menu

Saturday 25 July 2015

காதல் திருமணம் யாருக்கு அமையும்? ஜாதகப்படி கலப்பு திருமணமா ?

ஜாதகப்படி காதல் திருமணமா?  கலப்பு திருமணமா ? ஜோதிடம் -  காதல் திருமணம் நடக்குமா?
காதல் திருமணம்
 “இளமையில் திருமணம், காதல் திருமணம், தடைபடும் திருமணம், திருமணமின்மை, கணவன்/மனைவியின் ராசி/லக்கினம் அறிதல், தாமதமாகும் திருமணம், மதம்/ஜாதி மாறி திருமணம், கணவன்/மனைவியின் பெயர் அறிதல்,ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள், காதல் தோல்வி,குடும்பத்தில் குழப்பங்கள், ஜாதகப் பொருத்தம்,தற்காலிகப் பிரிவினை, திருமணப் பொருத்த சூட்சுமம், விவாகரத்து, திருமணம் நடைபெறும் காலம் ” இப்படி திருமணம் பற்றிய ஏராளமான விஷயங்களை அறியவேண்டுமானால் 7மிடத்தை முக்கியமாக கொண்டு அது சார்ந்து மற்ற கட்டங்கள் எப்படி இருக்கிறது என்று ஆராய வேண்டும்.


அமலாபால் ஜாதகத்தை பார்க்கவும் மனசுக்குரிய சந்திரன் காதலுக்கே உரிய சுக்ரன் வீட்டில் இருப்பதை காணலாம். லக்னத்தில் ராகு இருந்தால் இனம் மாறி திருமணம் செய்ய துணிச்சல் ஏற்படும். லக்னாதிபதி காதலுக்குரியோனாகிய சுக்ரனுடன் சேர்ந்ததோடு அல்லாமல் 5ம் இடத்தையும் பார்வை செய்கிறார். அந்த சுக்ரனின் மற்றொரு வீட்டில்தான் 5க்குரிய செவ்வாயும் அமர்ந்து இருக்கிறார்.7க்குரிய புதன் 11ல் இருந்து 5யை பார்பதோடு 5க்குரியோனுடன் சேர்க்கையும் பெற்று உள்ளது. எனவே தனது சுயபுத்தி உணர்வாலேயே வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அமைந்தது.

கிரீடம், பொய் சொல்லப்போறோம், மதராச பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், விஜய். இவர் டைரக்டு செய்த தெய்வத்திருமகள், தலைவா ஆகிய 2 படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அதற்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதித்தார்கள்.

இதைத்தொடர்ந்து கேரளாவில் உள்ள அமலாபால் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்று இருவரும் பிரார்த்தனை செய்தார்கள்.

திருமணம்

டைரக்டர் விஜய்-அமலாபால் திருமணம் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில்  நடந்தது.  காலை 10-25 மணிக்கு அமலாபால் கழுத்தில், விஜய் தாலி கட்டினார். புரோகிதர்கள் மந்திரம் ஓத, வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. நடிகர்கள் விக்ரம், ஆர்யா, பொன்வண்ணன், நடிகை சரண்யா, டைரக்டர்கள் பாலா, சமுத்திரகனி, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார், அவருடைய மனைவியும் பாடகியுமான சைந்தவி, பட அதிபர்கள் பஞ்சு அருணாசலம், சுப்பு பஞ்சு, யு.டி.வி. தனஞ்செயன் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
அமலாபால் நடித்த படங்களின் விவரங்கள்


2009 நீலதம்ரா பீனா மலையாளம்
2010 வீரசேகரன் சுகந்தி தமிழ்
2010 சிந்து சமவெளி சுந்தரி தமிழ்
2010 மைனா மைனா தமிழ் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரைக்கப்பட்டவை – சிறந்த நடிகைக்கான விஜய் விருது
2011 இது நம்முடே கதா ஐஸ்வர்யா மலையாளம்
2011 விகடகவி கவிதா தமிழ்
2011 தெய்வத் திருமகள் சுவேதா ராஜேந்திரன் தமிழ்
2011 பெஜவாடா கீதாஞ்சலி தெலுங்கு
2012 வேட்டை ஜெயந்தி தமிழ்
2012 காதலில் சொதப்புவது எப்படி பார்வதி தமிழ்
2012 லவ் பெய்லியர் தெலுங்கு
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் சாருலதா தமிழ்
2012 ஆகாஷின்டே நிறம்
மலையாளம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற