menu

Saturday, 12 September 2015

புத்திர தோஷம் என்றால் என்ன?அது பற்றிய விளக்கம்!

          ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் முழுமை பெற வைப்பது குழந்தை செல்வமே. திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் அடுத்து எதிர்பார்ப்பதும் ஓரு குழந்தையைத்தான். ஏழை முதல் பணக்காரர் வரை எல்லோருமே தனக்கு ஒரு வாரிசு பிறப்பதை  பெரிய பாக்கியமாகக் கருதுகின்றார்கள்.  யாருமே தங்களுக்கு குழந்தை செல்வம் வேண்டாம் என்று மனதளவில் கூட நினைப்பதில்லை. என்பதே உண்மை. ஆனால், இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குபவர்கள்  பலர் உண்டு இவ்வுலக வாழ்க்கையில்

          நடைமுறையில் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காத யோகத்தை புத்திர தோஷம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடப்படி குழந்தை பெற்ற பின்னரும் அந்த பிள்ளை இடையிலேயோ அல்லது வாலிப வயதிலேயோ இறந்து போனாலும் அது புத்திர தோஷமே. சில பெற்றோர்களுக்கு பிள்ளைகளே அவமான சின்னமாய் ஆகிவிடுவதுண்டு. சில பிள்ளைகளால் கோர்ட், கேஸ் என பெற்றோர்கள் அலைய நேரிடும். இதுவும் புத்ர தோஷமே!. பிள்ளைகளால் தீராத சண்டை சச்சரவுகளில் சிக்கி சீரழிந்து நிம்மதியை இழக்க வைக்கும் யோகமும் சிலருக்கு அமைவதுண்டு.  இதுவும் புத்ர தோஷமே. சிலருக்கு பிள்ளைகளால் ஏராளமான செலவுகளை தொடர்ந்து ஏற்படுத்தி பெற்றோரகளுக்கு கடுமையான விரயங்களையும் சோகத்தையும் கண்ணீர் சிந்த வை்ப்பதையும் புத்திர தோஷம் என்றே சொல்லலாம்.

          பெற்றோர்களுக்கு பிள்ளைகளால்  ஏற்படும் தொல்லைகளே புத்ர தோஷம் ஆகும்.. அந்த தொல்லைகளைப் பொருத்து பல வகைகளாக பிரிக்கலாம்.

குழந்தை இல்லை! - புத்ர சோகம்!:- பிள்ளைகளே பிறக்காத யோகம் இருந்தால்- இதனால் தம்பதிகளுக்கு கவலை உண்டாகும். இந்த பிள்ளை இல்லாததால் ஏற்படும் “புத்ர சோகமும்” ஒரு புத்ர தோஷமே! இதை சோக புத்ர  தோஷம் எனலாம். பிள்ளை பேறு இல்லாத காரணத்தினால் பல வகைகளிலும்  மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட மந்திர  பூஜை ரீதியாகவும் பணம் நிறைய செலவு செய்தும் பிள்ளை பிறக்காமல் போவதை  விரய புத்திர  தோஷம் எனலாம்

          இப்படி பிள்ளை பிறக்காத காரணத்தினால் சமுதாய மக்களாலும் நண்பர்களாலும் உறவினர்களாலும்  பழி சொல்லுக்கும் அவமானத்துக்கும் உள்ளாக நேரிடும்.

குழந்தை இல்லா நிலை உருவாக காரணங்கள்

          ஒரு நல்ல திறன் உள்ள கருவகம் (கரு முட்டை) உருவாக தேவையான அனைத்துச் சத்துக்களும் ஒரு பெண்ணின் உடம்பில் இருக்க வேண்டும். அவள் உண்ணும் உணவிலிரு்து தேவையான சத்துக்களை உருவாக்கும் திறன் அந்த பெண்ணின் உடலிற்கு இருக்க வேண்டும்.  அதற்கு நவக்கிரஹங்களின் துணை இருக்க வேண்டும். பெண்ணின் உடலில் எந்த வகையான சத்துக்கள் குறைபாடு இருக்கிறது என்பதை ஜாதகம் காட்டி கொடுத்துவிடும். அனைத்துச் சத்துக்களையும் உருவாக்கும் வல்லமை உடலில் இருந்தும் அந்த சத்துக்களை கருவகம் உருவாக்கும் இடங்களுக்கு செல்லாமல் வேறு வழிகளில் அத்தகைய சத்துக்களை  உடல்கள் பயன்படுத்திக் கொண்டாலும் திறனுள்ள கருவகம் உருவாகுதில் சிக்கல் ஏற்படுகிறது. உதாரணமாக கடினமாக உடல் உழைப்பு செய்வோருகக்கு எலும்பு சார்புடைய சத்துக்களும் நரம்பு சார்புடைய சத்துக்களும் நிறைய செலவாகி இருக்கும். அதை ஈடு செய்ய உடல் முன்னுரிமை கொடுக்குமானால் பிள்ளைகள் உருவாகும் கருவகங்களுக்கு அத்தகைய சத்துக்கள் போதுமானளவுக்கு கிடைக்காது போகும். சிலர் அலுவலகங்களில் கடுமையாக மூளைக்கு வேலை தருவார்கள். இவர்களுக்கு அடுத்து சாப்பிடும் உணவுகளில் இருந்து மூளைக்கு தேவையான சத்துக்கள் அவரது உடல் தயாரித்து மூளைக்கு அனுப்பிவிடும். இந்த சமயத்தில் கருவகங்களுக்கு மூளைக்க தேவையான சத்து குறைபாடு உருவாகும். சிலருக்கு இப்படி மனிதர்கள் அன்றாடம் பல்வேறு வழியிலும் உடலிலுள்ள சத்துக்களை வேலை செய்வதன் மூலம் விரையம் செய்கிறார்கள். இதனால் சூரியன்,புதன்,சுக்ரன்,சந்திரன்,செவ்வாய்,குரு,சனி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோஅல்லது மூன்றோ சத்துக்கள் குறையும் நிலை ஏற்படலாம்.

புதன் - நரம்பு மற்றும் தோல் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணைசெய்வது
சூரியன் - மூளை சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சந்திரன்-உடலில் இருக்கும் நீர் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சுக்ரன்- பிறக்கப் போகும் குழந்தையின் அடுத்த தலைமுறைக்குத் தேவையான இனப்பெருக்கம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
செவ்வாய் - இரத்தம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
குரு - இதயம் சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணை செய்வது
சனி- எலும்பு சார்ந்த சத்துக்களை தயாரிக்க துணைசெய்வது

          இந்த சத்துக்கள் எல்லாம் போதுமான அளவுக்கு உடம்பில் இருந்தால் மட்டுமே நல்லதொரு திறன் உள்ள கருவகம் உருவாகும். இதைப்போலவே ஆணுக்கும் சகல சத்துக்களும் இருக்க வேண்டும்.  இவற்றில் எந்த சத்துக்கள் பற்றாக் குறையாக உள்ளதோ அத்தகைய தொந்தரவுகள் குழந்தை உருவாகுவதில் தடைகளை ஏற்படுத்தும்.

ஜாதக ரீதியாக வாரிசு யோகம்
 

          ஒருவரின் 5ம் இடம் பலமாக அமைந்திருந்தால் குழந்தை பாக்கியம் பெறலாம். குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமைந்திருப்பதும் நல்லது. அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் அது போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.


          5ம் ஸ்தான அதிபதி 6ல் இருந்தால் எதிரிகளின் சாபத்தினாலும் அல்லது ஜாதகர் நோய்வாய்பட்டிருப்பதானாலும் புத்திர தோஷம் ஏற்படுகிறது.
5க்குரியோன் 8ல் இருப்பதும் சிறப்பாகாது. 12ல் இருப்பதும் புத்திரனால் ஏற்படும் சோகத்தையும் விரயத்தையும் குறிக்கும். 5ல் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படுத்துகிறது. ஆனால் எந்த வகையிலாவது சுபர் சம்பந்தம் பெறும்பொழுது இந்த தோஷம் நிவர்த்தியாகிறது.
5க்குரியோன் நீசமானாலும் பாவிகள் சேர்க்கை பெற்றாலும் பாவிகள் பார்வை பெற்றாலும் புத்திர சோகம் உருவாகிறது. 9மிடம் நன்றாக இருந்தாலும் . 9மிடத்து அதிபதிகளுக்கு நல்ல சம்பந்தம் இருந்தாலும், 5மிடத்துக்கு சுபர் சேர்க்கை சுபர் பார்வை இருந்தாலும் புத்திர தோஷத்திலிருந்து தப்பிக்கலாம்.
உடலுக்கும் மனசுக்கும் மூளைக்கும் போதிய அளவு ஓய்வு கொடுப்பதுடன் தேவைப்படும் சத்துக்கள் கொண்ட உணவுகளை உண்பதனாலும் புத்ரதோஷ பிரச்சனைகளிலிருந்து மீளலாம்.

இது ஒரு பெண்ணின் ஜாதகம்

ஏன் இல்லை பிள்ளை? எடுத்துச் சொல்லும் ஜாதகம்!


          6க்குரியோன் குரு- எனவே இவர் நோய் தருவார் எதிரிகளையும் தருவார் அவர்களால் அவமானங்களையும் தருவார். இவர் தான் 12யும் பார்கிறார். எனவே சோகத்தையம் செலவினங்களையும் சண்டை சச்சரவுகளையும் தருகிறார். இவருடன் சேர்ந்திருக்கும் இரண்டு கிரகங்களும் அதையே தரும்.
5ல் சுப கிரகம் இல்லை. 5க்கு சுபகிரக பார்வையும் இல்லை.  5மிட அதிபதிக்கும் சுபகிரக சேர்க்கையோ பார்வையோ இல்லை. அத்தோடு அல்லாமல் 5மிட அதிபதிக்கும் பாவக்கிரக பார்வைவேறு உள்ளது. 9மிடத்திலோ 9க்கு 6மிடத்து அதிபதியாகிய சூரியனே அமர்ந்ததும் நல்லதல்ல. 2மிடம் குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருக்கறிது. 4மிடமும் பாதிக்கப்பட்ருககிறது. இது சுகஸ்தானம். செய்யும் பாக்கியங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது குரு 8ல் இருப்பதால்.  5மிடமாகிய புத்திர ஸ்தானத்தில் ராகு இருக்கிறது.

அடுத்த ஜாதகம் பாருங்கள் கீழே இருக்கிறது.  5ல் கேது இருக்கிறது. இது கருச்சிதைவை உருவாக்குகிறது. இன்னொன்று செவ்வாய் அந்த கேதுவுடன் சேர்ந்து இருக்கிறது. அந்த செவ்வாய் லக்னத்துக்கு 6மிடத்து அதிபதி எனவே குழுந்தை வயிற்றிலேயே இறக்க நேரிட்டது. ஆனாலும் 5க்குரியோன் 7ல் கேந்திரத்தில் நிற்க அதனுடன் இந்த ஜாதகருக்கு  5க்கு அதிர்ஷ்டமளிக்கும் சூரியன். அதனுடன் சேந்திட இரண்டு ஆண் பிள்ளைகள்.

குழந்தை,உண்டா,இல்லையா,புத்திர தோஷம்,ஜாதகம்,ஜோதிடம்,கார்திக் ஜோதிடம்

கர்ப்ப பிராப்தம் தரும் பரிகார தலங்கள்

            திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், கும்பகோணம்-தஞ்சை சாலையில் பாபநாசம் அருகே இருக்கிறது இந்த கோயில். குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுமேயானால் அவர்கள் இந்த கோயிலுக்கு சென்று அம்பாளை வணங்கி வரலாம். அங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி அருந்திவர தோஷ நிவர்த்தி யாகி  புத்திரயோகம்  சிறப்பாக கிடைக்கும்.


கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கரு நன்கு வளர இந்த அம்மனை வணங்கிவர வேண்டும். கும்பகோணம்-திருவாரூர் ரோட்டில் இருக்கும் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து இந்த கோவில் இருக்கிறது. இந்த  அம்மனை வணங்கி வர  புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது.

           திருவாலங்காடு சிவன் - ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று சென்னைக்கு அருகே உள்ள திருவாலங்காடு போய்  சிவனை வணங்கி, அன்றைய தினம் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் புத்திர யோகம் சிறப்பாக உண்டாகும்.

         கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகில் புத்திர பிராப்தி தரக்கூடிய  சந்தானராமன் ஆலயம் இருக்கிறது. இங்கு ராமபிரான் சந்தான யோகம் தந்தருள்கிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திர நாளில் விசேச அபிஷேகங்கள் நடைபெறும்போது ராமனை வழிபடுவது மிகவும் நன்று.

          குழந்தை  என்பது தேவை தான்! அதன் அருகாமை என்பது அவசியம் தான்! அதற்காக குழந்தை  இருந்தால் தான் வாழமுடியும் என்பது கிடையாது! தனக்கு குழந்தை இருக்காது  என்று உறுதியாக தெரிந்த பிறகு அதை நினைத்து காலமுழுவதும் அழுதுக்கொண்டு  இருப்பது பைத்தியகாரத்தனம்!  குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதியினர் தானும்  சந்தோசமாக வாழ்கிறார்கள் மற்றவர்களையும் ஆனந்தமாக வாழவைக்கிறார்கள்.








பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற