menu

Thursday, 17 September 2015

ராமர் ஜாதகம்,ஸ்ரீராமர் ஜாதகம், ஸ்ரீ ராமர் ஜாதகம், ராமன் ஜாதகம், ஸ்ரீராமன் ஜாதகம், ஸ்ரீ ராமன் ஜாதகம்,ஸ்ரீ ராமபிரான் ஜாதகம்,ராமரின் ஜாதகம்

ஸ்ரீ பகவான் இராமபிரான் ஜாதகம்
ராமர் ஜாதகம்
ராமர் ஜாதகம்
லட்சுமணன்
லட்சுமணன் ஜாதகம்
பரதன் ஜாதகம்
பரதன் ஜாதகம்

ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் உள்ள நிலவரங்கள்
1. குரு , செவ்வாய், சூரியன், சனி,சுக்ரன் என 5 கிரகங்கள் உச்ச நிலை.

2. குரு மங்கள யோகம் குருவும் செவ்வாயயும் 1,7 என இருப்பதால்

3. சந்திர மங்கள யோகம் சந்திரனும் செவ்வாய்யும் 1,7 என இருப்பதால் .

4. குரு சந்திர யோகம் குருவும் சந்திரனும் சேர்ந்து இருப்பதால்

இப்படி யெல்லாம் இருந்ததால் அவருக்கு மன உறுதி அதிகம் இருந்தது. அஞ்சா நெஞ்சம் இருந்தது. யாருக்கும் பயப்படாத தைரியமாக முடிவு எடுக்கும் மன துணிச்சல் இருந்தது. பகைவரை வெல்லும் உறுதி வைராக்கியம் இருந்தது. பிடிவாதம் இருந்தது.

5. 6ல் ராகு எதிரிகளை வெல்லும் ஆற்றல்.

6. a)12ல் கேது சயன தோஷம் இருப்பதாலும்  b)“7க்கு” 7லிருந்து 12ம் அதிபனாகிய குரு பார்வை பெற்றதாலும் c) 7மிடத்து அதிபதி சனிக்கு லக்னத்துக்கு 12மிடத்து அதிபதி புதன் பார்வையிட்டதாலும் மனைவியை பிரிய நேர்ந்தது.

7. a) சனி பார்வை சூரியனுக்கு விழுவதாலும்  b) லக்னத்துக்கு 12க்குரிய புதனே சூரியனுடன் சேர்ந்ததாலும் c)9க்கு விரயாதிபதி  சனியே அந்த 9மிடத்து அதிபதி குருவை பார்க்கிற காரணத்தினாலும் தந்தையை  பிரியும் நிலையை தந்தது.

8. சூரியனும் புதனும் சேர்ந்திருப்பது நுண் கலைகளில் நுண் படிப்புகளில் வித்தகத்தை தரும் புதஆதித்தியா யோகமாகும்.

9. 8க்குரிய ஆயுள்காரகன்  சனி லக்னத்தை பார்வை செய்வதாலும் அறிவுக்காரனாகிய புதனையும் மூளைக்காரனாகிய சூரியனையும் மனசுக்காரனாகிய சந்திரனையும் அந்த சனியே பார்கிற காரணத்தினாலும் தற்கொலை உணர்வை ஸ்ரீராமபிரானுக்கு தூண்டிவிட்டது.

9க்குரிய குருவும் 10க்குரிய செவ்வாயும் நேருக்கு நேராக இருந்து தர்மகர்மாதிபதி யோகம் தருகிறது.


நம்மைப் போல சிரித்தவர் அவர்
நமமைப் போல அழுதவர் அவர்
இழப்புகள் பல கண்டவரவர்-அதில்
மீண்டெழுந்து வந்தவரவர்
உறவுகள் பிரியும் சோகமறிந்தவர்
செல்வத்தில் உயர்ந்து தாழ்ந்தவரவர்
இரண்டிலும் செம்மையாய் வாழ்ந்தவரவர்.
விதியென்னும் புயலிலே வீழ்ந்தவர் அவர்
நம்மைப்போல் துயர்பல கண்டவ ரவர்...
 ஸ்ரீராமருடைய ஜாதகத்தை எழுதி பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் பல கிடைத்திடும்.
எந்தை ராம ஜாதகத்தில்
மேஷம் நின்ற சூரியனே புதனே
கடகம் நின்ற சந்திரனே குருவே
மகரம் நின்ற மங்களனே
மீனமதில் மகிழ்ந்திருந்த சுக்கிரனே
தனுஷ் மிதுனம் தமிலூர்ந்த பாம்புகளே
எளியவன் வணங்குகிறேன்
ஏற்றிடுவீர் தயையுடனே...

ஸ்ரீ ராம ஜெயம்! 

"ஸ்ரீ ராமர் ஜாதகத்தை பார்த்தல் புண்ணியம் !

ஸ்ரீ ராமர் ஜாதகத்தை வணங்குதல் புண்ணியத்திலும் புண்ணியம் !!  "

ராமன்,ராமர்,ஸ்ரீராமர்,ஸ்ரீராமன்,ஸ்ரீ ராமபிரான்,ராமாயணம்,கார்திக்,ஜோதிடம்,ஜாதகம்
ஸ்ரீராமர்

 ஹனுமான் ஜாதகம் - ஹனுமார் ஜாதகம்
அனுமார் ஜாதகம்
ஸ்ரீ அனுமன் ஜாதகம்



பரதன் ஜாதக பலன்கள்
ராமரை தெய்வமாக வணங்குகிறோம்.
ராமனைப்போல லட்சுமணனைப் போல பரதன் பெயரும் புகழும் பெற இயலாமல் போனது ஏன்?. இவனுக்கும் 5கிரகங்கள் உச்சம் நிலைதானே. அப்படியிருந்தும் ஏன் பெயரும் புகழும் பெற வில்லை?

10மிடம்தான பெயரும் புகழும் பெற்றுத்தரும் இடம்.
ராமனுக்கு 10மிடத்துக்கு சூரியன்,புதன்,சனி,செவ்வாய்,குரு,சந்திரன் ஆறு கிரகங்கள் பலன் அளிக்கின்றன. இதைப்போலவே லட்சுமணனுக்கும் ஆறு கிரகங்கள் 10க்கு பலன் அளிக்கின்றன. இரண்டு பேருக்கும் ஓரே ராசி ஒரே லக்னம்.  நட்சத்திரம் மட்டுமே வேறு வேறு . எனவேதான் இரண்டு பேருமே மிகவும் நட்புடனும் பாசத்துடனும் சேர்ந்தே இருந்தனர் கடைசிவரையும்.
ஆனால் பரதனுக்கு 10ல் ராகு,சனி,குரு,சந்திரன்,செவ்வாய் என ஐந்து கிரகங்கள். பரதனை போல துரதிருஸ்டசாலி யோகம் ராமன் லட்சுமணனுக்கு இல்லை.




ராமர் ஜாதகம்
ராமர் ஜாதகம்
பரதன் ஜாதகம்
பரதன் ஜாதகம்
தாய்க்குரிய ஸ்தான அதிபதி புதன் 6மிட அதிபதியுடன் சேர்ந்து எப்பொழுதும் பரதனுக்கு எதிரான காரியம் செய்பவளாகவே கைகேயி இருக்கிறாள. தன் பிள்ளையின் மனம் என்ன என்பதைக்கூட புரிந்து கொள்ளதவளாகவே இருந்து தசரதனிடம் வரம் கேட்கிறாள்.

9க்குரிய செவ்வாயும் அந்த 6க்குரியவனை பார்கிற காரணத்தினால் தந்தையும் பரதனின் மனம் அறியாது எதிரியாகவே இருப்பார்.. அந்த சூரியனே அரசு அலுவலர்களையும் மந்திரிகளையும் குறிக்கும். எனவே அரண்மனையில் உள்ள அமைச்சர்கள் உட்பட எந்த அலுவலர்களும் அவருக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். எதிரிகளாகவே இருப்பார்கள். ஏனென்றால் அந்த சூரியனே எதிரி ஸ்தானத்துக்கு அதிபதி.

மக்களைக் குறிக்கும் 9மிட அதிபதி செவ்வாய்கூட அந்த ஆறாம் அதிபதியை பார்க்கிற காரணத்தினால் மக்கள் கூட அவனுக்கு எதிராக இருந்தார்கள். அவனைப்பார்த்து காரி உமிழ்ந்தார்கள்.  அவன் தந்தை தசரதன் இறந்த விவரத்தைக்கூட அவனது உறவினர்கள் அவனுக்கு தெரியப்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவன் தனது தாய்மாமன் வீட்டில்தான் அப்போது இருந்தான். தற்செயலாக அரண்மனைக்கு திரும்பி வந்தபோது ஊரே சோகமயமாக காட்சியளிப்பதை கண்ட பின்னால்தான் அவனுக்கே தெரியும் தன் தந்தை இறந்து விட்டார் என்று .புதன்தான் சொந்தபந்த உறவினர்களைக் குறிக்கும். அது எதிரியான சூரியனுடன் சேர்ந்து இருக்கிறது.  இப்படி ஊரும் சொந்தமும் பந்தமும் சகோதரமும் அரசாங்க அலுவலர்களும் எதிரிகளாகத்தான் இருந்தார்கள் அவனது ஜாதகப்படி.  இத்தனைக்கும் பரதன் எந்த தீ்ங்கும் யாருக்கும் செய்யாமல் இருந்தும்.  கைகேயி வரம் கேட்டது பரதன் குற்றமா? ஆனாலும் எல்லோரும் பரதனை விரும்பவில்லை. எனவேதான் இராமனைப்போல அவனால் பேரும் புகழும் பெற முடியவில்லை.

பரதனுக்கு 11க்குரிய சனியே அவனுடைய அண்ணனைக்குறிக்கும். அந்த சனி 12க்கும் அதிபதியாக இருந்து 8ல் பலம்பெற்று இருந்த காரணத்தினாலும் அந்த 8மிடத்தில் இருக்கும் சனியை 6மிட அதிபதி பார்த்த காரணத்தினாலும் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும்  ராஜயோகம் என்ற விதிபிரகாரம் அரசாளும் யோகத்தை தந்தது. 12மிடம் துன்பத்தையும் துயரத்தையும் குறிக்கும் . 8மிடம் கடுமையான அவமானத்தை குறிக்கும் 6மிடம் தொந்தரவுகளைக் குறிக்கும். இத்தகைய துர் அதிர்ஷ்டங்கள் ஒன்று சேர்த்த சனிதான் பதவிக்கான யோகம் தரும் 10ம்மிடத்தையும் , அந்த 10மிட அதிபதி குருவையும் பார்வை செய்கிறது. எனவேதான் இத்தகைய துர்பாக்கிய அரசாளும் யோகம் அமைந்தது. அண்ணனின் பாத அணிகளை அரியணையில் அமர்த்திதான் அவர் அரசாண்டார். லக்னத்துக்குரியோன் குரு எனவே நீதி நேர்மை தவறாதவன் கடமை தவறாதவன். எனவேதான் ஊரே தூற்றினாலும் சொந்தபந்தமே வெறுத்தாலும்... தனது கடமைக்காக நாட்டைக்காக்கும் கடமைக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நல்லாட்சியை தந்தான் பரதன். பரதனுக்கும் நல்ல பெயர் இருக்கத்தான் செய்தது. ஆனால் அது மறைமுகமாகவே இருந்தது. பலராலும் அறியப்படமல் பலருக்கும் அது பரவாமல் இருந்தது. ராமனின் அன்னையே சொல்லியிருக்கிறாள் நற்குணத்தில் “நீ பலகோடி ராமனுக்கு மேலானவன் ”என்று. அத்துனை நற்குணம் அவனுக்கு. ஆயினும் அந்த புகழெல்லாம் ஊரெல்லாம் சுனாமியாகப் பரவத்தான்னில்லை.

அயோத்தி மன்னன் பரதன் சிறு வரலாறு
ஒருவனை ஊர் உலகம் புரிந்துகொள்ள முடியாமல் போனால் அதனால்அப்படியொன்றும் பெரிய பாதிப்பு வந்து விடாது. ஆனால் அவனுடைய குடும்பத்தினர், உற்றார் கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால் அவனை விட துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் மிகவும் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரம்தான் பரதன். இராமாயண கதாபாத்திரங்களிலேயே மிக உயர்ந்த, ஆனால் இராமாயண கதாபாத்திரங்களினால் புரிந்து கொள்ளப் படாத கதாபாத்திரம் பரதனுடையது. பரதன் மிக உயர்ந்தவன் என்பதை நான் சொல்லவில்லை. கம்பரே சொல்கிறார்.

" ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ?" என்று.

பரதன் ராமனிடம், ""அண்ணா! நான் இந்தப் பதினான்கு ஆண்டும் அயோத்தியில் நுழைய மாட்டேன். தாங்கள் அணிந்துள்ள பாதுகையைத் தந்தருள்க. அவற்றை அயோத்தியின் எல்லையாகிய நந்தி கிராமத்தில் சிங்காசனத்தில் வைத்துப் பூஜை செய்வேன். நந்தி கிராமத்தில் இருந்தே நாட்டை ஆள்வேன். அதுவரை தாங்கள் பூண்ட தவக்கோலத்துடனே இருப்பேன்'' என்றான். ராமர், பரதனின் அன்பை எண்ணி உருகினார். மரவடிகளாலான தன் பாதுகைகளைத் தந்தார். அப் பாதுகைகளைப் பரதன் மணிமுடி போல் தலையில் சுமந்து சென்றான். தான் சொன்னபடியே ராம பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்து தவ வாழ்வு வாழ்ந்தான் பரதன்.

     காலங்கள் ஓடின. மாயமான் மாரீசனைக் கண்டு சீதை ஆசைப்பட, ராமர் அதனைத் துரத்த, அந்த வேளையில் ராவணன் வந்து பிராட்டியைக் கடத்தினான். இறுதியில் ராவணாதியரை வென்று சீதையைச் சிறை மீட்ட ராமன், விபீஷணன் கொண்டு வந்த புஷ்பக விமானத்தில் ஏறி வானரப்படைகளுடன் அயோத்தி நோக்கி வந்தார். வழியில் பரத்வாஜ முனிவர், தம் ஆஸ்ரமத்தில் விருந்துண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தட்ட முடியாத ராமர், "பதினான்கு ஆண்டு முடியும் காலம் வந்துவிட்டதால் பரதன் தீக்குளித்துவிடக் கூடாது' என்று எண்ணி, அனுமனிடம் தன் மோதிரத்தை அடையாளமாகத் தந்து தனது வருகையை பரதனுக்கு உணர்த்துமாறு அனுப்பி வைத்தார்.

    பதினான்கு ஆண்டுகள் முடிந்தும் ராமர் வராததால் பரதன் தீ மூட்டி அதில் விழுவதற்கு, தம்பி சத்துருக்கனுடன் சுற்றி வந்தான். குலகுரு வசிஷ்டர் மற்றும் அமைச்சர்கள் தடுத்தும் கேட்காமல் பரதன் தீயை வலம் வரும் செய்தி கேட்டு கோசலை ஓடோடி வந்து பரதனிடம், ""என் மகனே பரதா! எண்ணற்ற கோடி ராமர்களாயினும் அண்ணல் உன் அருளுக்குச் சமமாவார்களோ? புண்ணியமே உருவான உன் உயிர் மாய்ந்தால் மண்ணுலகும், விண்ணுலகும், மக்களும் வாழ்வார்களா?' என்று கூறித் தடுக்க முயன்றாள். இதைக் கோசலை கூறியதாகக் கம்பர்,

""எண்ணில் கோடி இராமர்கள் ஆயினும்

அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ...''

என்று அழகுறப் பாடியுள்ளார்.

அந்நேரம் "ஐயன் வந்தனன்' என்று அனுமன் சொல்லிக் கொண்டே வந்து, தன் கைகளால் தீயை அணைத்தான். ராமர் அயோத்தி வந்தார். அனைவரும் மனம் மகிழ்ந்தனர். அண்ணல் ராமருக்கு வசிஷ்டர் முடி சூட்டினார்.

பரதனுக்கு நாடு கிடைத்தும் அண்ணன் மீதுள்ள அன்பால், ராம பக்தியால் அவனைத் தேடிக் காட்டிற்கு வந்தான். அதனால் "ஆயிரம் ராமர்களைவிட உயர்ந்தவன்' என்று குகனால் பாராட்டப்பட்டான்.

ராமரின் வரவு தாமதித்ததால் மரணமடையவும் துணிந்தான். அதனால் "எண்ணற்ற கோடி ராமர்களும் ஒரு பரதனுக்கு ஈடாக மாட்டார்கள்' என்று ராமனைப் பெற்ற தாய் கோசலையே கூறினாள். ராம பக்தியுடையவன் யாராக இருந்தாலும் அவன் ராமரையும் விட உயர்ந்த நிலைமையடைவான் என்பதற்குப் பரதனின் பக்தி வாழ்க்கையே சான்றாகும்.

ராமர் அவதரித்த புனிதமான நாளான ராம நவமியன்று ராமரின் திருவடிகளைத் தொழுது, பரதனைப் போல் உயர்வடைவோமாக!



மும்பை-மாடல்-நடிகை-பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்ரை-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு!மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!

நடிகை பூஜா மிஸ்ராவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வரக் காரணம் என்ன?

முதலில் மீடியாக்களில் வந்த செய்தியை பார்க்கலாம் அப்புறம் அவருக்கான ஜாதக பலனைப் பார்க்கலாம்.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் மாடலும், நடிகையுமான பூஜா மிஸ்ரா. அவர் நடிப்பை பற்றிய செய்திகளை விட அவரைப் பற்றிய சர்ச்சை செய்திகளே அதிகம் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பூஜா.

டெல்லி - தாஜ் தஜவாராகா ஜோட்டலில் சில நாட்களுக்கு முன்பு தங்கியிருந்தாராம். அவர் தங்கிய அறையில் இருந்த உடைந்த பொருட்களுக்கு பணம் தர மறுத்தாராம். அதன் பொருட்டு ஹோட்டல் ஊழியரை தாக்கினாராம். இதுகுறித்து வீடியோ வெளியிட்டார்களாம் மீடியாக்கள். நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு இருக்கும்பொழுது மீடியாக்கள் வெளியிட்டது தவறு .  அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டினாராம். இந்த வழக்கினால் மீடியாக்கள் ரூ1000 கோடி தர நேரிடும் என்றும் சொன்னாராம்!

முன்பு ஒரு முறை படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங்கும், அவரது சகோதரரும் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பூஜா புகார் அளித்தார்.

அதற்கு பின்பு தன்னுடையவளர்ச்சியில் பொறாமை கொண்டு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா எனக்கு சூனியம் வைத்துவிட்டார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் பூஜா மிஸ்ரா என்பது அனைவரும் அறிந்ததே.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற காரணத்தினால்  சச்சரவு குறித்து இங்கு முழுமையாக விளக்கம் அளிக்க முடியாது!  எனவே இங்கு சுருக்கமாகவே சொல்கிறேன்.
1. அவருக்கு ஏற்கனவே கால சர்ப்ப தோஷம் இருக்கிறது. அனைத்து கிரஹங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் சிக்கி விட்டன. ஜாதகம் பார்க்கவும்.

2. லக்னத்திற்கு செவ்வாயன் , ராகு, சனி சம்பந்தம் இருக்கின்றன. அறிவுஸ்தானத்துக்கு காரணமான புதன்னும் ராகுகேதுவின் பிடியில்தான் இருக்கிறது. இதனால் அவருக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. செவ்வாயே லக்னத்தை பார்க்கிற காரணத்தினால் இவர் இயற்கையிலேயே கோபம் உடையவர். அந்த செவ்வாயின் வீட்டிலே சனியும் உள்ளது. சனியின் வீட்டிலே செவ்வாய் உள்ளது. இரண்டும் பரிவர்த்தனையாகி உள்ளது. இந்த சனியே அவருக்கான உதவியாளரை அல்லது வேலை செய்வோரைக் குறிக்கும். அந்த செவ்வாய் 7, 12க்கும் அதிபதியான காரணத்தினால் தனது நண்பர்களினாலும் வேலைக்காரர்களாலும் துக்கத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாவார் இதனால் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருவதும் இயலபானதே. நீதிக்கும் நேர்மைக்கும் உரியவரான குருவோ அவமான ஸ்தானத்தில் சூரியனுடன் சேர்ந்து இருப்பதோடு அல்லாமல் சண்டை சச்சரவுக்கு காரணமான 12மிடத்தையும் பார்கிறது. அது மட்டுமல்லாமல் வாக்கு வாத்துக்கு காரணமான 2மிடத்தையும் நோக்குகிறது. வாக்கு வாத்திலும் வழக்கிலும்  போராடுவதிலுமான சூழ்நிலையை உருவாக்குகிறது.  இதனால் நீதிமன்ற வழக்கிலும் ஈடுபடுடக்கூடிய  சூழ்நிலையை உருவாகியது. 

மும்பை-மாடல்-நடிகை-பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்ரை-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு!மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!
pooja missra

ஓட்டல் ஊழியரை அடித்து உதைத்து மொபைலை உடைத்த நடிகை பூஜா மிஸ்ரா- தின தந்தி செய்தி

பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு! 
மும்பை-மாடல்-நடிகை- மிஸ்ரா-மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!

Saturday, 12 September 2015

புத்திர தோஷம் என்றால் என்ன?அது பற்றிய விளக்கம்!

          ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் முழுமை பெற வைப்பது குழந்தை செல்வமே. திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் அடுத்து எதிர்பார்ப்பதும் ஓரு குழந்தையைத்தான். ஏழை முதல் பணக்காரர் வரை எல்லோருமே தனக்கு ஒரு வாரிசு பிறப்பதை  பெரிய பாக்கியமாகக் கருதுகின்றார்கள்.  யாருமே தங்களுக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. என்பதே உண்மை. ஆனால், இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குபவர்கள்  பலர் உண்டு இவ்வுலக வாழ்க்கையில்

          நடைமுறையில் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காத யோகத்தை புத்திர தோஷம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடப்படி குழந்தை பெற்ற பின்னரும் அந்த பிள்ளை இடையிலேயோ அல்லது வாலிப வயதிலேயோ இறந்து போனாலும் அது புத்திர தோஷமே. சில பெற்றோர்களுக்கு பிள்ளைகளே அவமான சின்னமாய் ஆகிவிடுவதுண்டு. சில பிள்ளைகளால் கோர்ட், கேஸ் என பெற்றோர்கள் அலைய நேரிடும். இதுவும் புத்ர தோஷமே!. பிள்ளைகளால் தீராத சண்டை சச்சரவுகளில் சிக்கி சீரழிந்து நிம்மதியை இழக்க வைக்கும் யோகமும் சிலருக்கு அமைவதுண்டு.  இதுவும் புத்ர தோஷமே. சிலருக்கு பிள்ளைகளால் ஏராளமான செலவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி பெற்றோரகளுக்கு கடுமையான விரயங்களையும் சோகத்தையும் கண்ணீர் சிந்த வை்ப்பதையும் புத்திர தோஷம் என்றே சொல்லலாம்.

          பெற்றோர்களுக்கு பிள்ளைகளால்  ஏற்படும் தொல்லைகளே புத்ர தோஷம் ஆகும்.. அந்த தொல்லைகளைப் பொருத்து பல வகைகளாக பிரிக்கலாம்.

குழந்தை இல்லை! - புத்ர சோகம்!:- பிள்ளைகளே பிறக்காத யோகம் இருந்தால்- இதனால் தம்பதிகளுக்கு கவலை உண்டாகும். இந்த பிள்ளை இல்லாததால் ஏற்படும் “புத்ர சோகமும்” ஒரு புத்ர தோஷமே! இதை சோக புத்ர  தோஷம் எனலாம். பிள்ளை பேறு இல்லாத காரணத்தினால் பல வகைகளிலும்  மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட மந்திர  பூஜை ரீதியாகவும் பணம் நிறைய செலவு செய்தும் பிள்ளை பிறக்காமல் போவதை  விரய புத்திர  தோஷம் எனலாம்

          இப்படி பிள்ளை பிறக்காத காரணத்தினால் சமுதாய மக்களாலும் நண்பர்களாலும் உறவினர்களாலும்  பழி சொல்லுக்கும் அவமானத்துக்கும் உள்ளாக நேரிடும்.

குழந்தை இல்லா நிலை உருவாக காரணங்கள்

          ஒரு நல்ல திறன் உள்ள கருவகம் (கரு முட்டை) உருவாக தேவையான அனைத்துச் சத்துக்களும் ஒரு பெண்ணின் உடம்பில் இருக்க வேண்டும். அவள் உண்ணும் உணவிலிரு்து தேவையான சத்துக்களை உருவாக்கும் திறன் அந்த பெண்ணின் உடலிற்கு இருக்க வேண்டும்.  அதற்கு நவக்கிரஹங்களின் துணை இருக்க வேண்டும். பெண்ணின் உடலில் எந்த வகையான சத்துக்கள் குறைபாடு இருக்கிறது என்பதை ஜாதகம் காட்டி கொடுத்துவிடும். அனைத்துச் சத்துக்களையும் உருவாக்கும் வல்லமை உடலில் இருந்தும் அந்த சத்துக்களை கருவகம் உருவாக்கும் இடங்களுக்கு செல்லாமல் வேறு வழிகளில் அத்தகைய சத்துக்களை  உடல்கள் பயன்படுத்திக் கொண்டாலும் திறனுள்ள கருவகம் உருவாகுதில் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாக கடினமாக உடல் உழைப்பு செய்வோருகக்கு எலும்பு சார்புடைய சத்துக்களும் நரம்பு சார்புடைய சத்துக்களும் நிறைய செலவாகி இருக்கும். அதை ஈடு செய்ய உடல் முன்னுரிமை கொடுக்குமானால் பிள்ளைகள் உருவாகும் கருவகங்களுக்கு அத்தகைய சத்துக்கள் போதுமானளவுக்கு கிடைக்காது போகும். சிலர் அலுவலகங்களில் கடுமையாக மூளைக்கு வேலை தருவார்கள். இவர்களுக்கு அடுத்து சாப்பிடும் உணவுகளில் இருந்து மூளைக்கு தேவையான சத்துக்கள் அவரது உடல் தயாரித்து மூளைக்கு அனுப்பிவிடும். இந்த சமயத்தில் கருவகங்களுக்கு மூளைக்க தேவையான சத்து குறைபாடு உருவாகும். சிலருக்கு இப்படி மனிதர்கள் அன்றாடம் பல்வேறு வழியிலும் உடலிலுள்ள சத்துக்களை வேலை செய்வதன் மூலம் விரையம் செய்கிறார்கள். இதனால் சூரியன்,புதன்,சுக்ரன்,சந்திரன்,செவ்வாய்,குரு,சனி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோஅல்லது மூன்றோ சத்துக்கள் குறையும் நிலை ஏற்படலாம்.

புதன் - நரம்பு மற்றும் தோல் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணைசெய்வது
சூரியன் - மூளை சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சந்திரன்-உடலில் இருக்கும் நீர் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சுக்ரன்- பிறக்கப் போகும் குழந்தையின் அடுத்த தலைமுறைக்குத் தேவையான இனப்பெருக்கம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
செவ்வாய் - இரத்தம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
குரு - இதயம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சனி- எலும்பு சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணைசெய்வது

          இந்த சத்துக்கள் எல்லாம் போதுமான அளவுக்கு உடம்பில் இருந்தால் மட்டுமே நல்லதொரு திறன் உள்ள கருவகம் உருவாகும். இதைப்போலவே ஆணுக்கும் சகல சத்துக்களும் இருக்க வேண்டும்.  இவற்றில் எந்த சத்துக்கள் பற்றாக் குறையாக உள்ளதோ அத்தகைய தொந்தரவுகள் குழந்தை உருவாகுவதில் தடைகளை ஏற்படுத்தும்.

ஜாதக ரீதியாக வாரிசு யோகம்
 

          ஒருவரின் 5ம் இடம் பலமாக அமைந்திருந்தால் குழந்தை பாக்கியம் பெறலாம். குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமைந்திருப்பதும் நல்லது. அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் அது போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.


          5ம் ஸ்தான அதிபதி 6ல் இருந்தால் எதிரிகளின் சாபத்தினாலும் அல்லது ஜாதகர் நோய்வாய்பட்டிருப்பதானாலும் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
5க்குரியோன் 8ல் இருப்பதும் சிறப்பாகாது. 12ல் இருப்பதும் புத்திரனால் ஏற்படும் சோகத்தையும் விரயத்தையும் குறிக்கும். 5ல் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படுத்துகிறது. ஆனால் எந்த வகையிலாவது சுபர் சம்பந்தம் பெறும்பொழுது இந்த தோஷம் நிவர்த்தியாகிறது.
5க்குரியோன் நீசமானாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் பாவிகள் பார்வை பெற்றாலும் புத்திர சோகம் உருவாகிறது. 9மிடம் நன்றாக இருந்தாலும் . 9மிடத்து அதிபதிகளுக்கு நல்ல சம்பந்தம் இருந்தாலும், 5மிடத்துக்கு சுபர் சேர்க்கை சுபர் பார்வை இருந்தாலும் புத்திர தோஷத்திலிருந்து தப்பிக்கலாம்.
உடலுக்கும் மனசுக்கும் மூளைக்கும் போதிய அளவு ஓய்வு கொடுப்பதுடன் தேவைப்படும் சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்பதனாலும் புத்ரதோஷ பிரச்சனைகளிலிருந்து மீளலாம்.

இது ஒரு பெண்ணின் ஜாதகம்

ஏன் இல்லை பிள்ளை? எடுத்துச் சொல்லும் ஜாதகம்!


          6க்குரியோன் குரு- எனவே இவர் நோய் தருவார் எதிரிகளையும் தருவார் அவர்களால் அவமானங்களையும் தருவார். இவர் தான் 12யும் பார்கிறார். எனவே சோகத்தையம் செலவினங்களையும் சண்டை சச்சரவுகளையும் தருகிறார். இவருடன் சேர்ந்திருக்கும் இரண்டு கிரகங்களும் அதையே தரும்.
5ல் சுப கிரகம் இல்லை. 5க்கு சுபகிரக பார்வையும் இல்லை.  5மிட அதிபதிக்கும் சுபகிரக சேர்க்கையோ பார்வையோ இல்லை. அத்தோடு அல்லாமல் 5மிட அதிபதிக்கும் பாவக்கிரக பார்வைவேறு உள்ளது. 9மிடத்திலோ 9க்கு 6மிடத்து அதிபதியாகிய சூரியனே அமர்ந்ததும் நல்லதல்ல. 2மிடம் குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருக்கறிது. 4மிடமும் பாதிக்கப்பட்ருககிறது. இது சுகஸ்தானம். செய்யும் பாக்கியங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது குரு 8ல் இருப்பதால்.  5மிடமாகிய புத்திர ஸ்தானத்தில் ராகு இருக்கிறது.

அடுத்த ஜாதகம் பாருங்கள் கீழே இருக்கிறது.  5ல் கேது இருக்கிறது. இது கருச்சிதைவை உருவாக்குகிறது. இன்னொன்று செவ்வாய் அந்த கேதுவுடன் சேர்ந்து இருக்கிறது. அந்த செவ்வாய் லக்னத்துக்கு 6மிடத்து அதிபதி எனவே குழுந்தை வயிற்றிலேயே இறக்க நேரிட்டது. ஆனாலும் 5க்குரியோன் 7ல் கேந்திரத்தில் நிற்க அதனுடன் இந்த ஜாதகருக்கு  5க்கு அதிர்ஷ்டமளிக்கும் சூரியன். அதனுடன் சேந்திட இரண்டு ஆண் பிள்ளைகள்.

குழந்தை,உண்டா,இல்லையா,புத்திர தோஷம்,ஜாதகம்,ஜோதிடம்,கார்திக் ஜோதிடம்

கர்ப்ப பிராப்தம் தரும் பரிகார தலங்கள்

            திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாபநாசம் அருகே இருக்கிறது இந்த கோயில். குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுமேயானால் அவர்கள் இந்த கோயிலுக்கு சென்று அம்பாளை வணங்கி வரலாம். அங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி அருந்திவர தோஷ நிவர்த்தி யாகி  புத்திரயோகம்  சிறப்பாக கிடைக்கும்.


கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கரு நன்கு வளர இந்த அம்மனை வணங்கிவர வேண்டும். கும்பகோணம்-திருவாரூர் ரோட்டில் இருக்கும் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து இந்த கோவில் இருக்கிறது. இந்த  அம்மனை வணங்கி வர  புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது.

           திருவாலங்காடு சிவன் - ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று சென்னைக்கு அருகே உள்ள திருவாலங்காடு போய்  சிவனை வணங்கி, அன்றைய தினம் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் புத்திர யோகம் சிறப்பாக உண்டாகும்.

         கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரக்கூடிய  சந்தானராமன் ஆலயம் இருக்கிறது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தந்தருள்கிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில் விசேச அபிஷேகங்கள் நடைபெறும்போது ராமனை வழிபடுவது மிகவும் நன்று.

          குழந்தை  என்பது தேவை தான்! அதன் அருகாமை என்பது அவசியம் தான்! அதற்காக குழந்தை  இருந்தால் தான் வாழமுடியும் என்பது கிடையாது! தனக்கு குழந்தை இருக்காது  என்று உறுதியாக தெரிந்த பிறகு அதை நினைத்து காலமுழுவதும் அழுதுக்கொண்டு  இருப்பது பைத்தியகாரத்தனம்!  குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதியினர் தானும்  சந்தோசமாக வாழ்கிறார்கள் மற்றவர்களையும் ஆனந்தமாக வாழவைக்கிறார்கள்.








Wednesday, 26 August 2015

இமெயில் நாயகன் அய்யாதுரை ஜாதகம் - சிவ அய்யாதுரை ஜாதகம்

 இமெயில் கண்டுபிடிப்பாளர் அய்யாத்துரை ஜாதகம்
அய்யாதுரை ஜாதகம்
சிவா அய்யாதுரை ஜாதகம்
அய்யாத்துரை ஜாதகம்
சிவா அய்யாத்துரை ஜாதகம்



12ல் ஆட்சி பெற்ற குரு 4ம் இடம் பார்கின்ற காரணத்தாலும், 4க்குரியவர் சந்திரனே ஆனதாலும் அந்த சந்திரனுக்கு பலகிரகங்களின் சம்பந்தம்  இருந்ததாலும்  அந்த இடம் மிகவும் பலம் பெறுகிறது. . 9மிடத்திற்கும் இதுபோலவே பல கிரகங்களின் சம்பந்தம் உள்ளது. இதனால் அறில் சிறந்த தாயாலும் அறிவில் சிறந்த தந்தையாலும் மிகவும் நன்மைகளையும் வசதிகளையும் பெற்று இருப்பார்.  3மிடத்திற்கு ராகு சந்திரன் அந்த வீட்டின் அதிபதி புதன் இந்த கூட்டணி அவரை ஒரு ஆராய்சியாளராக ஆய்வாளராக ஆக்கியது. அந்த 3ம் இடத்துக்கு லக்னாதிபதி செவ்வாயின் பார்வை இருந்த காரணத்தினால் பல காரியங்களையும் துணிச்சலாக செய்யும் ஆற்றலையும் பெற்று இருப்பார். அறிவுக்குரிய 5க்குரிய சூரியனே 8ல் இருந்து 2ஐ பார்கின்ற காரணத்தினால் இவரது பேச்சால் அரசு அதிகாரிகளின் கண்டனத்துக்கும் அவர்களது கண்டிப்பிற்கும் ஆளாகியிருப்பார். இதனால்  அரசு அதிகாரிகளால் அவமானத்தை சந்திதிருப்பார்.  10ல் ஆட்சி பெற்ற சனி இருப்பதனாலும் மிகவும் பெயரும் புகழும் பெறும் யோகம் அமைந்தது. அந்த சனியின் பார்வை பெற்ற பலம் வாய்ந்த குருவே 9ம் இடத்துக்கும் அதிபதியானதாலும்  அந்த 9மிடத்துக்கு பல கிரகங்களின் சம்பந்தம் இருக்கின்ற காரணத்தாலும் அவர் மக்களிடையே நீங்காத புகழை பெறும் யோகம் அமைகிறது.

9ம் இடமே மக்கள் ஆதரவை பெறும் இடம்
1) குரு - இதுவே அந்த வீட்டின் அதிபதியாகும். ஆட்சிபெற்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
2) சனி - ஆட்சிபெற்ற பலம் வாய்ந்த சனி 9ம் வீட்டின் அதிபதியை பார்வை செய்கிறது
3) செவ்வாய்- இவரே லக்னாதிபதியாகியும் 9மிடத்திலே தங்கியிருக்கிறது
4) புதன் - அறிக்கு காரணகர்தாவாகியா புதன் 9ல் அமர்ந்திருக்கிறது
5) சுக்ரன் - இந்த ஜாதகரின்  இனிமையான அருமையான மற்றவர்களை கவர்ந்திழுக்கும் பேச்சுக்கு காரணமான இவரும் 9ல் அமர்ந்து இருக்கிறார். 
6) கேது ஆச்சரியபடுத்தும் விஷயங்களை அமர்களமாக செய்திட வழிகாட்டும் கேது  9ல் அமர்ந்து மக்கள் பயன்படுத்தும் இமெயில் கண்டுபிடிக்க காரணகர்தாவாகிறார்.
7. சூரியன் அறிவு ஸ்தானத்துக்கு அதிபதியாகி 9மிடத்தின் அதிபதி குருவின் பார்வை பெற்றதால் மக்கள் பயன்பெறதக்க வகையில் இவருடைய அறிவு உதவிசெய்கிறது.
8.சந்திரன் மனசுக்காரன் சந்திரனும் 9ம் இடத்தை பார்வை செய்து அந்த இடத்திற்கு பலம் சேர்க்கிறது
9. ராகு மர்ம, ரகசிய,ஆராய்சிக்கு காரணகர்த்தாவாகிய ராகுவும் 9மிடத்தை 
பாரக்கிறது.
இப்படி நவக்கிரகங்களும்/நவக்கிரஹங்களும் 9மிடத்துக்கு வலு சேர்கின்ற காரணத்தால் இவரகள் மக்களுக்கு பயன்தரதக்க வேலைகளில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள்.
 இமெயில் நாயகன் அய்யாதுரை ஜாதகம் - சிவ அய்யாதுரை ஜாதகம் 


Thursday, 13 August 2015

மோடி- பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்

பிரதமர் மோடியின் ஜாதக பலன் - மோடி ஜாதகம் ஒரு ஆய்வு
சிறந்த பதவி உச்ச புகழ் பெறும் யோகம்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவர்களின் ஜாதகம்மோடி
மோடி ஜாதகம்

 மோடி ஜாதகமும் - ஜோதிடம் - நரேந்திரமோடி ஜாதக ஜோதிட ஆய்வு
சுக்ரன் 10ல் இருப்பது பேரும் புகழை தந்திருக்க . அவனே 10க்கும் 10க்குரியோனாக இருப்பதும் பேரும் புகழும் மேலும் மேலும் பெருகிட காரணமாகிறது. 
சனி 10ல் இருந்திட 10க்குரியோன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. மேலும் 10க்கு 5க்குரியோன் பார்வை பெற்றது மேலும் சிறப்பு.
புதன் 10க்குரியோனுடன் சேர்ந்தும் ஆட்சி பெற்றும் உச்சம் பெற்றும் இருக்கிறது
கேது 10க்குரியோனுடன் சேர்க்கை
ராகு 10க்குரியோனை பார்வை செய்கிறது
குரு 10மிடத்தை பார்வை செய்கிறது
செவ்வாய் “10யைபார்க்கும் குருவை” பார்ப்பதுடன் 10க்கு 10மிடத்தையும் பார்க்கிறது. மேலும் செவ்வாய் ஆனது 10 க்கு 9க்குரியோனும் ஆனது இன்னும் சிறப்பம்சம் ஆகும்.
சந்திரன் 10க்கு 10மிடத்தை பார்வை செய்கிறது
எனவே அவர் அரசியலில் இறங்கி மக்களிடம் பெயரும் புகழும் பெற்றார். நவக்கிரஹம்ங்களும் அவர் புகழ் பெறக் காரணமாகியது
சந்திர மங்கள யோகம்
கஜகேசரியோகம்
புதஆதித்ய யோகம் ( சிறந்த கல்வி அதிக புத்திசாலிதனம் விவேகம் சிறப்பான பேச்சாற்றல் ஆகிய யோகங்களை தந்தது)
நீசபங்க ராஜ யோகம் சந்திரன் தரும் யோகம் இது
பஞ்சானன் யோகம். அல்லது பஞ்ச அனான யோகம் என்பது  (5கட்டங்களில் எல்லா கிரகங்களும் இருப்பது). இந்த யோகம் இருந்தால் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை ஆகியன தரும் யோகமாக இது இருக்கும். அதுவும் இவருக்கு 1,4,5,10,11 என்ற வீடுகளில் இருப்பது மிகச் சிறப்பான யோகமாகும்.

ஊச்சக யோகம்  லக்னாதிபதியான செவ்வாய் ஜாகத்தில் லக்னத்தில் ஆட்சி செய்வதால், பஞ்சமகா புருஷ யோகம்த்தில் ஒரு யோகமான ஊச்சக யோகம் இருக்கிறது.
சண்டாள யோகம்  மோடியின் ஜாதகத்தில் 10–ம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இதற்கு ‘‘சண்டாள யோகம்’’ என்று பெயர்.
இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது  வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.

7மிடத்துக்கு அதிபதி சுக்ரனுடன் சனி சேர்ந்த காரணத்தாலும், 7மிடத்தை சனி பார்க்கின்ற காரணத்தாலும்  உழைக்கும் மக்களின் முன்னேற்றதுக்கு உதவி செய்யவதில் ஆர்வம் பிறக்க காரணமும் ஆகியது. அதனாலேயே அவர் அரசியலில் கவனம் செலுத்தலானார். 5க்குரியோன் 5க்கு 12ல் அமைந்தது, 5ல் ராகு இருப்பது. 9மிடத்து அதிபதி நீசம் செவ்வாய்யுடன் சேர்க்கை பெற்று இருப்பது ஆகிய அம்சங்கள் பிள்ளைகள் இல்லாத நிலையை தந்தது.

திரு மோடி அவர்களின் சிறு வரலாறு
நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī,  பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர பொருளாதார வசதிபடைத்த குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி ஃகீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014-ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார். இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஜாதகம் - நரேந்திர மோடியின் ஜாதகம், மோடியின் ஜாதகம் - நரேந்திர மோடி ஜாதகம் -ஒரு ஆய்வு - மோடி ஜாதகம்

Wednesday, 5 August 2015

வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம்

வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம்
வாசிம் அக்ரம் ஜாதகம் - பிறந்த நேரம் துல்லியமானதாக கி்டைக்கவில்லை. அதனால் ராசியின் அடிப்படையில் ஜாதக பலன்களை ஆராய்வோம்.
வாசிம் அக்ரம் ஜாதகம்

இவரது ஜாதகத்தில் ராசிக்கு 8ம் இடம் மிகவும் வலுவாக காணப்படுகிறது. இது துன்பத்திகு உரிய கட்டமாகும் 6ம் இடம் எதிரிகளைக் குறிப்பிடும். இங்கு இவரது ஜாதகத்தில் 6மிடத்து அதிபதியும் (இவரே ராசி அதிபதியும் கூட) 8மிடத்து அதிபதியும் சேர்ந்து 7ல் இருக்கிறது. சோகத்தை தரும் சுக்கிரன் எதிரிக்கான 6மிடத்தில் இருந்திட எதிரிக்கான 6க்குரியோன் செவ்வாய் 8க்கான புதனுடன் சேர்க்கை. எதிரிகளால் துன்பமும் சோகமும் அவமானமும் படவேண்டிய ஜாதகமாக இது இருக்கிறது. இவருக்கு தற்போது நடக்கும் தசாபுத்திகள் இவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் உயிர் தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 6,8க்குரியோனுடன் ராகுவும் சேர்ந்திருக்கிறது. ராகு மர்மத்திற்குரியோன். இரகசிய சதிதிட்டத்திற்குரியோன். இவனுடன் ரத்தத்திற்குரிய செவ்வாய் சேர்ந்தது ரகசிய சதி திட்டமிடல் இடம் பெறும் யோகம் அமைகிறது. அந்த ராகுவே திடீர் சம்பவங்களுக்கும் காரணகர்த்தா. 7ல் பலகிரகங்கள் இருந்ததால் இரண்டு திருமணம் செய்யும் நிலை அமைந்தது. 5ல் இருக்கும் சனியே 7யை பார்த்த காரணத்தாலும் சந்திரனுக்கு ராகு புதன் செவ்வாய் சம்பந்தம் ஏற்படுகிற காரணத்தாலும் காதல் செய்யும் யோகம் தந்தது.  12க்குரியோன் சுக்ரன் 6க்கு சென்று 12 பார்க்கின்ற காரணத்தினாலும் அந்த 12மிடத்தை குரு பார்வையிடுகின்ற காரணத்தாலும் முன்னால் மனைவிக்கு புற்று நோய் வர காரணமாக இருந்தது. இவருடைய 6ம் இடத்து அதிபதி செவ்வாய் ரத்தத்துக்குரியோன் 6ல் சுக்ரன் இவர்களுடைய கூட்டணி அவருக்கு சர்க்கரை நோயை தந்தது.

கராச்சியில் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கராச்சியில் இன்று, அடையாளம் தெரியாத நபரால் அவர் சுடப்பட்டார். தன் மீது நடந்த இந்தக் கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பிவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு அக்ரம் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.  கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

வாசிம் அக்ரம் பற்றிய சிறு வரலாறு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆவார். இவர்  வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது அக்ரமின் 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயையும் வென்று கிரிக்கெட்டில் சாதித்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருந்தது கிடையாது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் ஹியூமாவை புற்றுநோய் தாக்கியது. இவரை காப்பாற்ற வாசிம் அக்ரம் கடும் முயற்சி மேற்கொண்டார். எனினும் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில்தான் ஹியூமாவின் உயிர் பிரிந்தது. அதற்கு பின் 4 ஆண்டுகளாக வாசிம் அக்ரம் மறுமணம் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளையும் அவரே வளர்த்து வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷெனிரா தாம்ப்சனுடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை கடந்த 2013ஆம் ஆண்டு வாசிம் அக்ரம் திருமணம் செய்தார்.. எனக்காக மட்டுமில்லையென்றாலும் எனது குழந்தைகளுக்காக மறுமணம் அவசியம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார். ஓய்வுக்கு பின் கிரிக்கெட் வர்ணணையாளளராக பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர், பேஷன் பேரேடுகளில் பங்கேற்பதிலும் ஆர்வம்  கொண்டிருந்தார்.  கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஃபேஷன் பேரேடுகளில் பங்கேற்று  வந்த அக்ரம் நேற்று கராச்சியில் தனது மனைவியுடன் ஃபேஷன் பேரேடில் கலந்து கொண்டார். கராச்சி நகரில் நடந்த பிரிடல் ஃபேஷன் பரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையில் வலம் வந்த புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.



கார்த்திக் ஜோதிடம் - வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி  கார்த்திக் ஜோதிடம்
 ஜோதிட ஆராய்ச்சி  கார்த்திக் ஜோதிடம் வசீம் அக்ரம் சுடப்பட்டார்

Monday, 3 August 2015

ஜோதிடம் ஆராய்ச்சி - ரூ 500 கோடி வசூல்! சொன்னது சரியானது!- நடந்ததும் அதன்படியே ஆனது! சாதனை படைத்தது!


இன்றைய காலகட்டத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையை அறிந்து மக்களின் மனம் பாகுபலி படத்தை எந்த அளவுக்கு விரும்புவார்கள் என்று கணக்கிட்டு நாம் சொன்னது போலவே அந்தப் படம் சாதனை படைத்துள்ளது. நாம் ஏற்கனவே சொன்னதை அறிய விரும்பினால் அந்தப் பகுதியை காண  பாகுபலி - சினிமா விமர்சனம் - மற்றும் இது குறித்த ஜோதிட ஆராய்ச்சி என்ற லிங்கை கிளிக் செய்து அந்தப் பகுதியை படித்துப் பார்க்கவும்.

பாகுபலி ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை!
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஆன ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  உலக அரங்கில் முதல் தென்னிந்திய படமாக 500 கோடியை வசூல் செய்துள்ளது என ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு உலக அளவில் 2.83 பில்லியன் டாலர் வசூல் செய்த எந்திரன் திரைப் படம்தான் சாதனையாக இருந்தது.  ‘பாகுபலி’ படம் அந்த சாதனையை முறியடித்து 3 பில்லியன் டாலர் வசூல் பண்ணியிருக்கிறது. இந்தி மொழியில் மட்டும் 100 கோடியை இந்தப்படம் எட்டப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  baahubali

ஜோதிடம் ஆராய்ச்சி - ரூ 500 கோடி வசூல்!  சொன்னது சரியானது!- நடந்ததும் அதன்படியே ஆனது! சாதனை படைத்தது!

Wednesday, 29 July 2015

திருமண பொருத்தம் அட்டவணை

மணமகளுக்கு பொருத்தமான மணமகன் ராசிகளை கண்டறிய கீழே உள்ள ராசிகளில் பெண்ணின் ராசியை கிளிக் செய்யவும்(இன்னும் தயாராகவில்லை)
அசுவினி பரணி கார்த்திகை ரோகினி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம்
மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுசம் கேட்டை
மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சத்தியம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
மணமகனுக்கு பொருத்தமான மணகள் ராசிகளைக் கண்டறிய கிழே இருக்கும் ஆணின் ராசியை கிளிக் செய்யவும். (இன்னும் தயாராகவில்லை)
அசுவினி பரணி கார்த்திகை ரோகினி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம்
மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுசம் கேட்டை
மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சத்தியம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

அப்துல் கலாம்- முன்னால் ஜனாதிபதி - ஜோதிட ஆராய்ச்சி - ஜாதகம்

முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஜாதகம் மற்றும் அதற்கான பலன்கள்:

abdul kalam

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் - இவர் முன்னால் குடியரசு தலைவர் -
தமி்ழ் நாடு - ராமேஸ்வரம் எனற் ஊரில் பிறந்தார்.  லக்னத்தில் குருவும் அந்த லக்னாதிபதி 5ம் வீடான சந்திரனில் இருந்த காரணத்தினால் அழகாகவும், அற்புத ஆற்றல்களுடனும் பிறந்தார். பழகுபவர்களிடம் நேசம், நட்பு, குழந்தைகளிடம், இளைஞர்களிடம் ஒரு அதீதப் பிடிப்பு, அன்பு, வாஞ்சை, சீரிய கடமை உணர்வு, குரு பக்தி, பொறுப்புணர்வு, உழைப்பு, நேர்மை என பல நற்குணகளையும் லக்னத்தில் இருக்கும் குரு அவருக்கு தந்தது. கஷ்டப்படுபவர்களைக் கண்டால் இளகும் மனம் லக்னாதிபதி சந்திரன் அவருக்கு தந்தது. குருவே சாஸ்திரங்களுக்கு உரியோன். எனவே அவர் இந்து ,முஸ்லீம்,  கிருத்துவ மதங்களின் நூல்களான குர்ரான், பகவத்கீதை, பைபிள் ஆகியன படித்து அறிந்திருந்தார். 2க்குரிய சூரியன் 3க்குரிய ஆட்சி பெற்ற புதனுடன் சேர்ந்து இருந்ததனால் நன்கு படிப்பறிவும் விவேக அறிவும் சீரிய சிந்தனையும் பெற்று இருந்தார். நுண்கணித அறிவிலும் மேம்பட்டிருக்க இந்த அமைப்பு அவருக்கு துணை செய்தது. அத்துடன் ராகு பார்வையும் பெற்று இருந்த காரணத்தினால் எதையும் நுணுகி ஆராயும் வல்லமையை அவருக்கு தந்தது. புத்திசாலிதனத்துக்குரிய 5மிடத்து அதிபதி 4ல் ஆட்சி பெற்ற சுக்ரனுடன் சேர்ந்த காரணத்தினாலும் , லக்னாதிபதி சந்திரனே 5ல் அமர்ந்த காரணத்தினாலும் லக்னத்தில் இருக்கும் குருவே அந்த 5மிடத்தை பார்க்கிற காரணத்தினாலும் அவரது புத்திசாலிதனம் மிகவும் அபாரமாக இருந்தது. 3மிடத்தில் புதன் சூரியன் கேது சேர்க்கை, அதற்கு சனியின் பார்வை , குரு பார்வை பெற்ற ராகுவின் பார்வை என மிகவும் வலுவாக இருக்கின்ற காரணத்தினால் அவரது ஆராய்ச்சியில் வெல்லும் வல்லமையை அபாராமாக தந்தது இவ்வமைப்புக்கள். இதனால்தான் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், (ISRO) ஆகியவற்றில் விண்வெளி பொறியாளராக வேலை செய்தார். இந்திய ஏவுகணை நாயகன் என்று பலராலும் புகழப்பட்டார். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் பேராதரவுடன் இந்திய குடியரசு தலைவர் ஆனார். இவர் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருது பெற்று இருக்கிறார். 10மிடத்துக்குரியோன் செவ்வாய் ஆட்சிபெற்ற சுக்ரனுடன் சேர்ந்த காரணத்தினாலும், அந்த 10மிடத்தையே பார்க்கின்ற காரணத்தாலும் அவர் பெயரும் புகழும் நிரம்பப் பெற்றார்.
abdul kalam

Monday, 27 July 2015

இணைத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

உதாரணமாக நடிகை நயன்தாரா பிறந்தாநாள் தேடினால் ஒரு வெப்சைடில் 18-11-1985 என்றும் , 8-11-1984என்றும்,18-11-1984 என்றும் கிடைக்கின்றன.  இப்படி தேதிகள் தவறாகவோ அல்லது வருடங்கள் தவறாகவோ அல்லது மாதங்கள் தவறாகவோ இருந்தால் எதை சரியென்று எடுத்துக் கொள்வது குழப்பமாகத்தானே இருக்கும்.

உதாரணத்திற்கு மாறுபட்ட தகவல்களை தெரிவிக்கும் லிங் மூன்று இங்கே தரப்பட்டுள்ளன.
https://ta.wikipedia.org/wiki/நயன்தாரா
நயன்தாரா பிறப்பு - நவம்பர் 8, 1984;
http://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=22&cat=2
18 நவம்பர் 1984
http://www.astrosage.com/celebrity-horoscope/nayanthara-horoscope.asp
18-11-1985
நடிகை நயன்தாரா ஜாதகம்



தினமலர்
dinamalar

விக்கிபீடியா
wikipedia

Sunday, 26 July 2015

ஜாதகம் - நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு மரணம் ஏற்படக் காரணம் என்ன?

ஆயள்காரகன் பலம் இருந்தும் மரணம் நேரக் காரணம் என்ன?
தெலுங்கு நடிகை அகர்வால் ஜாதகம்
 Astrology vijayawada
 பிற‌ப்பு முத‌ல் இற‌ப்பு வரை எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான். அதுபோலத்தான் அகால மரணமும். காக்கையர் நாடி போன்ற பழைய நூல்களில் வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறப்பான், தன்னைத்தானே மாய்த்துக் கொள்வான், விஷத்தால் இறப்பான், தீயால் இறப்பான் என்பது போன்ற கொடூர மரணங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. சிரசு எடுக்கப்பட்டு மரணமடைவான் என்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. இந்த லக்னத்தில், இந்த ராசியில், இந்த திதியில் பிறந்தவன் இந்த லக்னத்தில், இந்த திதியில் மாலைப் பொழுதில் இந்த நொடிப் பொழுதில் இறப்பான் என்றும் கூறப்பட்டுள்ளது.  ஜாதகத்தில் எடுத்துக் கொண்டால் ஆயுள் பாவம் என்று ஒன்று உள்ளது. 8வது இடம்தான் ஆயுள் பாவம். அதாவது ஜென்ம லக்னத்தில் இருந்து 8வது இடம் ஆயுள் பாவம். பொதுவாக ஆயுளுக்குரிய கிரகமாக சனி அதாவது ஆயுள் காரகன். ஆயுள் ஸ்தானத்திற்குரிய கிரகமோ அல்லது சனியோ வலுவாக இருந்தால் தீர்க்காயுசு யோகம் என்கிறோம்.8வது வீட்டிற்குரியவனும் கெட்டு, சனியும் கெட்டிருந்தால் குறையாயுள் யோகம். துர்மரணம் ஏற்படும். இனி ஆர்த்தி அகர்வால் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்வோம்.
ஆயுள் பலத்துக்குரிய சிறம்பம்சங்கள்
1.) 8க்குரியோனே ஆயுள்காரகன் சனியாக அமைந்திருப்பது
2.) அந்த 8க்குரியோன் உச்சம் பெற்றது மேலும் சிறப்பே

ஆயுள் பலத்துக்கு பாதகமான அம்சங்கள்
1.)  உச்சனை உச்சன் பார்த்தால் நீச யோகம் ஏற்படும்.  இங்கு உச்சம்பெற்ற  8க்கான சனியை உச்சம் பெற்ற சூரியன் பார்வை செய்கிறது. இது ஆயுள்பலத்தை குறைக்கிறதென்றால் அந்த சூரியனுடன் சேர்ந்திருக்கும் செவ்வாயே அந்த வீட்டின் அதிபதியாகவும் இருப்பதால் இன்னும் சூரியன் மிகவும் வீரிய பலம் பெருகிறான். அத்தகைய வீரிய பலத்தினால் மேலும் சனியின் பலம் குறைந்து போகிறது.  ஆக 8மிடம் வெகுவாக பலம் குறைந்து விட்டது.

 லக்ன பலம்  லக்னாதிபதி விரயத்தில் இருக்கிறது ஆக லக்னபலம் குறைந்துவிட்டது் அப்புறம் விரயாதிபதியே லக்னத்தில் இருக்கிறது இது இன்னும் அதிகப்படியாகவே லக்னபலத்தை குறைக்கும். இதனால் மேலும் லக்ன பலம் குறைந்து மிகவும் வீக்காக போய்விட்டது.

பூர்வ ஜென்ம புண்ணிய பலம்   அந்த பூர்வஜென்ம புண்ணிய ஸ்தானத்தில்தான் உச்சனை உச்சன் பார்த்து நீச யோகம் ஏற்பட்டு இருந்து பலத்தை குறைத்து இருக்கிறது. போதாக்குறைக்கு அந்த வீட்டின் அதிபதி சுக்கரன் இருக்கும் வீட்டின் அதிபதியும் விரய ஸ்தானத்தில்தான் இருக்கிறது. அதனால் பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமும் பலம் குறைந்தே உள்ளது. 8ல் இருக்கும் சந்திரனே ஆயுளுக்கு கொஞசம் பலனை தருகிறது.

நோய் ஸ்தானம் அறிதல்: 6மிடத்திலே குரு இருக்கின்றது. இவரே இதயத் தசைகளுக்கும் மாரடைப்புக்கும் காரணகர்த்தா. இவரே நோய் ஸ்தானத்தில் இருந்து நோயை உருவாக்குகிறார். இதனால் இந்த ஜாதகர் பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளையும் கொழுப்பு சத்து மிகுந்த உணவுப்பொருட்களையும் உண்ண நேரிடும்.  இதன்காரணமாகவே உடல் பெருக்கின்றது. அந்த வீட்டின் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று உள்ளதுடன் உச்சம்பறெ்ற சூரியனுடன் சேர்க்கை பெற்றும் உள்ளது அதனால் அவர் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களையும் காரம் சார்ந்த உணவுப் பொருட்களையும் உண்டிருப்பார். இதனால் அது மேலும் நோயை அதிகரிக்கும் நிலையையே ரத்தஅணுக்களில் உருவாக்கும். இது இந்தவகையான ஜாகத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. அப்புறம் அந்த குருவை புதன் பார்க்கிறார். அந்த புதன் சுவாசத்துக்கு காரணமான நுரையீரலையும் உடலிலுள்ள தோல் மற்றும் நரம்புகளையும் குறிக்கும். மூச்சு திணறல் என்பது நுரையீரல் சார்ந்த நோய் ஆகும். ஆக அவரும் நோய் ஸ்தானத்தை பார்பதால் புதனுக்குரிய நோய்களையும் உருவாக்குவார். அவரே லக்னத்துக்கு அதிபதியும் கூ்ட எனவே ஜாதகரே அந்த நோய் தீவிரமாகவும் காரணமாகிடுவார் என்றாகிறது.  அந்த லக்னத்திலேயே புத்திசாலிதனத்துக்குரிய சுக்ரன் அமைய சுக்ரனும் புதனும் பரிவர்த்தனை செய்கிறது. ஆக புத்திசாலிதனமும் நோய் அதிகமாகும் காரியங்களிலே ஈடுபடும் என்று தெரிகிறது. இனி ஆர்த்தி அகர்வால் வரலாறு எப்படி இவைகளுடன் பொருந்துகிறது என்று பாருங்கள்.


ஆர்த்தி அகர்வால் வரலாறு
‘பம்பரக்கண்ணாலே’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால். இவர் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது 14-வது வயதில் இந்தி நடிகர் சுனில் ஷெட்டி அவரை பார்த்து அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடந்த ஒரு நட்சத்திர விழாவில் நடனம் ஆடும்படி அழைத்தார். அந்த விழாவில் அவரது நடனம் இந்தி பட உலகினரின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சுனில் ஷெட்டி அவரது தந்தையிடம் இந்தி படங்களில் நடிக்க ஆர்த்தி அகர்வாலை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். 2000-ம் ஆண்டில் அவர் தனது 16-வது வயதில் ‘பாகல்பன்’ என்ற இந்தி படத்தில் முதலாவதாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 2001-ம் ஆண்டில் ‘நூவு நாகு நச்சாவ்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஆர்த்தி அகர்வால் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘வசந்தம்’, ‘அந்தால ராமுடு’, ‘அடவி ராமுடு’, ‘இந்திரா’, உள்பட 25 தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். அவரது படங்கள் அனைத்தும் அங்கு தொடர்ந்து வெற்றிபெற்றன. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ்பாபு, ரவிதேஜா, தருண், ராஜசேகர் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். ‘ரணம்-2’ என்ற தெலுங்கு படத்தில் 2005-ம் ஆண்டு கடைசியாக நடித்தார்.2005-ம் ஆண்டு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் கோமா நிலைக்கு சென்று சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார். அதற்கு பின்னர் அவர், திரையுலகை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார். 2007-ம் ஆண்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் உஜ்வால் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அழகு, பணம், திறமை எல்லாம் இருந்தும் சிலருக்கு நிம்மதி மட்டும் இருக்காது. அதுவும் நடிகையின் வாழ்க்கை, புகழ் எனும் போதையில் சூழ்ந்தது. பரபரப்பான வாழ்க்கை முறை, ஷூட்டிங், ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் பாராட்டு என்று லைம்லைட்டில் இருந்துவிட்டு சும்மா இருக்க நேர்ந்தால் அது பெரும் அவஸ்தையாக இருக்கும். ஆடிய காலும் பாடிய வாயும் ஓயாது என்று ஒரு சொலவடை உண்டு. திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதால் கணவரைப் பிரிந்தார் ஆர்த்தி. அடுத்து? சினிமா வாய்ப்புகளைத் தேடி ஹைதராபாத்துக்குத் திரும்பினார்.

முதல்முறை ஹைதராபாத்துக்கு வந்தபோது கிடைத்த வரவேற்புக்கும் இப்போது அதேபோல அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியபோது நடந்துகொண்ட விதத்துக்கும் பெரும் வித்தியாசம் தென்பட்டது. இந்தமுறை யாரும் அவரைச் சீந்தவில்லை. காரணம் ஏற்கனவே பூசிய உடம்பாக இருக்கும் ஆர்த்திக்கு சில வருடங்களில் உடல் எடை அதிகரித்துவிட்டதுடன் வயதும் கூடிவிட்டதால் ஹீரோயினாக யாரும் அவரைக் கருதவில்லை. ஆர்த்தி முயற்சி செய்து பார்த்தார். தன்னுடைய உடல் எடையைக் குறைக்க டயட்டிங் போன்ற விஷயங்களில் தீவிரமானார். மீண்டும் திரையில் தோன்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் அவரால் பழைய அழகை மீட்டுக்கொண்டு வரமுடியவில்லை. என்ன முயன்றும் பலன் பெரிதாக இல்லை. உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக சில திரைத்துறை நண்பர்கள் கூறவே அதை நம்பி மேலும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்க்கத் தொடங்கினார்.  ஒரு பெரிய திட்டத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு அட்லாண்டிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் லிப்போசக்‌ஷன் எனும் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். அவர் கால்களில், இடுப்புப் பகுதிகளில் கைகளில் உள்ள தேவையற்ற கொழுப்பை உறிஞ்சி எடுக்கும்படியான லிப்போசக்‌ஷன் எனும் கொழுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஆனால் அதன் பின் சில மாதங்களில் மீண்டும் உடல் எடை அதிகரிக்கவே மீண்டும் அதே அறுவைச் சிகிச்சைக்குத் தன் உடலை உட்படுத்தினார். கடைசியாக நான்காவது முறை செய்ததன் காரணமாகவே, கடந்த சில நாள்களாக மூச்சுத்திணறலால் அடிக்கடி அவதிப்பட்டார். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை பெறுவதற்காக அதே மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  லிப்போசக்‌ஷன் செய்யும் போது கொழுப்பு குமிழ் போன்று ஏற்பட்டு இதயத்தில் சென்று அடைத்துவிட, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோக நேர்ந்துள்ளது. உடல் மெலிந்திருந்தால் தான் அழகு என்ற இலக்கணத்தை திரைப்படதுறையினர் நம்புவதால் வந்த வினை இது.   பட அதிபர்களும், மீடியாவும் ஆர்த்தியின் உருவத்தைப் பற்றிய கிண்டலை செய்யாமல் இருந்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஒல்லி இடுப்பு தான் அழகென்று நம்பும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


ஆர்த்தி அகர்வால்

Saturday, 25 July 2015

காதல் திருமணம் யாருக்கு அமையும்? ஜாதகப்படி கலப்பு திருமணமா ?

ஜாதகப்படி காதல் திருமணமா?  கலப்பு திருமணமா ? ஜோதிடம் -  காதல் திருமணம் நடக்குமா?
காதல் திருமணம்
 “இளமையில் திருமணம், காதல் திருமணம், தடைபடும் திருமணம், திருமணமின்மை, கணவன்/மனைவியின் ராசி/லக்கினம் அறிதல், தாமதமாகும் திருமணம், மதம்/ஜாதி மாறி திருமணம், கணவன்/மனைவியின் பெயர் அறிதல்,ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், காதல் தோல்வி,குடும்பத்தில் குழப்பங்கள், ஜாதகப் பொருத்தம்,தற்காலிகப் பிரிவினை, திருமணப் பொருத்த சூட்சுமம், விவாகரத்து, திருமணம் நடைபெறும் காலம் ” இப்படி திருமணம் பற்றிய ஏராளமான விஷயங்களை அறியவேண்டுமானால் 7மிடத்தை முக்கியமாக கொண்டு அது சார்ந்து மற்ற கட்டங்கள் எப்படி இருக்கிறது என்று ஆராய வேண்டும்.


அமலாபால் ஜாதகத்தை பார்க்கவும் மனசுக்குரிய சந்திரன் காதலுக்கே உரிய சுக்ரன் வீட்டில் இருப்பதை காணலாம். லக்னத்தில் ராகு இருந்தால் இனம் மாறி திருமணம் செய்ய துணிச்சல் ஏற்படும். லக்னாதிபதி காதலுக்குரியோனாகிய சுக்ரனுடன் சேர்ந்ததோடு அல்லாமல் 5ம் இடத்தையும் பார்வை செய்கிறார். அந்த சுக்ரனின் மற்றொரு வீட்டில்தான் 5க்குரிய செவ்வாயும் அமர்ந்து இருக்கிறார்.7க்குரிய புதன் 11ல் இருந்து 5யை பார்பதோடு 5க்குரியோனுடன் சேர்க்கையும் பெற்று உள்ளது. எனவே தனது சுயபுத்தி உணர்வாலேயே வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அமைந்தது.

கிரீடம், பொய் சொல்லப்போறோம், மதராச பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், விஜய். இவர் டைரக்டு செய்த தெய்வத்திருமகள், தலைவா ஆகிய 2 படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அதற்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதித்தார்கள்.

இதைத்தொடர்ந்து கேரளாவில் உள்ள அமலாபால் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று இருவரும் பிரார்த்தனை செய்தார்கள்.

திருமணம்

டைரக்டர் விஜய்-அமலாபால் திருமணம் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில்  நடந்தது.  காலை 10-25 மணிக்கு அமலாபால் கழுத்தில், விஜய் தாலி கட்டினார். புரோகிதர்கள் மந்திரம் ஓத, வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. நடிகர்கள் விக்ரம், ஆர்யா, பொன்வண்ணன், நடிகை சரண்யா, டைரக்டர்கள் பாலா, சமுத்திரகனி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார், அவருடைய மனைவியும் பாடகியுமான சைந்தவி, பட அதிபர்கள் பஞ்சு அருணாசலம், சுப்பு பஞ்சு, யு.டி.வி. தனஞ்செயன் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
அமலாபால் நடித்த படங்களின் விவரங்கள்


2009 நீலதம்ரா பீனா மலையாளம்
2010 வீரசேகரன் சுகந்தி தமிழ்
2010 சிந்து சமவெளி சுந்தரி தமிழ்
2010 மைனா மைனா தமிழ் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான விஜய் விருது
2011 இது நம்முடே கதா ஐஸ்வர்யா மலையாளம்
2011 விகடகவி கவிதா தமிழ்
2011 தெய்வத் திருமகள் சுவேதா ராஜேந்திரன் தமிழ்
2011 பெஜவாடா கீதாஞ்சலி தெலுங்கு
2012 வேட்டை ஜெயந்தி தமிழ்
2012 காதலில் சொதப்புவது எப்படி பார்வதி தமிழ்
2012 லவ் பெய்லியர் தெலுங்கு
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் சாருலதா தமிழ்
2012 ஆகாஷின்டே நிறம்
மலையாளம்

நடிகைகள் ஜாதகங்கள்

இங்கு தரப்பட்டுள்ள ஜாதகங்கள் அனைத்தும் இணைய தளங்களில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஆதாரப்பூர்வமானதல்ல.

அஞ்சலி ஜாதகம் என்ன சொல்லுது?

அஞ்சலி ஜாதகம்
anjali jathagam
anjali

























அமலாபால் - அமலா பால் - amala paul - ernakulam
























ஆர்த்தி அகர்வால்  விஜயவாடா vijayawada
ஆர்த்தி அகர்வால்





Thursday, 23 July 2015

விக்ரம் - நடிகர் விக்ரம் - சியான் விக்ரம் - ஜாதகம் - யோகம்


விக்ரம் - நடிகர் விக்ரம் -  சியான் விக்ரம் - ஜாதகம் - யோகம்

இவருடைய இயற்பெயர் விக்ரம் கென்னெடி வினோத் ராஜ் என்பதாகும். இவருடைய அம்மா, ஒரு சப்-கலெக்டர் மற்றும் புகழ்பெற்ற நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்களின் சகோதரியும் கூட. அவரது மகனான நடிகர் பிரசாந்த், விக்ரமின் நெருங்கிய உறவினராவார்.

. ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார். லக்னாதிபதி 10மிட குருவோடு பரிவர்த்தனை பெற்ற காரணத்தினால் இவர் இவ்வாறு பெயரும் புகழும் பெற்றார்.

தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த இவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கற்பனைக்குரியோன் சந்திரனும் கலைக்குரியோன் சுக்ரனும் இணைந்து  சனியின் வீட்டில் (9) இருக்கின்ற காரணத்தினால் உழைக்கும் மக்களின் மாபெரும் ஆதரவைப் பெற்றார். அந்த சனியோ பத்தில் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்கின்ற காரணத்தினால் அந்த மக்களிடம் பெரும் புகழ் பெற்றார். அந்த கலைக்குரிய சுகரனின் 12வது வீட்டில் ராகு அமையப் பெற்றதால் வித்தியாசமான வடிவம் உடைய முகபாவனையிலும்  அவர் பெரும் துயரத்துடன் (துன்பத்துடனும்)  நடிக்கும் சூழல் அமைந்தது.

 2மிட சந்திரன் சுக்ரனுடன் சேர்ந்த காரணத்தினால் பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். 9மிடத்திலே சுக்ரனும் சந்திரனும் அமையப்பெற்றதாலும் அந்த 9மிடத்து அதிபதி 10லே லக்னத்துடன் அமைய்ப் பெற்றதாலும் மக்களின் நலனுக்காகப் பல சமூக நலத் தொண்டுகளைத் தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வருகிறார்.  ‘சஞ்சீவனி டிரஸ்ட்’ மற்றும் ‘வித்யா சுதா’ ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகிறார்.

நோய் தரும் கேது விபத்துக்கான செவ்வாயின் வீட்டில் இருந்த காரணத்தால் கல்லூரிக்குத் தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி  23 அறுவை சிகிச்சை மேற்கொண்டார். மூன்றாண்டுகள் படுக்கையிலே இருந்தார்.

7க்குரிய குரு லக்னத்தில் அமைந்தது அவருக்கு சிறப்பான நற்குணம் வாய்ந்த மனைவி அமையக் காரணமாக இருந்தது.  அந்த குருவும் , 5மிட சுக்ரன்  9ல் சந்திரனுடன் சேர்ந்திருக்க அதை குரு  பார்வையிட  ஒரு மகனும் (தருவ்) மகளும் (அக்ஷிதா) பிறந்தனர்.


ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1990 என் காதல் கண்மணி வினோத் தமிழ்
1991 தந்துவிட்டேன் என்னை ராஜு தமிழ்
1992 காவல் கீதம் அசோக் தமிழ்
மீரா ஜீவா தமிழ்
1993 துருவம் பத்ரன் மலையாளம்
சிருநவ்வுலா வரமிஸ்தாவா
தெலுங்கு
மாஃபியா ஹரி ஷங்கர் மலையாளம்
1994 சைன்யம் கேடட் ஜீஜி மலையாளம்
பங்காரு குடும்பம்
தெலுங்கு
புதிய மன்னர்கள் சத்யமூர்த்தி தமிழ்
1995 ஸ்ட்ரீட்
மலையாளம்
அடல்லா மாஜகா
தெலுங்கு
1996 மயூர ந்ரிடம்
மலையாளம்
ஊஹா மோகன் தெலுங்கு
அக்கா பாகுன்னாவா
தெலுங்கு
மெருபு
தெலுங்கு
இந்திரப்ரஸ்தம் பீட்டர் மலையாளம்
ராசபுத்திரன் மனு மலையாளம்
1997 இது ஒரு சிநேஹகதா ராய் மலையாளம்
உல்லாசம் தேவ் தமிழ்
குரல்ல ராஜ்ஜியம்
தெலுங்கு
1998 கண்களின் வார்த்தைகள்
தமிழ்
1999 ஹவுஸ் புள் ஹமீது தமிழ்
சேது சியான் (எ) சேது தமிழ் வென்றவர்: சிறந்த நடிகர், தமிழ் நாடு மாநில பட விருது (சிறப்பு பரிசு)
2000 ரெட் இந்தியன்ஸ்
மலையாளம்
2001 இந்த்ரியம்
மலையாளம்
நேலாலு வீரேந்திரா தெலுங்கு
யூத்
தெலுங்கு
விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம் தமிழ்
தில் கனகவேல் தமிழ்
காசி காசி தமிழ் வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2002 ஜெமினி ஜெமினி தமிழ் வென்றவர்: ஐ டி எப் எ சிறந்த நடிகருக்கான விருது
சாமுராய் தியாகராஜன் தமிழ்
கிங் ராஜா சண்முகம் தமிழ்
2003 தூள் ஆறுமுகம் தமிழ்
காதல் சடுகுடு சுரேஷ் தமிழ்
சாமி ஆறுசாமி தமிழ் பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பிதாமகன் சித்தன் தமிழ் வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது
2004 அருள் அருள்குமரன் தமிழ்
2005 அந்நியன் இராமானுசம்
அந்நியன்
ரெமோ
தமிழ் வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
மஜா அறிவுமதி தமிழ்
2008 பீமா சேகர் தமிழ் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2009 கந்தசாமி கந்தசாமி தமிழ் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2010 ராவணன் வீரையா தமிழ் தெலுங்கு மொழியாக்கப்பட்டு வெளிவந்தது;வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
ராவன் தேவ் பிரதாப் சர்மா இந்தி
2011 தெய்வத்திருமகள் கிருஷ்ணன் தமிழ் வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2011 ராஜபாட்டை 'அனல்' முருகன் தமிழ்
2012 தாண்டவம் சிவா தமிழ் பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2013 டேவிட் டேவிட் இந்தி தெலுங்கு மற்றும் தமிழ் மொழியாக்கப்பட்டு வெளிவந்தது
2015 ஐ லீ (எ) லிங்கேசன் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழியாக்கப்பட்டு வெளிவந்தது; விக்ரமின் ஐம்பாதாவது திரைப்படம்
2015 10 எண்றதுக்குள்ள 
தமிழ் படமாக்கப்பட்டு வருகிறது
2015 மர்ம மனிதன்
தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது