menu

Sunday, 26 July 2015

ஜாதகம் - நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு மரணம் ஏற்படக் காரணம் என்ன?

ஆயள்காரகன் பலம் இருந்தும் மரணம் நேரக் காரணம் என்ன?
தெலுங்கு நடிகை அகர்வால் ஜாதகம்
 Astrology vijayawada
 பிற‌ப்பு முத‌ல் இற‌ப்பு வரை எல்லாமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான். அதுபோலத்தான் அகால மரணமும். காக்கையர் நாடி போன்ற பழைய நூல்களில் வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறப்பான், தன்னைத்தானே மாய்த்துக் கொள்வான், விஷத்தால் இறப்பான், தீயால் இறப்பான் என்பது போன்ற கொடூர மரணங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. சிரசு எடுக்கப்பட்டு மரணமடைவான் என்பது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. இந்த லக்னத்தில், இந்த ராசியில், இந்த திதியில் பிறந்தவன் இந்த லக்னத்தில், இந்த திதியில் மாலைப் பொழுதில் இந்த நொடிப் பொழுதில் இறப்பான் என்றும் கூறப்பட்டுள்ளது.  ஜாதகத்தில் எடுத்துக் கொண்டால் ஆயுள் பாவம் என்று ஒன்று உள்ளது. 8வது இடம்தான் ஆயுள் பாவம். அதாவது ஜென்ம லக்னத்தில் இருந்து 8வது இடம் ஆயுள் பாவம். பொதுவாக ஆயுளுக்குரிய கிரகமாக சனி அதாவது ஆயுள் காரகன். ஆயுள் ஸ்தானத்திற்குரிய கிரகமோ அல்லது சனியோ வலுவாக இருந்தால் தீர்க்காயுசு யோகம் என்கிறோம்.8வது வீட்டிற்குரியவனும் கெட்டு, சனியும் கெட்டிருந்தால் குறையாயுள் யோகம். துர்மரணம் ஏற்படும். இனி ஆர்த்தி அகர்வால் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்வோம்.
ஆயுள் பலத்துக்குரிய சிறம்பம்சங்கள்
1.) 8க்குரியோனே ஆயுள்காரகன் சனியாக அமைந்திருப்பது
2.) அந்த 8க்குரியோன் உச்சம் பெற்றது மேலும் சிறப்பே

ஆயுள் பலத்துக்கு பாதகமான அம்சங்கள்
1.)  உச்சனை உச்சன் பார்த்தால் நீச யோகம் ஏற்படும்.  இங்கு உச்சம்பெற்ற  8க்கான சனியை உச்சம் பெற்ற சூரியன் பார்வை செய்கிறது. இது ஆயுள்பலத்தை குறைக்கிறதென்றால் அந்த சூரியனுடன் சேர்ந்திருக்கும் செவ்வாயே அந்த வீட்டின் அதிபதியாகவும் இருப்பதால் இன்னும் சூரியன் மிகவும் வீரிய பலம் பெருகிறான். அத்தகைய வீரிய பலத்தினால் மேலும் சனியின் பலம் குறைந்து போகிறது.  ஆக 8மிடம் வெகுவாக பலம் குறைந்து விட்டது.

 லக்ன பலம்  லக்னாதிபதி விரயத்தில் இருக்கிறது ஆக லக்னபலம் குறைந்துவிட்டது் அப்புறம் விரயாதிபதியே லக்னத்தில் இருக்கிறது இது இன்னும் அதிகப்படியாகவே லக்னபலத்தை குறைக்கும். இதனால் மேலும் லக்ன பலம் குறைந்து மிகவும் வீக்காக போய்விட்டது.

பூர்வ ஜென்ம புண்ணிய பலம்   அந்த பூர்வஜென்ம புண்ணிய ஸ்தானத்தில்தான் உச்சனை உச்சன் பார்த்து நீச யோகம் ஏற்பட்டு இருந்து பலத்தை குறைத்து இருக்கிறது. போதாக்குறைக்கு அந்த வீட்டின் அதிபதி சுக்கரன் இருக்கும் வீட்டின் அதிபதியும் விரய ஸ்தானத்தில்தான் இருக்கிறது. அதனால் பூர்வ ஜென்ம புண்ணிய ஸ்தானமும் பலம் குறைந்தே உள்ளது. 8ல் இருக்கும் சந்திரனே ஆயுளுக்கு கொஞசம் பலனை தருகிறது.

நோய் ஸ்தானம் அறிதல்: 6மிடத்திலே குரு இருக்கின்றது. இவரே இதயத் தசைகளுக்கும் மாரடைப்புக்கும் காரணகர்த்தா. இவரே நோய் ஸ்தானத்தில் இருந்து நோயை உருவாக்குகிறார். இதனால் இந்த ஜாதகர் பொட்டாசியம் அதிகமிருக்கும் உணவுகளையும் கொழுப்பு சத்து மிகுந்த உணவுப்பொருட்களையும் உண்ண நேரிடும்.  இதன்காரணமாகவே உடல் பெருக்கின்றது. அந்த வீட்டின் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று உள்ளதுடன் உச்சம்பறெ்ற சூரியனுடன் சேர்க்கை பெற்றும் உள்ளது அதனால் அவர் கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களையும் காரம் சார்ந்த உணவுப் பொருட்களையும் உண்டிருப்பார். இதனால் அது மேலும் நோயை அதிகரிக்கும் நிலையையே ரத்தஅணுக்களில் உருவாக்கும். இது இந்தவகையான ஜாகத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. அப்புறம் அந்த குருவை புதன் பார்க்கிறார். அந்த புதன் சுவாசத்துக்கு காரணமான நுரையீரலையும் உடலிலுள்ள தோல் மற்றும் நரம்புகளையும் குறிக்கும். மூச்சு திணறல் என்பது நுரையீரல் சார்ந்த நோய் ஆகும். ஆக அவரும் நோய் ஸ்தானத்தை பார்பதால் புதனுக்குரிய நோய்களையும் உருவாக்குவார். அவரே லக்னத்துக்கு அதிபதியும் கூ்ட எனவே ஜாதகரே அந்த நோய் தீவிரமாகவும் காரணமாகிடுவார் என்றாகிறது.  அந்த லக்னத்திலேயே புத்திசாலிதனத்துக்குரிய சுக்ரன் அமைய சுக்ரனும் புதனும் பரிவர்த்தனை செய்கிறது. ஆக புத்திசாலிதனமும் நோய் அதிகமாகும் காரியங்களிலே ஈடுபடும் என்று தெரிகிறது. இனி ஆர்த்தி அகர்வால் வரலாறு எப்படி இவைகளுடன் பொருந்துகிறது என்று பாருங்கள்.


ஆர்த்தி அகர்வால் வரலாறு
‘பம்பரக்கண்ணாலே’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தவர் ஆர்த்தி அகர்வால். இவர் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது 14-வது வயதில் இந்தி நடிகர் சுனில் ஷெட்டி அவரை பார்த்து அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நடந்த ஒரு நட்சத்திர விழாவில் நடனம் ஆடும்படி அழைத்தார். அந்த விழாவில் அவரது நடனம் இந்தி பட உலகினரின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சுனில் ஷெட்டி அவரது தந்தையிடம் இந்தி படங்களில் நடிக்க ஆர்த்தி அகர்வாலை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். 2000-ம் ஆண்டில் அவர் தனது 16-வது வயதில் ‘பாகல்பன்’ என்ற இந்தி படத்தில் முதலாவதாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 2001-ம் ஆண்டில் ‘நூவு நாகு நச்சாவ்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஆர்த்தி அகர்வால் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து ‘வசந்தம்’, ‘அந்தால ராமுடு’, ‘அடவி ராமுடு’, ‘இந்திரா’, உள்பட 25 தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். அவரது படங்கள் அனைத்தும் அங்கு தொடர்ந்து வெற்றிபெற்றன. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ்பாபு, ரவிதேஜா, தருண், ராஜசேகர் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். ‘ரணம்-2’ என்ற தெலுங்கு படத்தில் 2005-ம் ஆண்டு கடைசியாக நடித்தார்.2005-ம் ஆண்டு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் கோமா நிலைக்கு சென்று சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார். அதற்கு பின்னர் அவர், திரையுலகை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார். 2007-ம் ஆண்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் உஜ்வால் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அழகு, பணம், திறமை எல்லாம் இருந்தும் சிலருக்கு நிம்மதி மட்டும் இருக்காது. அதுவும் நடிகையின் வாழ்க்கை, புகழ் எனும் போதையில் சூழ்ந்தது. பரபரப்பான வாழ்க்கை முறை, ஷூட்டிங், ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் பாராட்டு என்று லைம்லைட்டில் இருந்துவிட்டு சும்மா இருக்க நேர்ந்தால் அது பெரும் அவஸ்தையாக இருக்கும். ஆடிய காலும் பாடிய வாயும் ஓயாது என்று ஒரு சொலவடை உண்டு. திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதால் கணவரைப் பிரிந்தார் ஆர்த்தி. அடுத்து? சினிமா வாய்ப்புகளைத் தேடி ஹைதராபாத்துக்குத் திரும்பினார்.

முதல்முறை ஹைதராபாத்துக்கு வந்தபோது கிடைத்த வரவேற்புக்கும் இப்போது அதேபோல அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியபோது நடந்துகொண்ட விதத்துக்கும் பெரும் வித்தியாசம் தென்பட்டது. இந்தமுறை யாரும் அவரைச் சீந்தவில்லை. காரணம் ஏற்கனவே பூசிய உடம்பாக இருக்கும் ஆர்த்திக்கு சில வருடங்களில் உடல் எடை அதிகரித்துவிட்டதுடன் வயதும் கூடிவிட்டதால் ஹீரோயினாக யாரும் அவரைக் கருதவில்லை. ஆர்த்தி முயற்சி செய்து பார்த்தார். தன்னுடைய உடல் எடையைக் குறைக்க டயட்டிங் போன்ற விஷயங்களில் தீவிரமானார். மீண்டும் திரையில் தோன்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் அவரால் பழைய அழகை மீட்டுக்கொண்டு வரமுடியவில்லை. என்ன முயன்றும் பலன் பெரிதாக இல்லை. உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக சில திரைத்துறை நண்பர்கள் கூறவே அதை நம்பி மேலும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்க்கத் தொடங்கினார்.  ஒரு பெரிய திட்டத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு அட்லாண்டிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் லிப்போசக்‌ஷன் எனும் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். அவர் கால்களில், இடுப்புப் பகுதிகளில் கைகளில் உள்ள தேவையற்ற கொழுப்பை உறிஞ்சி எடுக்கும்படியான லிப்போசக்‌ஷன் எனும் கொழுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஆனால் அதன் பின் சில மாதங்களில் மீண்டும் உடல் எடை அதிகரிக்கவே மீண்டும் அதே அறுவைச் சிகிச்சைக்குத் தன் உடலை உட்படுத்தினார். கடைசியாக நான்காவது முறை செய்ததன் காரணமாகவே, கடந்த சில நாள்களாக மூச்சுத்திணறலால் அடிக்கடி அவதிப்பட்டார். இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சை பெறுவதற்காக அதே மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  லிப்போசக்‌ஷன் செய்யும் போது கொழுப்பு குமிழ் போன்று ஏற்பட்டு இதயத்தில் சென்று அடைத்துவிட, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோக நேர்ந்துள்ளது. உடல் மெலிந்திருந்தால் தான் அழகு என்ற இலக்கணத்தை திரைப்படதுறையினர் நம்புவதால் வந்த வினை இது.   பட அதிபர்களும், மீடியாவும் ஆர்த்தியின் உருவத்தைப் பற்றிய கிண்டலை செய்யாமல் இருந்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஒல்லி இடுப்பு தான் அழகென்று நம்பும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.


ஆர்த்தி அகர்வால்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற