menu

Saturday, 4 July 2015

விஞ்ஞானம் வேகமாக வளர்கின்றபோது இனி வருங்காலத்தில் ஜோதிடக்கலை தாக்குப்பிடிக்குமா அல்லது அழியுமா?

விஞ்ஞானம் வேகமாக வளர்கின்றபோது இனி வருங்காலத்தில் ஜோதிடக்கலை தாக்குப்பிடிக்குமா அல்லது அழியுமா?
          ஜோதிடக் கலை ஒரு போதும் அழியாது. அது வெகுவாக முன்னேறியிருக்கும். முற்காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாது. அதனால் பழைய கணக்கு முறைப்படியே ஜோதிடக்கலை பயன்பாட்டில் இருந்தது. இப்பொழுது கம்ப்யூட்டர்யுகம். பழைய ஜோதிடக் கலையில் மூன்று பரிமாண (x,y,t)(அச்ச ரேகை , தீர்க்க ரேகை, கால அளவு) முறையே இருந்தது. இந்த மூன்று பரிமாண முறையே அவ்வளவு எளிதாக இல்லை என்பது வேறு விஷயம். கணினி வந்ததால் இப்பொழுது அந்த முறை சுலபமாகிவிட்டது. இனி வருங்காலத்தில் ஒன்பது பரிமாண முறையில் ஜோதிடம் வியக்கதக்க அளவில் முன்னேறும். ஈ, எறும்பு என பூச்சிகளுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் என அனைத்து உயிரினங்களுக்கும், மரம் செடிகொடிக்கூட அடுத்து என்ன நடக்கும் என்று பலன் சொல்லும் காலம் வெகு விரைவில் வரும். நாளைக்கு இந்த மரத்தில் இத்தனை கிளை முளைக்கும். இந்த இந்த திசையில் இன்னன்ன டிகிரி அளவில் அது முளைக்கும். இத்தனை இலை முளைக்கும். அதன் அகலம் நாளை எவ்வளவு இருக்கும். அதன் சுற்றளவு எவ்வளவு இருக்கும். அதன் தடிமன் எவ்வளவு இருக்கும். அதில் எந்தந்த இலைகள் உதிரும், அல்லது எந்தந்த இலையில் நோய் பிடிக்கும். என்னன்ன நோய் பிடிக்கும் என நுணுக்கமாக சொல்லும் அளவுக்கு ஜோதிடம் முன்னேறியிருக்கும். இப்பொழுதும்கூட சிலர் ஜோதிட விஞ்ஞானத்தில் வியக்கத்தக்க முன்னேற்றங்களை கண்டறிந்து இருப்பார்கள். ஆனால் அதை வெளியே சொல்லாமல் உயிர் பாதுகாப்பு  கருதி அதை ரகசியமாக வைத்திருப்பார்கள். இந்தப் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தே இப்படி இருந்து வருகிறது. தாங்கள் கண்டறிந்த உண்மைகளை ஜோதிடர்களும் விஞ்ஙானிகளும் அவ்வளவு எளிதாக வெளியிலே சொல்லிவிட மாட்டார்கள். அல்லது ரகசிய குறிப்புகளாக சொல்லி வைப்பார்கள். நாஸ்டர்டாம்ஸ்கூட எத்தனையோ ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருந்ததும் அவர் இறந்த பின்பு அதை நாம் அறிந்ததும் அனைவருக்கும் தெரிந்த உண்மையே. நாடகக் கலை அழிந்து சினிமா வளர்ந்தது. இப்பொழுது சினிமாவிற்கு கடுமையான போட்டியாக டிவி இருக்குிறது. ஆனால் ஜோதிடத்திற்கு போட்டியாக எதுவுமே இருக்காது.அதனால விஞ்ஞானம் எவ்வளவுகெவ்வளவு வளர்கிறதோ அதைவிட ஒருபடி மேலேயே ஜோதிடக்கலை வளரும். என்றுமே அதற்கு அழிவில்லை!.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற