menu

Monday 13 July 2015

பாகுபலி - சினிமா விமர்சனம் - மற்றும் இது குறித்த ஜோதிட ஆராய்ச்சி ( bahubali )


பாகுபலி - சினிமா விமர்சனம் - மற்றும் ஒரு ஜோதிட ஆராய்ச்சி ( bahubali )

எதிரியால் மன்னன் கொல்லப்படுவதும், அவனது மனைவி சிறை வைக்கப்படுவதும் அப்புறம் அவர்களின் பிள்ளை விசுவாசிகளால் காப்பாற்றப்பட்டு படகு ஓட்டுகிறவன் ,குதிரை ஓட்டுகிறவன், தேர் ஓட்டுகிறவன் போன்ற யாரிடமாவது வளரும். அப்புறம் அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி படையை திரட்டி எதிரியை வென்று, தாயை சிறையிலிருந்து மீட்டு ஆட்சியை கைப்பற்றும் என காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் ஒரு எளிமையான கதை மாதிரியே பாகுபலி கதையும் இருக்கிறது.  இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை எத்தனையோ அதி சாகசக் கதைகள் புதைந்து கிடக்கின்றன என்பது நமக்கு தெரிந்ததே. கரிகாலன்கள், ராஜராஜன்கள், மருது சகோதரர்கள், மகாபலிகள், புலிகேசிகள், அசோகர்கள், கனிஷ்கர்கள் என வம்சங்கள் பல ஆராய்ந்தால்   கிடைக்கும் கதைககள் கொஞ்சநஞ்சமல்ல. அவைகளுக்கு  நிகராக எத்தனை அதியுச்சக் கற்பனைகளும் இருக்க முடியாது என்பதும் நாம் அறிந்தது. இந்த படத்தில் அப்பா, மகன் என்று பிரபாஸுக்கு இரண்டு வேடங்கள். மகன் கைக்குழந்தையாக இருக்கும்போது எதிரியிடமிருந்து சிவகாமி என்ற பெண்ணால் (ரம்யா கிருஷ்ணன்) காப்பாற்றப்படுகிறான்.


          பழங்குடியினரிடையே பலசாலியாக வளரும் பிரபாஸ்க்கு தான் யார் என்பது தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம், சாகும்போது சிவகாமி கைக்காட்டிச் சென்ற அருவி விழும் பிரமாண்ட மலை மட்டும்தான். பெரியவனான பிறகு அந்த மலை மீது ஏற முயற்சிக்கிறான் பல முறை. அந்த முயற்சி ஒன்று ஒரு காதலை பெற்றுத் தருகிறது. அந்தப் பெண்ணின் (தமன்னா) மீதுள்ள ஈர்பினால் மலையை கடந்து எதிரியின் நாட்டுக்கு வருகிறான். அங்கு மன்னனும் (ராணா டகுபதி) அவனது தந்தையும் (நாசர்) மக்களை கொடுமைப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து மக்களையும், சிறையில் இருக்கும் தேவசேனா (அனுஸ்கா) என்ற பெண்ணையும் காப்பாற்ற புரட்சிப்படையொன்று செயல்பட்டு வருகின்றது. அந்த புரட்சி படையில் இருக்கும் வீராங்கனைகளில் ஒருவர்தான் பிரபாஸ் காதலிக்கும் தமன்னா என்ற பெண். தேவசேனாவை விடுவிக்கும் பொறுப்பு தமன்னாவுக்கு தரப்படுகிறது. அந்தப் பொறுப்பை பிரபாஸ் ஏற்றுக் கொண்டு களத்தில் குதிக்கிறார். அவரைப் பார்க்கும் எல்லோரும் அவரது பெயர் சிவாவுக்குப் பதில் பாகுபலி என்றே சொல்கிறார்கள். ராணாவின் மகனை காப்பாற்றவரும் படைத்தளபதி கட்டப்பனும் (சத்யராஜ்) அவ்வாறே கூப்பிடுகிறார். பாகுபலி யார்? தேவசோனாவுக்கும் சிவாவுக்கும் என்ன சம்பந்தம்? பாகுபலி என்னவானார்? ஏன் சிவாவைப் பார்ப்பவர்கள் அவனை பாகுபலி என்று சொல்கிறார்கள்?  இது பற்றிய விளக்கங்களை சத்யராஜ் சொல்லும் பிளாஷ்பேக்குடன் படம் முடிகிறது.


        ராஜமௌலி. நிச்சயமாக இது ஒரு பிரமாண்ட படம்தான். மனதை ஈர்க்கும் காட்சிகள் படத்தோடு நம்மை ஒன்றச்செய்கின்றன,  பாகுபலியில் ராஜமவுலி காட்டியிருக்கும் பிரம்மாண்டம் கதையோடும் காட்சிகளோடும் இயல்பாகப் பொருந்திப் போவதால் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறோமே தவிர, பிரம்மாண்டத்தை மட்டும் தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை. உலகிலேயே பிரமாண்டமானது அழகு மிகுந்த இயற்கைதான். அந்த இயற்கையை இந்தப் படத்தில் இன்னும் பேரழகுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள் ராஜமவுலியும் அவரகளது ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரும்.  படம் பார்க்கும் அனைவருக்கும், அதிரப்பள்ளி அருவியை நேரில் பார்த்தால் கூட வராத ஆச்சர்யமும் ஆனந்தமும் இந்தப் படத்தைப் பார்த்தால் கிடைக்கும் அதிசயம் நிகழும்  . கோட்டையும் கொத்தளமும் போர்க் கருவிகளும் போர்ப் படைகளும் என ஒரு கால எந்திரத்தில் பயணித்து பாகுபலியின் காலத்துக்கே நாம் போகும் உணர்வைத் தருகிறது இந்தப்படம். எங்கும் சிறு பிசிறு கூட தெரியாத அளவுக்கு ரெம்ப நேர்த்தியாக காட்சிகளை செதுக்கி இருக்கிறார்கள் ராஜமவுலி கூட்டணி.  ரத்தமும் சதையும் தெறிக்கும் தத்ரூபமான மாபெரும் யுத்தகளமாக காட்டப்படுகிறது நாம் நேரில் பார்ப்பது போல இருக்கிறது. அது நம்மை  ஆச்சரியப்பட வைக்கிறது நேரில் போர்களத்தை கண்டதைப் போலான அச்ச உணர்வைத் தருகிறது.. இந்தப் படத்தில் நடித்த யாரும் அந்தப் பாத்திரத்தை மீறி இம்மியளவுக்குக் கூட மிகையாக நடிக்கவில்லை அப்படியே அந்தந்தப்பாத்திரமாகவே மாறிவிட்டனர். பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருவருமே படத்தில் அந்தப் பாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் அவ்வளவு கணகச்சிதம். ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு கோணத்திலும் பிரமிப்பு பலமடங்கு மேலோங்குகிறது.  படத்தில் வரும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தியது  ராஜமௌலியின் வெற்றித் திரைக்கதையின் வலிமையே . வில்லன் செய்யும் அட்டகாசங்களைப் பார்த்து பார்வையாளர்கள் வெறி ஏறி  அவனை தூக்கிப் போட்டு மிதிக்கணும் என்று பார்வையாளர்களை நினைக்க வைப்பதும், அந்த நேரத்தில் சரியாக ஹீரோ வந்து வில்லனை போட்டு துவைத்து எடுப்பதும் என கணகச்சிதமான கதை நகர்த்தல். இப்படி எந்தக் காட்சியாக இருந்தாலும் அதற்குமுன் அந்தக் காட்சிக்கு பார்வையாளர்கள் தயார் செய்யப்படும் வகையில் படம் சரியான நேர்த்தியில் எடுக்கப்பட்டுள்ளது. எம்எம் கீரவாணியின் இசை இந்தப் படத்தின் காட்சிகளுக்கு இன்னும் உயிரோட்டம் தருகிறது.


தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த பாகுபலி திரைப்படம், தமிழ்நாட்டில் ஒரு வசூல் சூறாவளியை நிகழ்த்தும். மொத்தம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 379 திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் வெளியானது, வெளியான 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மொத்தம் 10.25 கோடியை வசூலித்து உள்ளது.  உலகம் முழுவதும் சுமார் 4200 திரையரங்குகளில் வெளியான பாகுபலி 2 நாட்களில் 100 கோடியை வசூலித்து வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நூறாண்டு கண்ட இந்திய சினிமாவுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் எஸ் எஸ் ராஜமவுலி.

மக்களில் பலருக்கும் பல விஷயங்களிலும் விருப்பம் இருக்கும்.

1.சுறுசுறுப்பு, விறுவிறுப்பு வேகம் ஆகியன விரும்புகின்றவர்கள்  இந்த உலக மக்களில் 16%  பேர் இருப்பார்கள். பாகுபலி படத்தில் இந்த அம்சங்கள் இருக்கின்றன. பாகுபலி - சினிமா விமர்சனம்
2.சொகுசு, இதம், பதம், பாசம்,அன்பு,கருணை, அரவணைப்பு,பரிதாபம் ஆகிய விஷயங்கள் விரும்புகின்றவர்கள் இந்த உலக மக்களில் 16%  பேர் பேர் இருப்பார்கள். பாகுபலி படத்தில் இந்த அம்சங்கள் இருக்கின்றன. பாகுபலி - சினிமா விமர்சனம்

3.நக்கல், நையான்டி, விகடம்,விவேகம்,அறிவு கூர்மை  ஆகிய விஷயங்கள் விரும்புகின்றவர்கள் இந்த உலக மக்களில் 25 சதவீதம்பேர் இருப்பார்கள். இந்த விசயங்களும் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ளன. பாகுபலி - சினிமா விமர்சனம்

4. கலைகள் , அலங்காரங்கள் ஆகியன விரும்புபவர்கள் இந்த உலக மக்களில்25 சதவீதம்பேர் இருப்பார்கள். இந்த விசயங்களும் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ளன. பாகுபலி - சினிமா விமர்சனம்

5. வீரம், ரோஷம்,கோபம்,ஆணவம், ஆத்திரம், அகம்பாவம், கொடூரம்
இம்சை அல்லது கொடுமை,போராட்டம்,சண்டை,யுத்தம் ஆகியவற்றை விரும்புபவர்கள் இந்த உலக மக்களில் 25சதவீதம் இருப்பார்கள். இந்த விசயங்களும் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ளன. பாகுபலி - சினிமா விமர்சனம்

6. மர்மம், ரகசியம்,திடுக்திருப்பம் ,ஏடாகூடம், இடக்குமடக்கு ஆகிய விஷயங்கள் விரும்புகின்றவர்கள் இந்த உலக மக்களில் 25 சதவீதம் இருப்பார்கள். பாகுபலி - சினிமா விமர்சனம்

7. நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் விரும்பம் கொள்கிறவர்கள் இந்த உலக மக்களில் 25சதவீதம் இருப்பார்கள். இந்த விசயங்களும் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ளன. பாகுபலி - சினிமா விமர்சனம்

8. உழைப்பாளர்களுக்கான மரியாதை, உழைப்பாளர்களுக்கான ஆதரவு, உழைப்பாளர்களை அரவணைத்துச் செல்லுதல் போன்ற விஷயங்களை விரும்புகின்றவர்கள் இந்த உலக மக்களில் 25 சதவீதம் இருப்பார்கள். இந்த விசயங்களும் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ளன. பாகுபலி - சினிமா விமர்சனம்

9.  பக்தி, ஆச்சரியம், அதிசயம்,திகைப்பு, பிரமாண்டம் போன்ற விசயங்களை விரும்புகின்றவர்கள் இந்த உலக மக்களில் 25 சதவீதம் இருப்பார்கள். இந்த விசயங்களும் பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ளன. பாகுபலி - சினிமா விமர்சனம்

மொத்தம் (7x25=175)+16+16=207 சதவீதம் என்று கணக்கிடக்கூடாது. ஏனென்றால் ஒருவருக்கே இதில் 9 அம்சங்களோ அல்லது 8 அம்சங்களோ அல்லது 7 அம்சங்களோ இப்படி ........ ஆக பிடிக்கலாம். இப்படி பலருக்கும் பலவிதமாக இருக்கும். ஆக மொத்தம்=100 சதவீதம்தான் இருக்கும்.

மேலே உள்ள 9 அம்சங்களையும் இந்த படம் நிறைவு செய்கிறது. அதனால் இந்த படம் அனைத்து நபர்களையும் மனநிறைவு செய்யும். .தனது திரைக்கதை வன்மையாலும், ஆக்ஷன் காட்சிகளாலும் இந்த எளிய கதையை பாகுபலி என்ற பிரமாண்ட படமாக அனைவருக்கும் பிடிக்கும்படியாக தந்திருக்கிறார் ராஜமவுலி.

தென்னகத்தின் கம்பீர சினிமா!
தென்னிந்திய சினிமாவின் வல்லமையை 'இந்தி'ய சினிமா துறையினருக்கு மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியிருக்கிறது பாகுபலி.

 (கிரக வக்கிரங்கள்,கிரக நீசநிலை பெற்றோர் ஆகியோருடைய புத்திகளும் விருப்பங்களும் வேறு மாதிரியிருக்கும்.  சிலருக்கு ஏடகூட புத்தி இருக்கலாம். சிலருக்கு எதிலுமே குற்றம் காணும் புத்தி இருக்கலாம். சிலருக்கு வம்பு செய்வதும் வீம்பு செய்வதுமே  இயல்பாயிருக்கும்.  இந்தகையோரும் இவ் உலகில் உண்டு. அவர்கள் மனநிலை இங்கு கணக்கில் சேர்க்கப்படவில்லை)

 பாகுபலி - சினிமா விமர்சனம்   மற்றும் இது குறித்த  ஜோதிட ஆராய்ச்சி



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற