menu

Saturday, 27 June 2015

பழமொழி! - ஜோதிடம்!

karthik jothidam
கார்திக் ஜோதிடம்
அவிட்டம் - தவிட்டுப்பானையிலே பணம்.
அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி.
பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்.
பத்தில் குரு பதவிக்கு இடர்.
பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்.
பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே.
கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்.
குரு பார்க்க கோடி நன்மை.
கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்.
குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?
குரு நின்ற இடம் பாழ்.
மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்.
மறைந்த புதன் நிறைந்த கல்வி.
மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்.
நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை.
ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு.
ராசி இருக்கு தாசில் பண்ண! அம்சம் இருக்கு கழுதை மேய்க்க!
சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது.
சனி பார்த்த இடம் பாழ்.
சனி நீராடு.
எட்டில் சனி நீண்ட ஆயுள்.
சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை;அவரைப் போன்று கொடுப்பாரும்
இல்லை.
சனி பார்க்கும் இடம் பாழ்.
சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்.
சுவாதி சுக்ரன் ஓயா மழை.
சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
சித்திரை அப்பன் தெருவிலே.
துலா கேது தொல்லை தீர்க்கும்.
வைத்தியன் கையை பிடிப்பான் ஜோதிடன் காலை பிடிப்பான்.
விதி போகும் வழியே மதி போகும்.
விழுப்பு இருக்குமிடத்தில் வேப்பிலைக்காரி தங்க மாட்டாள்.



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற