menu

Saturday, 11 August 2012

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016
 மேஷம் ராசி
மேஷம் - மேசம்- 5ல் குரு வர,9,11,1 இடங்களை பார்வை செய்ய

1.இனி செயல்களிலே வேகத்துடன். விவேகமும் உண்டு. பணப்புழக்கம் அதிகமுண்டு.
2. இதுவரை குருவினால் ஏற்பட்ட  செலவினங்கள்  குறையும். வரவினங்கள் அதிகரிக்கும். பொருளாதர வளம் கூடும். மகிழ்ச்சிகரமான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.
3. புத்தி மேம்படும். மனம் தெளிவாகும்.  பிள்ளைகளுக்கு செலவு செய்வீர்கள்.
4. செய்யும் காரிங்களால் இனி செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பெயர், புகழ், கௌரவம் யாவும் உயரும்.
5. சிலருக்கு சொந்த வீடு அமையும்.  பெரிய  மனிதர்களின் ஆதரவு கிட்டும். கூட்டாளிகள் மற்றும் வாழ்க்கை துணைவர்களால் உயர்வு காணலாம்.
6. தொழிலில் லாபம் உயரும். செய்வினைகள் நன்மை பயக்கும். சிலருக்கு
நிலம் வீடு வாகனம் வாங்கும் யோகமும் கூடி வரும்.
7. வரன்களுக்கு திருமணம் கூடி வரும். சுப காரியங்கள் இனிதே நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும். சொந்த பந்த ஒற்றுமை மேம்படும்.
8. நல்லவேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகமும் சிலருக்கு அமையும்.
9. ஆன்மீக நாட்டம் மிகும்.  தந்தை வழி நன்மை  தரும்.பெரியோர்களின் அன்பும் ஆசியும் இனிதே பெறுவீர்கள். பூர்வீக சொத்தும் சிலருக்கு கிடைக்கும்.
10. மூத்த சகோதரம் கசப்புணர்வு வந்து நீங்குதலும் நட்பு கரம் காட்டுதலும் இருக்கும். ஆன்மீக பயணமும் சுற்றுலா பயணமும் சிலருக்கு வாய்க்கும்.
11. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டு.
தொழில் வியாபாரத்தில் அமோக வளர்ச்சியும், அதிக லாபமும் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். கூட்டாளிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு அடியோடு நீங்கும். ஒற்றுமை நீடிக்கும். தொழில் விஸ்திரப்படுத்துவீர்கள்.தொழிலை நவீனப்படுத்தலும் நடக்கும்.

பணியாளர்கள் பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணி சுமை குறையும். விரும்பிய பணிமாறுதல் கிடைக்கும்.சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் வெகு சிறப்பாக இருக்கும். உங்கள் புத்திசாலிதனத்தால் நற்பெயரும் பெறுவீர்கள். வேலை செய்வதில் மகிழ்ச்சி கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று விரும்பிய பணி புரியும் யோகமும் சிலருக்கு வாய்க்ககூடும்.

பெண்கள் வாழ்க்கையில் சந்தோஷம் கூடும். கணவரின் அன்பும் அரவணைப்பும் கூடும். சொந்தபந்தங்களிடைய உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். பெண்களுக்கு திருமணம் கூடிவரும்.  தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மணவாழ்வு சிறக்கும். அக்கம்பக்கம் அணுசரனையாக நடப்பார்கள். ஆசைகள் நிறைவேறும்.

அரசியல்வாதிகள். செல்வம் அதிகரிக்கும். தொண்டர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பெயர் புகழ் கௌரவம் கூடும். சாதனை செய்ய தகுந்த காலமிது.

மாணவர்கள் நன்கு படிப்பார்கள். கல்வியில் சிறப்பான பலனை பெறுவார்கள். புத்திசாலிதனம் அதிகரிக்கும். எதையும் எளிதில் புரிந்துகொள்வார்கள். படிப்பிலும் மார்க் எடுப்திலும்  சிறந்து விளங்குவார்கள். மேல்படிப்பு படிக்க
வேண்டியோருக்கும் அயல்நாட்டு படிப்பு படிக்க வேண்டியோருக்கும் சிறப்பான காலமிது.

விவசாயிகள். நல்ல விளைச்சல் இருக்கும். வருமானம் கூடியிருக்கும். புதிதாக சொத்துக்கள் வாங்கலாம். நிலம் அபிவிருத்தி செய்யலாம். நல்ல தொழிலாளர்கள் எளிதில் கிடைப்பார்கள். விதை உரம் பூச்சிமருந்து தேவையான நேரங்களில் தேவையான அளவுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும்.அமோக விளைச்சல் இருக்கும். விளைந்த பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பயிர்சாகுபடியில் நல்ல புத்திசாலிதனமான முடிவெடுப்பீர்கள். மகசூலுக்கு நல்ல விலை கிடைக்கும்.விவசாயத்தில் நவீன சாகுபடி முறைகளை புகுத்த முயல்வீர்கள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற