menu

Wednesday, 29 July 2015

அப்துல் கலாம்- முன்னால் ஜனாதிபதி - ஜோதிட ஆராய்ச்சி - ஜாதகம்

முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஜாதகம் மற்றும் அதற்கான பலன்கள்:

abdul kalam

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் - இவர் முன்னால் குடியரசு தலைவர் -
தமி்ழ் நாடு - ராமேஸ்வரம் எனற் ஊரில் பிறந்தார்.  லக்னத்தில் குருவும் அந்த லக்னாதிபதி 5ம் வீடான சந்திரனில் இருந்த காரணத்தினால் அழகாகவும், அற்புத ஆற்றல்களுடனும் பிறந்தார். பழகுபவர்களிடம் நேசம், நட்பு, குழந்தைகளிடம், இளைஞர்களிடம் ஒரு அதீதப் பிடிப்பு, அன்பு, வாஞ்சை, சீரிய கடமை உணர்வு, குரு பக்தி, பொறுப்புணர்வு, உழைப்பு, நேர்மை என பல நற்குணகளையும் லக்னத்தில் இருக்கும் குரு அவருக்கு தந்தது. கஷ்டப்படுபவர்களைக் கண்டால் இளகும் மனம் லக்னாதிபதி சந்திரன் அவருக்கு தந்தது. குருவே சாஸ்திரங்களுக்கு உரியோன். எனவே அவர் இந்து ,முஸ்லீம்,  கிருத்துவ மதங்களின் நூல்களான குர்ரான், பகவத்கீதை, பைபிள் ஆகியன படித்து அறிந்திருந்தார். 2க்குரிய சூரியன் 3க்குரிய ஆட்சி பெற்ற புதனுடன் சேர்ந்து இருந்ததனால் நன்கு படிப்பறிவும் விவேக அறிவும் சீரிய சிந்தனையும் பெற்று இருந்தார். நுண்கணித அறிவிலும் மேம்பட்டிருக்க இந்த அமைப்பு அவருக்கு துணை செய்தது. அத்துடன் ராகு பார்வையும் பெற்று இருந்த காரணத்தினால் எதையும் நுணுகி ஆராயும் வல்லமையை அவருக்கு தந்தது. புத்திசாலிதனத்துக்குரிய 5மிடத்து அதிபதி 4ல் ஆட்சி பெற்ற சுக்ரனுடன் சேர்ந்த காரணத்தினாலும் , லக்னாதிபதி சந்திரனே 5ல் அமர்ந்த காரணத்தினாலும் லக்னத்தில் இருக்கும் குருவே அந்த 5மிடத்தை பார்க்கிற காரணத்தினாலும் அவரது புத்திசாலிதனம் மிகவும் அபாரமாக இருந்தது. 3மிடத்தில் புதன் சூரியன் கேது சேர்க்கை, அதற்கு சனியின் பார்வை , குரு பார்வை பெற்ற ராகுவின் பார்வை என மிகவும் வலுவாக இருக்கின்ற காரணத்தினால் அவரது ஆராய்ச்சியில் வெல்லும் வல்லமையை அபாராமாக தந்தது இவ்வமைப்புக்கள். இதனால்தான் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், (ISRO) ஆகியவற்றில் விண்வெளி பொறியாளராக வேலை செய்தார். இந்திய ஏவுகணை நாயகன் என்று பலராலும் புகழப்பட்டார். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் பேராதரவுடன் இந்திய குடியரசு தலைவர் ஆனார். இவர் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருது பெற்று இருக்கிறார். 10மிடத்துக்குரியோன் செவ்வாய் ஆட்சிபெற்ற சுக்ரனுடன் சேர்ந்த காரணத்தினாலும், அந்த 10மிடத்தையே பார்க்கின்ற காரணத்தாலும் அவர் பெயரும் புகழும் நிரம்பப் பெற்றார்.
abdul kalam

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற