சரத்குமார் ஜாதகம் - சரத் குமார் - ஜாதகம் - நடிகர் சரத்குமார் ஜாதகம்
இணைய தளங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ஜாதகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆதாரப்பூர்வமான ஜாதகமல்ல..
2ல் குடும்ப ஸ்தானத்தில் சனி இருந்த காரணத்னாலும் 7க்குரியோனுக்கு பல கிரகங்களின் தொடர்பு இருக்கிற காரணத்தாலும் அத்துடன் ராகு கேது இருக்கின்ற காரணத்தினாலும் குடும்பத்தில் குழப்பம் நேர்ந்தது. மறு திருமணமும் செய்ய நேர்ந்தது. லக்னாதிபதி 10ல் ஆட்சி பெற்று அமையவும் சந்திரன் செவ்வாய் ராகு கேது குரு சூரியன் என இந்த 6கிரகங்களும் புதனுடன் சம்பந்தம் பெற்றதாலும் 11க்குரியோனுக்கு 9க்குரியோன் மற்றும் 5க்குரியோன் சம்பந்தம் உருவான காரணத்தினாலும் ஏனைய யோகங்கள் வெகு சிறப்பாய் அமைந்தது. செவ்வாயின் சம்பந்தம் 7க்கு இருக்கிற காரணத்தினால் இவரது நண்பர்களில் சிலரால் கடும் அவமானத்தையும் இவர் சந்திக்க நேரிடும்.
சரத்குமார், சினிமாவுக்கு வருவதற்கு முன்னபே சாயாதேவி என்பவரைக் காதல்லித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமார் ,சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்த பின்பு சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார். அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்
சரத்குமார் கடும் உழைப்பாளி. சரத்குமார் வாழ்க்கையில் கடும் போரட்டத்துக்கு அப்புறம்தான் இத்தகைய நிலைக்கு வந்தார்.
நடிகர் சத்தியராஜ் கீழ்கண்டவாறு சொல்கிறார்.
“வேலை கிடைச்சிடுச்சு' படத்துக்காக நானும் சரத்தும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஒரு தகரம் அவரது காலை குத்திக் கிழித்து ரத்தம் கொட்டியது. நானும் டைரக்டர் பி.வாசுவும் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சரத்தை அழைத்துப் போனோம்.தகரம் ஆழமாகப் பதிந்து சதையை கிழித்திருந்ததால், டாக்டர் தையல் போட வேண்டும் என்றார். பொதுவாக கொஞ்சம் பெரிய அளவில் காயம் என்றால் மயக்க மருந்து கொடுத்தே தையல் போடுவார்கள். அந்த ஆஸ்பத்திரியில் அந்த அளவுக்கு வசதி இல்லாததால், வலி மரத்துப்போகிற ஊசி போட்டு, பிறகு தையல் போட்டார் டாக்டர். கண்டிப்பாக ஒரு மூன்று நாளாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்சொல்லியனுப்பினார். ஆனால், சரத்தோ மறுநாளே சண்டைக் காட்சியில் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்! டைரக்டரும் நானும் சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. 'எனக்காக படப்பிடிப்பு தள்ளிப் போகக்கூடாது' என்று சொன்னவர், தையல் போட்ட காலுடன் சண்டைக் காட்சியில் நடித்தார். காயம்பட்ட காலுடன் நடிப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே நடித்தபோது காட்டிய வேகத்தை விட, இம்முறை அதிக வேகத்துடன் சண்டை போட்டார். வலிகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை சரத் விஷயத்திலும் நான் உணர்ந்தேன் என்கிறார் நடிகர் சத்தியராஜ்

http://fourladiesforum.com