menu

Thursday, 17 September 2015

மும்பை-மாடல்-நடிகை-பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்ரை-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு!மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!

நடிகை பூஜா மிஸ்ராவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வரக் காரணம் என்ன?

முதலில் மீடியாக்களில் வந்த செய்தியை பார்க்கலாம் அப்புறம் அவருக்கான ஜாதக பலனைப் பார்க்கலாம்.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் மாடலும், நடிகையுமான பூஜா மிஸ்ரா. அவர் நடிப்பை பற்றிய செய்திகளை விட அவரைப் பற்றிய சர்ச்சை செய்திகளே அதிகம் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பூஜா.

டெல்லி - தாஜ் தஜவாராகா ஜோட்டலில் சில நாட்களுக்கு முன்பு தங்கியிருந்தாராம். அவர் தங்கிய அறையில் இருந்த உடைந்த பொருட்களுக்கு பணம் தர மறுத்தாராம். அதன் பொருட்டு ஹோட்டல் ஊழியரை தாக்கினாராம். இதுகுறித்து வீடியோ வெளியிட்டார்களாம் மீடியாக்கள். நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு இருக்கும்பொழுது மீடியாக்கள் வெளியிட்டது தவறு .  அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டினாராம். இந்த வழக்கினால் மீடியாக்கள் ரூ1000 கோடி தர நேரிடும் என்றும் சொன்னாராம்!

முன்பு ஒரு முறை படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங்கும், அவரது சகோதரரும் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பூஜா புகார் அளித்தார்.

அதற்கு பின்பு தன்னுடையவளர்ச்சியில் பொறாமை கொண்டு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா எனக்கு சூனியம் வைத்துவிட்டார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் பூஜா மிஸ்ரா என்பது அனைவரும் அறிந்ததே.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற காரணத்தினால்  சச்சரவு குறித்து இங்கு முழுமையாக விளக்கம் அளிக்க முடியாது!  எனவே இங்கு சுருக்கமாகவே சொல்கிறேன்.
1. அவருக்கு ஏற்கனவே கால சர்ப்ப தோஷம் இருக்கிறது. அனைத்து கிரஹங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் சிக்கி விட்டன. ஜாதகம் பார்க்கவும்.

2. லக்னத்திற்கு செவ்வாயன் , ராகு, சனி சம்பந்தம் இருக்கின்றன. அறிவுஸ்தானத்துக்கு காரணமான புதன்னும் ராகுகேதுவின் பிடியில்தான் இருக்கிறது. இதனால் அவருக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. செவ்வாயே லக்னத்தை பார்க்கிற காரணத்தினால் இவர் இயற்கையிலேயே கோபம் உடையவர். அந்த செவ்வாயின் வீட்டிலே சனியும் உள்ளது. சனியின் வீட்டிலே செவ்வாய் உள்ளது. இரண்டும் பரிவர்த்தனையாகி உள்ளது. இந்த சனியே அவருக்கான உதவியாளரை அல்லது வேலை செய்வோரைக் குறிக்கும். அந்த செவ்வாய் 7, 12க்கும் அதிபதியான காரணத்தினால் தனது நண்பர்களினாலும் வேலைக்காரர்களாலும் துக்கத்திற்கும் துயரத்திற்கும் உள்ளாவார் இதனால் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருவதும் இயலபானதே. நீதிக்கும் நேர்மைக்கும் உரியவரான குருவோ அவமான ஸ்தானத்தில் சூரியனுடன் சேர்ந்து இருப்பதோடு அல்லாமல் சண்டை சச்சரவுக்கு காரணமான 12மிடத்தையும் பார்கிறது. அது மட்டுமல்லாமல் வாக்கு வாத்துக்கு காரணமான 2மிடத்தையும் நோக்குகிறது. வாக்கு வாத்திலும் வழக்கிலும்  போராடுவதிலுமான சூழ்நிலையை உருவாக்குகிறது.  இதனால் நீதிமன்ற வழக்கிலும் ஈடுபடுடக்கூடிய  சூழ்நிலையை உருவாகியது. 

மும்பை-மாடல்-நடிகை-பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்ரை-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு!மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!
pooja missra

ஓட்டல் ஊழியரை அடித்து உதைத்து மொபைலை உடைத்த நடிகை பூஜா மிஸ்ரா- தின தந்தி செய்தி

பூஜா-மிஸ்ரா-ஹோட்டல்-ஊழியர்-தாக்கினார்,உடைந்த-பொருளுக்கு-பணம்-தர-மறுப்பு,நீதிமன்றத்தில்-அவதூறு-வழக்கு! 
மும்பை-மாடல்-நடிகை- மிஸ்ரா-மீடியாவிற்கு-மிரட்டல்!ஒரு-ஜோதிட-ஆராய்ச்சி!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற