menu

Thursday, 17 September 2015

ராமர் ஜாதகம்,ஸ்ரீராமர் ஜாதகம், ஸ்ரீ ராமர் ஜாதகம், ராமன் ஜாதகம், ஸ்ரீராமன் ஜாதகம், ஸ்ரீ ராமன் ஜாதகம்,ஸ்ரீ ராமபிரான் ஜாதகம்,ராமரின் ஜாதகம்

ஸ்ரீ பகவான் இராமபிரான் ஜாதகம்
ராமர் ஜாதகம்
ராமர் ஜாதகம்
லட்சுமணன்
லட்சுமணன் ஜாதகம்
பரதன் ஜாதகம்
பரதன் ஜாதகம்

ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் உள்ள நிலவரங்கள்
1. குரு , செவ்வாய், சூரியன், சனி,சுக்ரன் என 5 கிரகங்கள் உச்ச நிலை.

2. குரு மங்கள யோகம் குருவும் செவ்வாயயும் 1,7 என இருப்பதால்

3. சந்திர மங்கள யோகம் சந்திரனும் செவ்வாய்யும் 1,7 என இருப்பதால் .

4. குரு சந்திர யோகம் குருவும் சந்திரனும் சேர்ந்து இருப்பதால்

இப்படி யெல்லாம் இருந்ததால் அவருக்கு மன உறுதி அதிகம் இருந்தது. அஞ்சா நெஞ்சம் இருந்தது. யாருக்கும் பயப்படாத தைரியமாக முடிவு எடுக்கும் மன துணிச்சல் இருந்தது. பகைவரை வெல்லும் உறுதி வைராக்கியம் இருந்தது. பிடிவாதம் இருந்தது.

5. 6ல் ராகு எதிரிகளை வெல்லும் ஆற்றல்.

6. a)12ல் கேது சயன தோஷம் இருப்பதாலும்  b)“7க்கு” 7லிருந்து 12ம் அதிபனாகிய குரு பார்வை பெற்றதாலும் c) 7மிடத்து அதிபதி சனிக்கு லக்னத்துக்கு 12மிடத்து அதிபதி புதன் பார்வையிட்டதாலும் மனைவியை பிரிய நேர்ந்தது.

7. a) சனி பார்வை சூரியனுக்கு விழுவதாலும்  b) லக்னத்துக்கு 12க்குரிய புதனே சூரியனுடன் சேர்ந்ததாலும் c)9க்கு விரயாதிபதி  சனியே அந்த 9மிடத்து அதிபதி குருவை பார்க்கிற காரணத்தினாலும் தந்தையை  பிரியும் நிலையை தந்தது.

8. சூரியனும் புதனும் சேர்ந்திருப்பது நுண் கலைகளில் நுண் படிப்புகளில் வித்தகத்தை தரும் புதஆதித்தியா யோகமாகும்.

9. 8க்குரிய ஆயுள்காரகன்  சனி லக்னத்தை பார்வை செய்வதாலும் அறிவுக்காரனாகிய புதனையும் மூளைக்காரனாகிய சூரியனையும் மனசுக்காரனாகிய சந்திரனையும் அந்த சனியே பார்கிற காரணத்தினாலும் தற்கொலை உணர்வை ஸ்ரீராமபிரானுக்கு தூண்டிவிட்டது.

9க்குரிய குருவும் 10க்குரிய செவ்வாயும் நேருக்கு நேராக இருந்து தர்மகர்மாதிபதி யோகம் தருகிறது.


நம்மைப் போல சிரித்தவர் அவர்
நமமைப் போல அழுதவர் அவர்
இழப்புகள் பல கண்டவரவர்-அதில்
மீண்டெழுந்து வந்தவரவர்
உறவுகள் பிரியும் சோகமறிந்தவர்
செல்வத்தில் உயர்ந்து தாழ்ந்தவரவர்
இரண்டிலும் செம்மையாய் வாழ்ந்தவரவர்.
விதியென்னும் புயலிலே வீழ்ந்தவர் அவர்
நம்மைப்போல் துயர்பல கண்டவ ரவர்...
 ஸ்ரீராமருடைய ஜாதகத்தை எழுதி பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் பல கிடைத்திடும்.
எந்தை ராம ஜாதகத்தில்
மேஷம் நின்ற சூரியனே புதனே
கடகம் நின்ற சந்திரனே குருவே
மகரம் நின்ற மங்களனே
மீனமதில் மகிழ்ந்திருந்த சுக்கிரனே
தனுஷ் மிதுனம் தமிலூர்ந்த பாம்புகளே
எளியவன் வணங்குகிறேன்
ஏற்றிடுவீர் தயையுடனே...

ஸ்ரீ ராம ஜெயம்! 

"ஸ்ரீ ராமர் ஜாதகத்தை பார்த்தல் புண்ணியம் !

ஸ்ரீ ராமர் ஜாதகத்தை வணங்குதல் புண்ணியத்திலும் புண்ணியம் !!  "

ராமன்,ராமர்,ஸ்ரீராமர்,ஸ்ரீராமன்,ஸ்ரீ ராமபிரான்,ராமாயணம்,கார்திக்,ஜோதிடம்,ஜாதகம்
ஸ்ரீராமர்

 ஹனுமான் ஜாதகம் - ஹனுமார் ஜாதகம்
அனுமார் ஜாதகம்
ஸ்ரீ அனுமன் ஜாதகம்



பரதன் ஜாதக பலன்கள்
ராமரை தெய்வமாக வணங்குகிறோம்.
ராமனைப்போல லட்சுமணனைப் போல பரதன் பெயரும் புகழும் பெற இயலாமல் போனது ஏன்?. இவனுக்கும் 5கிரகங்கள் உச்சம் நிலைதானே. அப்படியிருந்தும் ஏன் பெயரும் புகழும் பெற வில்லை?

10மிடம்தான பெயரும் புகழும் பெற்றுத்தரும் இடம்.
ராமனுக்கு 10மிடத்துக்கு சூரியன்,புதன்,சனி,செவ்வாய்,குரு,சந்திரன் ஆறு கிரகங்கள் பலன் அளிக்கின்றன. இதைப்போலவே லட்சுமணனுக்கும் ஆறு கிரகங்கள் 10க்கு பலன் அளிக்கின்றன. இரண்டு பேருக்கும் ஓரே ராசி ஒரே லக்னம்.  நட்சத்திரம் மட்டுமே வேறு வேறு . எனவேதான் இரண்டு பேருமே மிகவும் நட்புடனும் பாசத்துடனும் சேர்ந்தே இருந்தனர் கடைசிவரையும்.
ஆனால் பரதனுக்கு 10ல் ராகு,சனி,குரு,சந்திரன்,செவ்வாய் என ஐந்து கிரகங்கள். பரதனை போல துரதிருஸ்டசாலி யோகம் ராமன் லட்சுமணனுக்கு இல்லை.




ராமர் ஜாதகம்
ராமர் ஜாதகம்
பரதன் ஜாதகம்
பரதன் ஜாதகம்
தாய்க்குரிய ஸ்தான அதிபதி புதன் 6மிட அதிபதியுடன் சேர்ந்து எப்பொழுதும் பரதனுக்கு எதிரான காரியம் செய்பவளாகவே கைகேயி இருக்கிறாள. தன் பிள்ளையின் மனம் என்ன என்பதைக்கூட புரிந்து கொள்ளதவளாகவே இருந்து தசரதனிடம் வரம் கேட்கிறாள்.

9க்குரிய செவ்வாயும் அந்த 6க்குரியவனை பார்கிற காரணத்தினால் தந்தையும் பரதனின் மனம் அறியாது எதிரியாகவே இருப்பார்.. அந்த சூரியனே அரசு அலுவலர்களையும் மந்திரிகளையும் குறிக்கும். எனவே அரண்மனையில் உள்ள அமைச்சர்கள் உட்பட எந்த அலுவலர்களும் அவருக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். எதிரிகளாகவே இருப்பார்கள். ஏனென்றால் அந்த சூரியனே எதிரி ஸ்தானத்துக்கு அதிபதி.

மக்களைக் குறிக்கும் 9மிட அதிபதி செவ்வாய்கூட அந்த ஆறாம் அதிபதியை பார்க்கிற காரணத்தினால் மக்கள் கூட அவனுக்கு எதிராக இருந்தார்கள். அவனைப்பார்த்து காரி உமிழ்ந்தார்கள்.  அவன் தந்தை தசரதன் இறந்த விவரத்தைக்கூட அவனது உறவினர்கள் அவனுக்கு தெரியப்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவன் தனது தாய்மாமன் வீட்டில்தான் அப்போது இருந்தான். தற்செயலாக அரண்மனைக்கு திரும்பி வந்தபோது ஊரே சோகமயமாக காட்சியளிப்பதை கண்ட பின்னால்தான் அவனுக்கே தெரியும் தன் தந்தை இறந்து விட்டார் என்று .புதன்தான் சொந்தபந்த உறவினர்களைக் குறிக்கும். அது எதிரியான சூரியனுடன் சேர்ந்து இருக்கிறது.  இப்படி ஊரும் சொந்தமும் பந்தமும் சகோதரமும் அரசாங்க அலுவலர்களும் எதிரிகளாகத்தான் இருந்தார்கள் அவனது ஜாதகப்படி.  இத்தனைக்கும் பரதன் எந்த தீ்ங்கும் யாருக்கும் செய்யாமல் இருந்தும்.  கைகேயி வரம் கேட்டது பரதன் குற்றமா? ஆனாலும் எல்லோரும் பரதனை விரும்பவில்லை. எனவேதான் இராமனைப்போல அவனால் பேரும் புகழும் பெற முடியவில்லை.

பரதனுக்கு 11க்குரிய சனியே அவனுடைய அண்ணனைக்குறிக்கும். அந்த சனி 12க்கும் அதிபதியாக இருந்து 8ல் பலம்பெற்று இருந்த காரணத்தினாலும் அந்த 8மிடத்தில் இருக்கும் சனியை 6மிட அதிபதி பார்த்த காரணத்தினாலும் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும்  ராஜயோகம் என்ற விதிபிரகாரம் அரசாளும் யோகத்தை தந்தது. 12மிடம் துன்பத்தையும் துயரத்தையும் குறிக்கும் . 8மிடம் கடுமையான அவமானத்தை குறிக்கும் 6மிடம் தொந்தரவுகளைக் குறிக்கும். இத்தகைய துர் அதிர்ஷ்டங்கள் ஒன்று சேர்த்த சனிதான் பதவிக்கான யோகம் தரும் 10ம்மிடத்தையும் , அந்த 10மிட அதிபதி குருவையும் பார்வை செய்கிறது. எனவேதான் இத்தகைய துர்பாக்கிய அரசாளும் யோகம் அமைந்தது. அண்ணனின் பாத அணிகளை அரியணையில் அமர்த்திதான் அவர் அரசாண்டார். லக்னத்துக்குரியோன் குரு எனவே நீதி நேர்மை தவறாதவன் கடமை தவறாதவன். எனவேதான் ஊரே தூற்றினாலும் சொந்தபந்தமே வெறுத்தாலும்... தனது கடமைக்காக நாட்டைக்காக்கும் கடமைக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு நல்லாட்சியை தந்தான் பரதன். பரதனுக்கும் நல்ல பெயர் இருக்கத்தான் செய்தது. ஆனால் அது மறைமுகமாகவே இருந்தது. பலராலும் அறியப்படமல் பலருக்கும் அது பரவாமல் இருந்தது. ராமனின் அன்னையே சொல்லியிருக்கிறாள் நற்குணத்தில் “நீ பலகோடி ராமனுக்கு மேலானவன் ”என்று. அத்துனை நற்குணம் அவனுக்கு. ஆயினும் அந்த புகழெல்லாம் ஊரெல்லாம் சுனாமியாகப் பரவத்தான்னில்லை.

அயோத்தி மன்னன் பரதன் சிறு வரலாறு
ஒருவனை ஊர் உலகம் புரிந்துகொள்ள முடியாமல் போனால் அதனால்அப்படியொன்றும் பெரிய பாதிப்பு வந்து விடாது. ஆனால் அவனுடைய குடும்பத்தினர், உற்றார் கூட புரிந்து கொள்ள முடியாமல் போனால் அவனை விட துரதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் மிகவும் பரிதாபத்துக்குரிய கதாபாத்திரம்தான் பரதன். இராமாயண கதாபாத்திரங்களிலேயே மிக உயர்ந்த, ஆனால் இராமாயண கதாபாத்திரங்களினால் புரிந்து கொள்ளப் படாத கதாபாத்திரம் பரதனுடையது. பரதன் மிக உயர்ந்தவன் என்பதை நான் சொல்லவில்லை. கம்பரே சொல்கிறார்.

" ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ?" என்று.

பரதன் ராமனிடம், ""அண்ணா! நான் இந்தப் பதினான்கு ஆண்டும் அயோத்தியில் நுழைய மாட்டேன். தாங்கள் அணிந்துள்ள பாதுகையைத் தந்தருள்க. அவற்றை அயோத்தியின் எல்லையாகிய நந்தி கிராமத்தில் சிங்காசனத்தில் வைத்துப் பூஜை செய்வேன். நந்தி கிராமத்தில் இருந்தே நாட்டை ஆள்வேன். அதுவரை தாங்கள் பூண்ட தவக்கோலத்துடனே இருப்பேன்'' என்றான். ராமர், பரதனின் அன்பை எண்ணி உருகினார். மரவடிகளாலான தன் பாதுகைகளைத் தந்தார். அப் பாதுகைகளைப் பரதன் மணிமுடி போல் தலையில் சுமந்து சென்றான். தான் சொன்னபடியே ராம பாதுகைக்கு பட்டாபிஷேகம் செய்து தவ வாழ்வு வாழ்ந்தான் பரதன்.

     காலங்கள் ஓடின. மாயமான் மாரீசனைக் கண்டு சீதை ஆசைப்பட, ராமர் அதனைத் துரத்த, அந்த வேளையில் ராவணன் வந்து பிராட்டியைக் கடத்தினான். இறுதியில் ராவணாதியரை வென்று சீதையைச் சிறை மீட்ட ராமன், விபீஷணன் கொண்டு வந்த புஷ்பக விமானத்தில் ஏறி வானரப்படைகளுடன் அயோத்தி நோக்கி வந்தார். வழியில் பரத்வாஜ முனிவர், தம் ஆஸ்ரமத்தில் விருந்துண்டு செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தட்ட முடியாத ராமர், "பதினான்கு ஆண்டு முடியும் காலம் வந்துவிட்டதால் பரதன் தீக்குளித்துவிடக் கூடாது' என்று எண்ணி, அனுமனிடம் தன் மோதிரத்தை அடையாளமாகத் தந்து தனது வருகையை பரதனுக்கு உணர்த்துமாறு அனுப்பி வைத்தார்.

    பதினான்கு ஆண்டுகள் முடிந்தும் ராமர் வராததால் பரதன் தீ மூட்டி அதில் விழுவதற்கு, தம்பி சத்துருக்கனுடன் சுற்றி வந்தான். குலகுரு வசிஷ்டர் மற்றும் அமைச்சர்கள் தடுத்தும் கேட்காமல் பரதன் தீயை வலம் வரும் செய்தி கேட்டு கோசலை ஓடோடி வந்து பரதனிடம், ""என் மகனே பரதா! எண்ணற்ற கோடி ராமர்களாயினும் அண்ணல் உன் அருளுக்குச் சமமாவார்களோ? புண்ணியமே உருவான உன் உயிர் மாய்ந்தால் மண்ணுலகும், விண்ணுலகும், மக்களும் வாழ்வார்களா?' என்று கூறித் தடுக்க முயன்றாள். இதைக் கோசலை கூறியதாகக் கம்பர்,

""எண்ணில் கோடி இராமர்கள் ஆயினும்

அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ...''

என்று அழகுறப் பாடியுள்ளார்.

அந்நேரம் "ஐயன் வந்தனன்' என்று அனுமன் சொல்லிக் கொண்டே வந்து, தன் கைகளால் தீயை அணைத்தான். ராமர் அயோத்தி வந்தார். அனைவரும் மனம் மகிழ்ந்தனர். அண்ணல் ராமருக்கு வசிஷ்டர் முடி சூட்டினார்.

பரதனுக்கு நாடு கிடைத்தும் அண்ணன் மீதுள்ள அன்பால், ராம பக்தியால் அவனைத் தேடிக் காட்டிற்கு வந்தான். அதனால் "ஆயிரம் ராமர்களைவிட உயர்ந்தவன்' என்று குகனால் பாராட்டப்பட்டான்.

ராமரின் வரவு தாமதித்ததால் மரணமடையவும் துணிந்தான். அதனால் "எண்ணற்ற கோடி ராமர்களும் ஒரு பரதனுக்கு ஈடாக மாட்டார்கள்' என்று ராமனைப் பெற்ற தாய் கோசலையே கூறினாள். ராம பக்தியுடையவன் யாராக இருந்தாலும் அவன் ராமரையும் விட உயர்ந்த நிலைமையடைவான் என்பதற்குப் பரதனின் பக்தி வாழ்க்கையே சான்றாகும்.

ராமர் அவதரித்த புனிதமான நாளான ராம நவமியன்று ராமரின் திருவடிகளைத் தொழுது, பரதனைப் போல் உயர்வடைவோமாக!



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற