menu

Monday, 13 August 2012

ரிஷப ராசி பலன்கள்

குரு பெயர்ச்சி பலன்கள்  2015-2016               ரிஷபம் ராசிக்கான பலன்

ராசி பலன்கள் - ரிஷபம் - ரிசபம். குரு 4ல் வர- 8,10,12ம் இடங்களை பார்வை செய்ய.
.
சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா
சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே
அல்லப்பா அகிலங்கள் வினையினாலே
அப்பனே ஆரணியம் சென்றாரவர்
நல்லப்பா நாலதனில் குருவுமேற
நரச்சுகமுங் கிட்டாது நலிவுமுண்டு
மல்லப்பா மண்ணாலும் பொன்னால்வேதை
மகத்தான குருபதியின் கடாட்சத்தாலே.
                                                  - புலிப்பாணி

குரு 4-ம் இடத்தில் வந்த காரணத்தால் எல்லா சொத்துக்களையும் சூதாட்டத்தில் தோற்று காட்டுக்கு சென்றனர் பஞ்சபாண்டவர்கள்.அதுபோல பந்துகள் விரோதம்,மனக்குறைவு தொழில்பங்கம் ,வீண்பழி ஆகியன குரு 4ல் வருவதால் உண்டாகும்.

தீமைகள்
1. மன உளைச்சல் உண்டு. வீண் பகையும் உண்டு.    சோதனைகளால் தகுந்த பாடம் பெறுவீர்கள்.
2. சொந்தம் பகையாகும். சோகமே தொடர்ந்து வரும்.வீண் செலவு நம்மை வீழ்த்த வரும். சண்டை சச்சரவு வந்து வீண் விரயம் உண்டுபண்ணும். வீட்டில் மருத்துவச் செலவு வந்து போகும். தாய் தந்தையருக்கு மருத்துவ செலவு ஏற்படும்.
3. நிலம் வீடு வாகனம் வாங்க  முயற்சி தேவை. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும்.
4. குடும்ப பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சற்று குறைந்தே இருக்கும். அவர்களுக்கிடையே வீண் வாக்குவாதங்களும் இடம்பெறும். நண்பர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.
5. உடல் ஆரோக்கியத்தில் அக்கரை உண்டு.நன்மை செலவு செய்வீர்கள்.
6. கீர்த்தி பெறுவீர்கள். சுப காரியம் நடந்திடும்.வீண் பிரச்சனைகளை தவிர்க்க முயல்வீர்கள்.வீண் செலவுகளை குறைக்க வேண்டும்.

7. தொழிலில் போட்டி காண்பீர்கள். சவாலை சமாளிக்கும் திறன் பெறுவீர்கள்.
8. கணவன் மனைவி ஒற்றுமை சற்று குறைந்தே இருக்கும்.  ஆனால் விரிசல் வராது. பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.  சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாகும். பணவிரையம் உருவாகும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்காது. பெரிய தொகைகளை தொழிலில் ஈடுபடு்த்த வேண்டாம். லாபம் குறையும். வாடிக்கையாளர்களின் ஆதரவு குறையும். வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் வாங்குவது கடினம். புதிய தொழில் இப்பொழுது வேண்டாம்.சீரான வருமானம் இருக்காது. வருமான குறைவும் உண்டு. தொழிலை இப்பொழுது பெருக்க வகை தெரியமல் திணருவீர்கள். தேவையற்ற பயணங்களை தவிக்க வேண்டும். வீண் செலவுகளை குறைக்க வேண்டும். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறைந்து போகும். எந்த காரியத்தையும் அவசரப்படாமல் சிந்தித்து செயலாற்ற வேண்டும். தொழிலில் கடும் போட்டி உண்டு. போட்டியாளர்களை எதிர்க்கும்
வல்லமையை அடைய கடும் முயற்சி தேவை. தொழில் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது.வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெற கடும் முயற்சி தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டும். நஷ்டங்களைத் தவிர்க்கலாம். குரு எதையும் அலட்சியமாக செய்யவைப்பார். அப்படி அலட்சியமாக செய்ய ஆரம்பிக்கும்போது சோம்பலும் மறதியும் வந்து ஒட்டிக்கொள்ளும். “மெய்வருத்தக் கூலி தரும்’ என்று முன்னோர் வாக்கு.

பணியாளர்கள். மேலதிகாரிகளை அணுசரித்தே செல்ல வேண்டியிருக்கும். சிலருக்கு இடமாற்றம் நேரலாம். அதிக முயற்சி செய்தால் மட்டுமே  சம்பள உயர்வு பதவி உயர்வு எதிர்பார்க்க முடியும். வேலை பளு அதிகம் இருக்கும் . மேலதிகாரிகளிம் நல்ல பெயர்வாங்க  முயற்சி மேற்கொள்ள வேண்டும். பணியிடத்தில் நிம்மதி இருக்கும். வேலைகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க முயல்வீர்கள்.  மேலாிகாரிகளின் கெடுபிடிகள் இருந்தாலும் ஓரளவு அணுசரித்தும் செல்வார்கள். லஞ்சம் வேண்டாம். அதனால் மாட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. கடன் வாங்காமல் இருப்பது நல்லது.

பெண்கள் கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆடை அணிகலன் செலவு செய்விர்கள். குடும்ப நன்மைக்காக எதையும் தியாகம் செய்ய தயாராவீர்கள். குடும்ப பிரச்சனைகளை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவமானம் அசிங்கம் பட நேரிடலாம். உஷாராக இருக்கவும்.அக்கம்பக்கம் சண்டையிடாதீர்கள்.மணமகளுக்கு ஏற்ற வரன் கிடைப்பதில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

அரசியல்வாதிகள் கடின உழைப்பு இருக்கும்.ஆனால் அதற்கேற்ற பலன் குறைவாக இருக்கும். பெயர் புகழ் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டி வரும். செலவுகள் மிகும். தொண்டர்களின் மன நிலை அறிந்து மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டால் மட்டுமே உங்களுக்கு நற்பெயர் கிட்டும்.
கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்று சிந்தித்து அப்புறம் வாக்குறுதி அளிப்பது நல்லதாக இருக்கும்.

மாணவர்கள் படிப்பிலே மந்தம். பள்ளியிலும் பெற்றோரிடத்திலும் நல்ல பெயர் வாங்குவதில் தடங்கல். தவறான நண்பர்களால் துன்பம் தொடர்ந்து வரும்.  அக்கம்பக்கம் சுற்றும் முற்றும் உள்ள நண்பர்களால் அவமானம் அடைய நேரிடும். அவர்களால் சோக நிலை உருவாகும் கேலிகிண்டலுக்கு ஆளாவீர்கள். பள்ளியிலும் ஆசிரியர்களின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும்.

விவசாயிகள் விவசாய மற்றும் நில அபிவிருத்தி பணிகள்  செய்யவதை இப்பொழுது தவிர்க்கவும்.கடும் உழைப்பில் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம்.  வாய்க்காவரப்பபு சண்டை  சச்சரவுகளில் சிக்காமல் பார்த்து பழகவும். அவமானப்படுவதை தவிர்க்க உஷாராக இருக்கவும். பணியாளர்கள் கிடைப்பதும், விதை, உரம், பூச்சிமருந்து போன்ற விவசாய இடுபொருட்கள் தேவையான நேரத்தில் தேவையான அளவு பெறுவதிலும் சிரமம் ஏற்படும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற