menu

Wednesday, 5 August 2015

வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம்

வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி - கார்த்திக் ஜோதிடம்
வாசிம் அக்ரம் ஜாதகம் - பிறந்த நேரம் துல்லியமானதாக கி்டைக்கவில்லை. அதனால் ராசியின் அடிப்படையில் ஜாதக பலன்களை ஆராய்வோம்.
வாசிம் அக்ரம் ஜாதகம்

இவரது ஜாதகத்தில் ராசிக்கு 8ம் இடம் மிகவும் வலுவாக காணப்படுகிறது. இது துன்பத்திகு உரிய கட்டமாகும் 6ம் இடம் எதிரிகளைக் குறிப்பிடும். இங்கு இவரது ஜாதகத்தில் 6மிடத்து அதிபதியும் (இவரே ராசி அதிபதியும் கூட) 8மிடத்து அதிபதியும் சேர்ந்து 7ல் இருக்கிறது. சோகத்தை தரும் சுக்கிரன் எதிரிக்கான 6மிடத்தில் இருந்திட எதிரிக்கான 6க்குரியோன் செவ்வாய் 8க்கான புதனுடன் சேர்க்கை. எதிரிகளால் துன்பமும் சோகமும் அவமானமும் படவேண்டிய ஜாதகமாக இது இருக்கிறது. இவருக்கு தற்போது நடக்கும் தசாபுத்திகள் இவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் உயிர் தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 6,8க்குரியோனுடன் ராகுவும் சேர்ந்திருக்கிறது. ராகு மர்மத்திற்குரியோன். இரகசிய சதிதிட்டத்திற்குரியோன். இவனுடன் ரத்தத்திற்குரிய செவ்வாய் சேர்ந்தது ரகசிய சதி திட்டமிடல் இடம் பெறும் யோகம் அமைகிறது. அந்த ராகுவே திடீர் சம்பவங்களுக்கும் காரணகர்த்தா. 7ல் பலகிரகங்கள் இருந்ததால் இரண்டு திருமணம் செய்யும் நிலை அமைந்தது. 5ல் இருக்கும் சனியே 7யை பார்த்த காரணத்தாலும் சந்திரனுக்கு ராகு புதன் செவ்வாய் சம்பந்தம் ஏற்படுகிற காரணத்தாலும் காதல் செய்யும் யோகம் தந்தது.  12க்குரியோன் சுக்ரன் 6க்கு சென்று 12 பார்க்கின்ற காரணத்தினாலும் அந்த 12மிடத்தை குரு பார்வையிடுகின்ற காரணத்தாலும் முன்னால் மனைவிக்கு புற்று நோய் வர காரணமாக இருந்தது. இவருடைய 6ம் இடத்து அதிபதி செவ்வாய் ரத்தத்துக்குரியோன் 6ல் சுக்ரன் இவர்களுடைய கூட்டணி அவருக்கு சர்க்கரை நோயை தந்தது.

கராச்சியில் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கராச்சியில் இன்று, அடையாளம் தெரியாத நபரால் அவர் சுடப்பட்டார். தன் மீது நடந்த இந்தக் கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பிவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு அக்ரம் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.  கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

வாசிம் அக்ரம் பற்றிய சிறு வரலாறு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஆவார். இவர்  வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது அக்ரமின் 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயையும் வென்று கிரிக்கெட்டில் சாதித்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருந்தது கிடையாது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் ஹியூமாவை புற்றுநோய் தாக்கியது. இவரை காப்பாற்ற வாசிம் அக்ரம் கடும் முயற்சி மேற்கொண்டார். எனினும் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில்தான் ஹியூமாவின் உயிர் பிரிந்தது. அதற்கு பின் 4 ஆண்டுகளாக வாசிம் அக்ரம் மறுமணம் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகளையும் அவரே வளர்த்து வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷெனிரா தாம்ப்சனுடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை கடந்த 2013ஆம் ஆண்டு வாசிம் அக்ரம் திருமணம் செய்தார்.. எனக்காக மட்டுமில்லையென்றாலும் எனது குழந்தைகளுக்காக மறுமணம் அவசியம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார். ஓய்வுக்கு பின் கிரிக்கெட் வர்ணணையாளளராக பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வந்த அவர், பேஷன் பேரேடுகளில் பங்கேற்பதிலும் ஆர்வம்  கொண்டிருந்தார்.  கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஃபேஷன் பேரேடுகளில் பங்கேற்று  வந்த அக்ரம் நேற்று கராச்சியில் தனது மனைவியுடன் ஃபேஷன் பேரேடில் கலந்து கொண்டார். கராச்சி நகரில் நடந்த பிரிடல் ஃபேஷன் பரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையில் வலம் வந்த புகைப்படம் இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கார்த்திக் ஜோதிடம் - வசீம் அக்ரம் சுடப்பட்டார்! -ஜோதிட ஆராய்ச்சி  கார்த்திக் ஜோதிடம்
 ஜோதிட ஆராய்ச்சி  கார்த்திக் ஜோதிடம் வசீம் அக்ரம் சுடப்பட்டார்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற