களின் ஈடுபாடு மட்டும் இருந்தால் போதுமானது அல்ல அந்த ஈடுபாடு உள்ளவர்களில் 12% பேருக்கு மட்டுமே படம் பார்க்கும் சூழ்நிலை வாய்க்கும்.

3,4,5,6,7 ஆகிய அம்சங்களை “இனிமே இப்படித்தான்
படம் நிறைவு செய்கிறது.  அதனால் இந்தப்படம் நிறைய வெற்றி புள்ளிகளை பெறுகிறது. இதனால் மட்டுமே இந்தப்படம் வெற்றியை தந்து லாபத்தை தரும் என்று எண்ண வேண்டாம்..  மக்களுக்கான இந்த இந்த விருப்பங்களை இந்தப்படம்  இன்னன்ன வகையில் நிறைவு செய்கிறது என்ற செய்தி மக்களிடம் போய்ச் சேர்ந்தால்தான் படம் மகத்தான வெற்றி பெறும். அந்த செய்தி போய்சேர்வதில் சமூக வலைதளங்களே துணை நிற்க வேண்டும். அல்லது வேறு மார்க்கத்தை யோசித்து செயலாற்ற வேண்டும்.

இனிமே இப்படித்தான்! இனிமே இப்படித்தான்!!  இனிமே இப்படித்தான்!!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற