குருப் பெயர்ச்சி பலன்கள் ராசி பலன்கள் மீன ராசி
குருப்பெயர்ச்சி பலன்கள் மீன ராசி பலன்கள் - மீனம்
மீன ராசி
குரு 6க்கு வர 10,12,2 பார்வையிட
பாரப்பா பரமகுரு ஆறிலேற
பலமுள்ள மாபெலி சக்கிரவர்த்தி
சீரப்பா சிறைக்கூடம் சென்றாரப்பா
சிவசிவா தேவர்கள் தன்கொடுமையாலே
ஈரப்பா இராஜ பயம்கலகம் துன்பம்
இல்லறத்தில் களவுபோம் கிலேசம் மெத்த
வீரப்பா வெகுபயமாம் சர்ப்பதோஷம்
வேந்தன் நின்ற பதியறிந்து வினையைமுட்டே
பிரசித்திபெற்ற குருபவான் கோட்சாரத்தில் ஆறாம் இடத்தை அடைந்த காரணத்தால் தான் சிவபரம் பொருளின் பேரருளால், தேவர்கள் கொடுமையால் பலம் மிகுந்தவரான மகாபலிச் சக்கரவர்த்தி சிறைக்கூடம் சென்றதனை நினைவினில் கொள்க. அரசபயமும், கலகமும், பலவகைத் துன்பங்களும், இல்லத்தில் களவு போதலும் மனத்தில் குழப்பமும் பயமும் ஏற்படுவதோடு விஷபயமும் உண்டு என்று குரு நின்ற பதியினை அறிந்து அதாவது கிரக நிலவரங்களை ஆராய்ந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
"ஆறில் குரு ஊரில் பகை என்ற பழமொழியும் உள்ளது "
“தானப்பா ஆறுக்கு தோஷமுண்டு; தார் வேந்தர் பகையுண்டு; தோஷமுண்டு’ என்று புலிப்பாணி 6-ஆம் இடத்துப் பலனை விளக்கியுள்ளார்.
“சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தலைபூண்டதும்’ என்பது பாடல்.
1. மதிப்பு மரியாதை குறையும். தெளிவான பேச்சாகவும் கனிவான பேச்சாகவும் இருந்தால் நல்லது. அவசரப்பட்டு வாக்குறுதி அளிக்க வேண்டாம்
2. உடல் நலம் குறையும். மருத்துவச் செலவு உண்டு. தலையில் இருக்கும் தசைகளில் மற்றும் கைகால்களில் வலி ஏற்படும். கடன் தொல்லை ஏற்பட்டு சரியாகும்.
3. மனதில் தளர்ச்சி உருவாகும். மகிழ்ச்சி குறையும்.
4. வீண் செலவு உருவாகும். முயற்சிகளில் தடைகள் உருவாகும். தீவிர முயற்சியால் மட்டுமே காரிய சாதனை செய்ய முடியும்.
5. வார்த்தை அளந்து பேசவும். பேச்சால் விபரீதத்தை உருவாக்காதீர்கள்.
6. சுப காரியங்களில் தடை தாமதம் வந்தாலும் நன்மையாகவே முடியும்.
7. மறைமுக(மர்ம) எதிரிகள் இனி ஓடிவிடுவார்கள். அளந்து பேசுவது அதிக நன்மை. எதிலும் நிதானமாக செயல்பட்டால் குருவினால் கெடுதல் நேராது.
8. நட்பு விஷயத்தில் கவனம் தேவை. பணம் தட்டுப்பாடு அவ்வப்போது உண்டு. சுப விரயம் உண்டு.நல்ல நட்பும் உங்களது சேமிப்பும் தக்க சமயத்தில் உதவிடும்.
9. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். நன்மை பயக்கும் செலவுகள் ஏற்படும்.
10. தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்படலாம். அவர்களால் உதவியும் இருக்காது.
தொழில் வியாபாரத்தில் மிதமான வளர்ச்சியே உண்டு. உழைப்பின் அளவு அதிகமாகும். வருமானத்தின் அளவு குறைவாகும். தொழிலில் அதிக கவனம் தேவை நஷ்டம் ஏற்படாதிருக்க. யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். தொழிலில் நடந்திருக்கும் தவறுகளை உன்னிப்பாக கண்காணித்து உடனே சரி செய்திட வேண்டும். புதிய வாடிக்கையாளர்களை பிடிப்பது கடினமாக இருக்கும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதும் போராட்டமாக இருக்கும். தொழில் அபிவிருத்தி பணிகளை இப்பொழுது செய்ய இயலாது. உற்பத்தியில் மந்தம் உற்பத்தி செய்த பொருட்களை விற்பதில் தடங்கள் என தொழில் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. கூட்டாளிகளிடம் கவனமாக பழகுவது நல்லது.
பணியாளர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். அலைச்சல் திரிச்சல் அதிகமாகும். மேலதிகாரிகளின் கண்டிப்பும் கண்டனமும் அதிகமிருக்கும். அணுசரித்தே போக வேண்டும். எதிர்பார்த்த சம்பளம் உயர்வு , பதவி உயர்வு ஆகியன இருக்காது. மேலதிகாரிகள் சொல்வதை கேட்டு ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். அரசு பணியாளர்கள் லஞ்சம் பெறுவதை தவிர்க்க வேண்டும். சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொறுமையாக செயல்பட வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொண்டு காரிய சாதனை புரிய முயல வேண்டும்.
பெண்கள் குடும்பசெலவுக்கு திண்டாட நேரிடும். சிக்கனம் தேவை. பிள்ளைகளின் எதிர்காலம் கவலை தரும். கணவரிடம் அன்பு பாசம் குறைந்திருக்கும். அவரது கண்டிப்பு மற்றும் கண்டனத்தை பெற நேரிடும். உடல் அசதி ஏற்படும். மனதில் தெளிவு பெற யோகாசனம் செய்யவும். அன அமைதிக்கு ஆன்மீகத்தை நாடவும். உடல் நல பிரச்சனை, விருந்தினர் வருகை செலவு, மருத்துவ செலவு என செலவு பட்டியல் நீளும். சிக்கனம் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். கணவன் மனைவி உறவில் விரிசல் வந்தாலும் சரியாகிவிடும்.சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
அரசியல்வாதிகள். தொண்டர்கள் ஆதரவு குறைந்திருக்கும். உழைப்புக்கேற்ற பலன் இருக்காது் செல்லாக்கு குறைந்திருக்கும். மதிப்பு மரியாதை சமுதாயத்தில் குறைந்திருக்கும்.தன வரவு கவலை தரும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பெயர், புகழ், கௌரவம் அதிகரிக்கவும்,தொழில் மேம்படவும்.தெய்வ வழிபாடு தேவை. எடுத்த காரியத்தில் வெற்றி பெற சிரமப்பட நேரிடும். மக்களின் பாராட்டுக்களை பெற நல்ல காரியங்களை செய்து வரவும். இதனால் நல்ல பதவி, பதவி உயர்வு கிட்டும்.
மாணவர்கள் பாடங்களை திரும்ப திரும்ப படித்தால் மட்டுமே மனதில் நிற்கும். அதிக முயற்சியும் கவனமும் தேவை. சகமாணவர்கள் காலை வாரும் சூழ்நிலையும் ஏற்படும். நல்ல மாணவர்களாக பார்த்து பழகுவது நல்லது. தண்ணீரில் கண்டம். தண்ணீரில் விளையாடுவதை தவிர்க்கவும்.
விவசாயிகள் விவசாய செலவுகள் அதிகரிக்கும் உற்பத்தியும் இருக்கும் உரிய விலை கிடைப்பதில் சிக்கல் உண்டு. நிலம், வீடு, வாகனம், ஆடை ஆபரணங்கள் என பல வகையிலும் செலவுகள் ஏற்படும்