menu

Wednesday, 15 July 2015

ஒசாமா பின்லேடன் ஜாதகம்

ஒசாமா பின்லேடன் ஜாதகம்
7ல் சுக்ரன் உச்சம், 6ல் 10க்குரிய சூரியன் உச்சம்பெற அதனுடன் 11க்குரிய புதன்னும் சேரந்திருக்க 9க்குரிய சந்திரன் பார்வையிட பணபலம் அதிகம் தந்தது அதிர்ஷ்டம் தந்தது் வலுவான எதிரிகளை துணிவாக எதிர்க்கும் வல்லமையை அவருக்கு தந்தது.  வலுவான சூரியனை சந்திரன் பார்க்கும் அமைப்பு துணிச்சலான மனசை தரும் புதனும்  செவ்வாயும் பரிவர்த்தைனை செய்ததும் 6ல் சூரியன் உச்சமானதும் லக்னாதிபதியே செவ்வாய் ஆக இருந்ததும் உயிரை பனயம் வைத்து துணிச்சலாக போராடும் மாவீரத்தை தந்தது. 5க்குரியோன் சனி லக்னத்தில் அமைந்ததாலும் புதன் உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்க்கை புரிந்ததாலும் அது செ்வ்வாய் வீடானதாலும் அதை சந்திரன் பார்கின்ற காரணத்தினாலும் படிப்பில் கெட்டிதனம் உண்டு!  வேகம் உண்டு! படிப்பில் தீவிரம் உண்டு! படிப்பில் விவேகமுண்டு! படிப்பில் முழு கவனம் உண்டு! அதில் முழு ஆர்வமும் உண்டு!. புத்திசாலிதனத்தில் விவேகம் பல உண்டு!.  அந்த புத்திசாலிதனத்தில் ரகசிய வியூகமும் உண்டு ஏனென்றால் ராகுவும் அதில் சம்பந்தப்படுகிறார். வெளிநாடுகளின் உள்ள நபர்களால் அவருக்கு ஆதரவும் உண்டு.
12 மிட பலம்
1. இதன் அதிபதி சுக்ரன்
2. 12மிடத்தில் சந்திரன்
3. 12மிடத்தில் ராகு
4. 12மிடத்திற்கு புதன் பார்வை
5. 12மிடத்திற்கு உச்சம்பலம் பெற்ற சூரியன் பார்வை
6. 12மிடத்திற்கு பரிவர்தனை யோகம் பெற்ற புதன் பார்வை . இவர் 11மிடமான அதிர்ஷ்டத்துக்கும் சொந்தக்காரராக இருப்பது இன்னும் சிறப்பான அம்சம்.
7. 12க்குரியோனுக்கு சனியின் பார்வை என 12மிடம் அதிகபலம் பெறுவது கடுமையான போராட்டத்துக்கு சொந்தக்காரர் இவர் என்பதை குறிக்கிறது.

11மிடம் பலம் பெற 7 கிரகங்கள் துணை செய்கின்றது. அவைகள் புதன்,சூரியன் புதனுடன் சேர்ந்திரு்க்க,ராகு புதனை பார்வையிட, கேது புதனுடன் சேர்ந்திருக்க.சந்திரன் புதனை பார்க்க, செவ்வாய் 11மிடம பார்வை செய்ய , குரு புதனை பார்வை செய்து ஆகவே இவருக்கு பணபலமும் அதிர்ஷ்டமும் சேர்ந்து கொண்டே இருந்தது. இதைப்போலவே பாக்கிய ஸ்தானமும் வலுவாக இருக்கிறது


.






பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற