menu

Saturday, 11 August 2012

குரு பெயர்ச்சி பலன்கள்

குருபெயர்ச்சி பலன் 2015 - 2016
கீழே உள்ள ராசிகளில் உங்கள் ராசியை கிளிக் செய்து பலன் அறிந்து கொள்ளுங்கள். குருப்பெயர்ச்சி பலன்கள்
மேஷம் சிம்மம் தனுசு
ரிஷபம் கன்னி மகரம்
மிதுனம் துலாம் கும்பம்
கடகம் விருச்சிகம் மீனம்
1. Mesh (Aries) 2. Varishabha (Taurus) 3. Mithuna (Gemini) 4. Karka (Cancer) 5. Simha (Leo) 6. Kanya (Virgo) 7. Tula (Libra) 8. Vrischika (Scorpio) 9. Dhanur (Sagittarious) 10. Makara (Capricorn) 11. Kumbha (Aquarius) 12. Meena (Pisces) குரு பெயர்ச்சி பலன்கள்
குரு சஞ்சாரத்தால் ஏற்படும் தீமைகள் 


 https://youtu.be/c4oulFAUJRk


குரு பெயர்ச்சி பலன்கள் - குருவினால் ஏற்படும்  தீமைகள்
           குரு ஒரு ராசியில் சுமார் ஒரு வருஷம் இருப்பார். ஜென்ம ராசிக்கு 3,4,6,8,10,12 ல் சஞ்சாரம் செய்யும் பொழுது அசுப பலனை தருவார். கோட்சார ரீதியாக ஜென்ம ராசியில் குரு வந்தபொழுது ராமர் காட்டுக்கு போனார். சீதை சிறைப்பட்டாள். இது போல ஜென்ம ராசியில் குரு வரும்பொழுது பதவி இறக்கமும், வேண்டாத இட மாற்றமும் ஏற்படும். 3ல் குரு வந்தபொழுது பாரதப் போரில் துரியோதனன் மாண்டான். அது போல 3ல் குரு வரும்பொழுது ஆயுள் கண்டமும், மரண பயமும் ஏற்படும். 4ல் குரு வந்தபொழுது தரும புத்திரர்கள் சூதாடி தோற்றார்கள். அது போல ராசிக்கு 4ல் குரு வந்தால் போட்டி பந்தயங்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு பொருள் இழக்க நேரிடும். 6ல் குரு வந்தபொழுது வேறு திருடர்கள் செய்த தவறுக்காக சத்ய மாமுனி காலில் விலங்கு போடப்பட்டது. அதுபோல ராசிக்கு 6ல் குரு வரும்பொழுது செய்யாத தவறுக்காக தண்டனை அணுபவிக்க வேண்டி வரும். 8ல் குரு வந்தபொழுது வாலி பட்டம் இழந்தான் அதுபோல ராசிக்கு 8ல் குரு வந்தால் பட்டம் பதவி பறிபோகக்கூடும். 10ல் குரு வந்தபொழுது பிரம்மன் தலை கிள்ளிய தோஷத்தால் அந்த மண்டையோட்டை கையில் ஏந்தி சிவபெருமான் பிச்சையெடுத்தார். அதுபோல் ராசிக்கு 10ல் குரு வரும்பொழுது தவறான செய்கையால் பதவி அந்தஸ்து பறி போய் வறுமை ஏற்படும். 12ல் குரு வந்தபொழுது ராவணன் போரில் ராமனால் மாண்டான். அவனது பதவியும் பறிபோனது. அதுபோல ஒருவரது ராசிக்கு 12ல் குரு வந்தால் மரணம் பற்றிய கவலையும், அத்துடன் பதவி இறக்கமும் ஏற்படுவதுடன் அதிக செலவு ஏடீற்பட்டு வருமானத்துக்காக போராட வேண்டிவரும். 2015 -2016ல் குரு பகவான்
1. மேஷ ராசிக்கு-5-ஆம் இடம்
2. ரிஷப ராசிக்கு- 4-ஆம் இடம்
3. மிதுன ராசிக்கு-3-ஆம் இடம்
4. கடக ராசிக்கு- 2-ஆம் இடம்
5. சிம்ம ராசிக்கு- 1-ஆம் இடம்
6. கன்னி ராசிக்கு-12-ஆம் இடம்
7. துலா ராசிக்கு-11-ஆம் இடம்
8. விருச்சிக ராசிக்கு-10-ஆம் இடம்
9. தனுசு ராசிக்கு- 9-ஆம் இடம்
10. மகர ராசிக்கு- 8-ஆம் இடம்
11. கும்ப ராசிக்கு-7-ஆம் இடம்
12. மீன ராசிக்கு-6-ஆம் இடம் என வருகிறார்

குரு பகவான் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் இருந்தால் நன்மைகளைத் தருவார்.
குரு பகவான் 3, 6, 8, 12-ஆம் இடங்களில் இருக்கும்போது அதிக நன்மைகள் ஏற்படாது. எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
குரு பகவான் 1, 4, 10-ஆம் இடங்களில் இருக்கும்போது நிதானித்துச் சென்றால் நன்மையான பலன்களை அடையலாம்.
குருப்பெயர்ச்சி பலன்கள்! குரு பெயர்ச்சி பலன்கள்!! குரு பெயர்ச்சி ராசி பலன்கள்!!! குருப்பெயர்ச்சி ராசி பலன்!!!!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற