menu

Thursday, 13 August 2015

மோடி- பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்

பிரதமர் மோடியின் ஜாதக பலன் - மோடி ஜாதகம் ஒரு ஆய்வு
சிறந்த பதவி உச்ச புகழ் பெறும் யோகம்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவர்களின் ஜாதகம்மோடி
மோடி ஜாதகம்

 மோடி ஜாதகமும் - ஜோதிடம் - நரேந்திரமோடி ஜாதக ஜோதிட ஆய்வு
சுக்ரன் 10ல் இருப்பது பேரும் புகழை தந்திருக்க . அவனே 10க்கும் 10க்குரியோனாக இருப்பதும் பேரும் புகழும் மேலும் மேலும் பெருகிட காரணமாகிறது. 
சனி 10ல் இருந்திட 10க்குரியோன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. மேலும் 10க்கு 5க்குரியோன் பார்வை பெற்றது மேலும் சிறப்பு.
புதன் 10க்குரியோனுடன் சேர்ந்தும் ஆட்சி பெற்றும் உச்சம் பெற்றும் இருக்கிறது
கேது 10க்குரியோனுடன் சேர்க்கை
ராகு 10க்குரியோனை பார்வை செய்கிறது
குரு 10மிடத்தை பார்வை செய்கிறது
செவ்வாய் “10யைபார்க்கும் குருவை” பார்ப்பதுடன் 10க்கு 10மிடத்தையும் பார்க்கிறது. மேலும் செவ்வாய் ஆனது 10 க்கு 9க்குரியோனும் ஆனது இன்னும் சிறப்பம்சம் ஆகும்.
சந்திரன் 10க்கு 10மிடத்தை பார்வை செய்கிறது
எனவே அவர் அரசியலில் இறங்கி மக்களிடம் பெயரும் புகழும் பெற்றார். நவக்கிரஹம்ங்களும் அவர் புகழ் பெறக் காரணமாகியது
சந்திர மங்கள யோகம்
கஜகேசரியோகம்
புதஆதித்ய யோகம் ( சிறந்த கல்வி அதிக புத்திசாலிதனம் விவேகம் சிறப்பான பேச்சாற்றல் ஆகிய யோகங்களை தந்தது)
நீசபங்க ராஜ யோகம் சந்திரன் தரும் யோகம் இது
பஞ்சானன் யோகம். அல்லது பஞ்ச அனான யோகம் என்பது  (5கட்டங்களில் எல்லா கிரகங்களும் இருப்பது). இந்த யோகம் இருந்தால் ஆரோக்கியம், செல்வம், உயர்ந்த அந்தஸ்து, செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை ஆகியன தரும் யோகமாக இது இருக்கும். அதுவும் இவருக்கு 1,4,5,10,11 என்ற வீடுகளில் இருப்பது மிகச் சிறப்பான யோகமாகும்.

ஊச்சக யோகம்  லக்னாதிபதியான செவ்வாய் ஜாகத்தில் லக்னத்தில் ஆட்சி செய்வதால், பஞ்சமகா புருஷ யோகம்த்தில் ஒரு யோகமான ஊச்சக யோகம் இருக்கிறது.
சண்டாள யோகம்  மோடியின் ஜாதகத்தில் 10–ம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இதற்கு ‘‘சண்டாள யோகம்’’ என்று பெயர்.
இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது  வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்த விதத்திலும் அசைக்க முடியாது.

7மிடத்துக்கு அதிபதி சுக்ரனுடன் சனி சேர்ந்த காரணத்தாலும், 7மிடத்தை சனி பார்க்கின்ற காரணத்தாலும்  உழைக்கும் மக்களின் முன்னேற்றதுக்கு உதவி செய்யவதில் ஆர்வம் பிறக்க காரணமும் ஆகியது. அதனாலேயே அவர் அரசியலில் கவனம் செலுத்தலானார். 5க்குரியோன் 5க்கு 12ல் அமைந்தது, 5ல் ராகு இருப்பது. 9மிடத்து அதிபதி நீசம் செவ்வாய்யுடன் சேர்க்கை பெற்று இருப்பது ஆகிய அம்சங்கள் பிள்ளைகள் இல்லாத நிலையை தந்தது.

திரு மோடி அவர்களின் சிறு வரலாறு
நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī,  பரவலாக நரேந்திர மோடி), (பி. செப்டம்பர் 17, 1950) இந்தியப் பிரதமர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் அக்டோபர் 7, 2001 முதல் மே, 2014 வரை குசராத்து மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர். நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர பொருளாதார வசதிபடைத்த குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி ஃகீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014-ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார். இவர் இளமைப் பருவத்திலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (RSS) ஒரு உறுப்பினராகவும் உள்ளார், இளமை முதல் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இவர் 1998 ஆம் ஆண்டில் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் குசராத்து மாநிலம், இமாசல பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் இயங்க அத்வானியால் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் நரேந்திர தாமோதர்தாசு மோதி வெற்றிபெற்று அக்டோபர் 7, 2001 ல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001 தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றிபெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஜாதகம் - நரேந்திர மோடியின் ஜாதகம், மோடியின் ஜாதகம் - நரேந்திர மோடி ஜாதகம் -ஒரு ஆய்வு - மோடி ஜாதகம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற